Advertisement

இப்படியும் நடக்குமா? வலைத்தளத்தில் படித்த ஒரு நிமிட கதை

உறவு முறைகளின் மாற்றம்

காலையில் இருந்தே, எங்கள் வீடு விழாக்கோலம்  பூண்டிருந்தது. என் மாமியாரின்  முகத்தில் தெரிந்த பிரகாசம், சமையல் அறையில் இருந்து வந்த பலகாரங்களின் வாசனை,  இரண்டுக்குமே காரணகாரியம்  ஒன்றேதான்!  என் மாமியின்  சினேகிதி, இன்று மதிய உணவுக்கு எங்கள் வீட்டிற்கு வருகிறார்கள். வீடு முழுவதுமே  சுத்தப்படுத்தப்பட்டு இருந்தது.    

நேற்று மாலை நாங்கள் பேசிக்கொண்டு இருக்கும் போதே, மாமியார் என்னுடைய சினேகிதி நாளை வருகிறாள் என்று கூறினார்கள். எனவே, நாங்கள் பரிசு வாங்குவதற்காக கடைத்தெருவுக்குச் சென்றோம். என் மாமியார் அவருடைய சினேகிதிக்காக ஒரு அழகான, விலை அதிகமான புடவை ஒன்றை வாங்கினார்கள்.    

இன்று என் மாமியாரின் நிலைமை அடுத்த மட்டத்தை  அடைந்தது போல தெரிந்தது. அவர்கள் காலையில் சீக்கிரமே எழுந்துவிட்டார்கள்; மிகவும் உற்சாகத்தோடு இருந்தார்கள்; எனக்கு முன்பாகவே சமையல்  அறைக்குள் சென்றார்கள்;  அவர்கள் ஏற்கனவே குறித்து வைத்திருந்த மதிய உணவுக்கான பதார்த்தங்கள் ஒவ்வொன்றையும் அன்போடு தயார் செய்ய ஆரம்பித்தார்கள்.    

உண்மையாகவே பார்ப்பதற்கு அவர்கள் மகிழ்ச்சியாகவே இருந்தார்கள். ஆனால், நானோ முகத்தில் போலியான புன்முறுவலோடும், பாரமான இதயத்துடனும் அவர்களுக்கு  உதவி செய்து கொண்டு இருந்தேன்.       இன்று என் அம்மாவின் பிறந்த நாள். எனது திருமணத்திற்குப் பிறகு வரும் முதல் பிறந்த நாள். ஆனால் இன்று அவளுடன்  ஒருவருமே இல்லை. நான் இங்கே, அப்பாவோ ஆபீஸ் டூரில், என் சகோதரனோ ஏற்கனவே வெளி நாட்டில் இருக்கிறான்.  

நேற்று, நான் என் மனதைத் திடப்படுத்திக்கொண்டு, என் அம்மாவின் வீட்டிற்கு  செல்ல வேண்டும் என தீர்மானம் செய்தேன். இதைப்பற்றி  என் மாமியாரிடம் சொல்வதற்கு முன்பாகவே அவர்கள் தன் சினேகிதி வரும் இந்த திட்டத்தைப்பற்றி கூறிவிட்டார்கள். மதிய உணவுக்குப் பிறகு, மாலையில் நாம் அனைவரும் ஃபன் சிட்டிக்கு போக வேண்டும் என்றும் சொல்லி விட்டார்கள். இனிமேல் நான் என்ன சொல்ல முடியும்? நான் அமைதியாக என் வேலையைத் தொடர்ந்தேன்.    வீட்டை அலங்கரித்துக் கொண்டு, என்னையும் தயார் செய்தேன். எந்தவித உற்சாகமும் இல்லாமல் எல்லாவற்றையும் செய்தேன். இந்த நேரத்தில் வாசல் மணி ஒலித்தது. மாமியார், தன் சினேகிதியை வரவேற்கும்படி என்னை அனுப்பினார்கள்.    

நான் கதவைத் திறந்தேன். பெரிய மலர் கொத்தின் பின்னால், முகம்  மறைந்திருந்ததால் என்னால் பார்க்க முடியவில்லை. பிறகு, தெரிய ஆரம்பித்தவுடன்,   ஆச்சரியத்தாலும்,  மகிழ்ச்சியாலும் என் கண்கள் விரிந்தன. பேச முடியாமல் வாயடைத்து நின்றேன்!    அங்கே, என் முன்னால் நின்று கொண்டு இருந்தது, என் அம்மாதான்!  அம்மா மலர்க் கொத்தை என் கையில் கொடுத்து விட்டு, “ஆச்சரியமாக இருக்கிறதா?” என்றாள்.  

என் அம்மாவைப் பார்த்து ஆச்சரியமும், மகிழ்ச்சியும் அடைந்து, அதே இடத்தில்  திகைப்புடன் நின்று கொண்டிருந்தேன். “என் சினேகிதிக்கு நீ பிறந்தநாள் வாழ்த்துக் கூறவில்லையா?” என்று எனக்குப் பின்னால் நின்ற என் மாமியார் கூறினார்கள்.    “அம்மாவா உங்கள் சினேகிதி?” நான் ஆச்சரியத்தோடு கேட்டேன்.   “நான் பொய் கூறவில்லையே! நாங்கள்  சினேகிதிகளாக இருக்க முடியாது என்று யார் கூறினார்கள்?” என்று மாமியார் கேட்டார்கள்.  “நிச்சயமாக, எங்களால் முடியும்! யார் தன்னுடைய மருமகளை தன் மகளாக பாவித்து நடத்துகிறார்களோ,   அவர்களால் மட்டுமே இது முடியும்”. இதைக் கூறிக் கொண்டே என் அம்மா, என் மாமியாரைக் கட்டிப்பிடித்துக் கொண்டாள்.    

நான், மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். என்னால், ஒரு வார்த்தை கூட பேச முடியவில்லை. என் கண்களில் இருந்து, கண்ணீர் வழிந்துகொண்டே இருந்தது.    நான் என் மாமியாரின் கைகளை எடுத்து, என் கைகளோடு இணைத்துக் கொண்டு, என் கண்கள் அருகே கொண்டு சென்றேன். உள்ளங்கையில் முத்தமிட்டு அவர்களை ஆரத் தழுவிக்கொண்டேன். என் அம்மா புன்சிரிப்போடும் ஈரமான கண்களோடும் எங்களைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

 உறவுகளோடு மிகவும் அன்போடு விழாவைக் கொண்டாடுவதைப் பற்றி – ஒரு புறம் என் அம்மா எனக்கு உறவுகளின்  முக்கியத்துவத்தைப் பற்றி  கற்றுக் கொடுத்தாள். மறுபுறம் என் மாமியாரோ, இதய பூர்வமாக உறவுகளைப்  பராமரிப்பது எப்படி என்பதை எனக்குக் கற்றுக் கொடுத்தார்கள். இருவருமே புன்சிரிப்போடு என்னைப் பார்த்தார்கள். நான் அவர்கள் இருவருக்கும் நடுவில் நின்றுகொண்டு, என்னுடைய நல்ல அதிர்ஷ்டத்தால்  மிகவும் பெருமையோடு நிரம்பி இருந்தேன். கண்ணீர் நிறைந்த கண்களோடும், புன்னகை நிறைந்த முகத்தோடும் இருந்தேன்.

உறவுகளை எப்படி பேணிக்காப்பது என்பது ஒரு கலை அதனை சிறப்பாக நிர்வகித்து விட்டால் மகிழ்ச்சி எப்போதும் நம்மிடமிருந்து ஒதுங்குவதில்லை.

வெற்றி உங்கள் வசப்படும் 

ஒரு செயலை செய்யும் பொழுது அது வெற்றிகரமாக முடியவில்லை என்றால் அதற்குப் பெயர் தோல்வி என்று பொருள் கிடையாது. ஒருமுறை முயற்சி செய்தோம் அந்த முயற்சியில் நாம் வெற்றிபெறவில்லை என்று மட்டுமே பொருள். ஒரு முறை முயற்சி செய்து வெற்றி கிடைக்கவில்லை என்றால் மறுமுறை முயற்சி செய்யவேண்டும்.

மறுபடியும் முயற்சி செய்து வெற்றி கிடைக்கவில்லை என்றால் அடுத்த அடுத்த முறைகள் வெற்றி கிடைக்கும் வரை முயற்சி செய்யவேண்டும்  அவ்வாறு ஒரு முறைக்கு மேல் அடுத்தடுத்த முறைகள் நாம் முயற்சி செய்யும் பொழுது முதல் முயற்சியில் ஏன் நமக்கு வெற்றி கிடைக்கவில்லை என்று சிந்திக்க வேண்டும்.

முதல் முறை நாம் செய்த தவறு அதிலிருந்த குறைகள் போன்றவையே அந்த வெற்றி நம்மை அடைவிடாமல் செய்துவிட்டது என்பதை புரிந்துகொண்டு அந்த காரணத்தை அடுத்த முறை முயற்சி செய்கின்றபொழுது  தவிர்க்கவேண்டும். அப்பொழுதும் வேறு ஒரு தவறால் வேறு ஒரு காரணத்தால் அது வெற்றி அடையவில்லை என்றால் அதையும் சரி செய்து நாம் மீண்டும் வெற்றிபெற முயற்சி செய்யவேண்டும். இவ்வாறு நாம் வெற்றி அடைகின்ற வரை செய்கின்ற தவறுகளையும் அதை அடையவிடாமல் செய்யும் காரணத்தையும் சரி செய்து சரி செய்து மீண்டும் மீண்டும் முயற்சி செய்கின்ற பொழுது நிச்சயம் ஒருமுறை அந்த முயற்சி வெற்றியை அடைந்தே தீரும்.

மின்சாரம், பெட்ரோல், டோல்கேட், இன்சூரன்ஸ் பிரிமியம், தொலைபேசி உள்ளிட்ட கட்டணங்களை உயர்த்துவது அரசா? ஆணையமா?https://theconsumerpark.com/electricity-mobile-tollgate-insurance-charges

பூங்கா இதழ்
பூங்கா இதழ்https://thenewspark.in
பூங்கா இதழின் படைப்பு

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Google search engine

Latest Articles