புரியாத வயசு… … அறியாத நண்பர்கள்… … ஆபத்தை ஏற்படுத்தும் ஈர்ப்பு… … மாணவிகளே உஷார்! இதை படிக்கும் ஒவ்வொருவரும் வளர் பருவ பெண்களை காப்பாற்றுங்கள். இந்த கட்டுரையை அனைவருக்கும் அனுப்புங்கள்!

இந்த காலகட்டத்தில் உள்ளவர்களுக்கு புரியாத வயதாக உள்ள நிலையில் எதையும் அடையாளம் காணும் திறனை பெறுவதற்கு குழப்பமாக உள்ள மனநிலை (confused state of mind) நீடிக்கிறது. இந்தப் புரியாத வயதில் சமூக வலைத்தளங்களில் அறியாத நண்பர்களிடம் நட்பை ஏற்படுத்திக் கொள்ளும் மாணவிகளுக்கு   எமனாக இருக்கக்கூடிய மோகம் (காதல் அல்ல) அவர்களை மோசமான பாதைக்கு அழைத்துச் செல்வதோடு அவர்களின் வாழ்க்கையை சீரழித்து விடுகிறது. வளர் பருவ வயதில் உள்ள மாணவிகளை சீரழிக்க மோசமான மனிதர்களும் (individuals) குற்றவாளி  குழுக்களும் (criminal gangs) வேகமாக இயங்கிக் கொண்டிருக்கின்றன என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.