செய்திச்சோலை
நாட்டு நடப்பு
தொழில்/ அறிவியல்
பக்கம்
பூங்கா
களம்
தொலைநோக்கு
சமீபத்திய கட்டுரைகள்
தந்தைக்கும் மகளுக்கும் இடையேயான உறவை படம் பிடித்து காட்டும் மனதை தொடும் எழுத்து ஆடல்
அவள் பேசும் அந்த மழலை மொழியை கேட்க ஓடோடி வரும் அப்பா தன் மனைவி அம்மா இருவரையும் மறந்து தன் குழந்தை கூறும் சொல்லுக்காக ஏங்கித் தவிப்பான். அப்பாவின் பாசமும் விண்ணை முட்டும் அளவிற்கு இருக்க அந்தப் பெண்ணின் வாழ்க்கையில் முதல் முதலில் பார்க்கும் உன்னதமான மாசற்ற அன்பு உடைய ஆணாக தந்தை தவிர வேறு யாரு இருக்க முடியும் என்று அப்பொழுது அவளுக்கு தெரியாது.
நயன்தாரா பக்கம் நியாயமா? தனுஷ் பக்கம் நியாயமா? வருகிறதா உலகப் போர்? உள்ளிட்ட கருத்து மூட்டையுடன் வாக்காளர் சாமி.
அணு ஆயுதம் இல்லாத நாட்டின் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்தக்கூடாது என்று சர்வதேச சட்டம் உள்ள நிலையில் ரஷ்ய அதிபரின் அறிவிப்பு ஐரோப்பிய நாடுகளில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. பல ஐரோப்பிய நாடுகள் உலகப் போர் ஏற்பட்டால் மக்கள் எவ்வாறு தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்? என்ற அறிக்கைகளை மக்களுக்கு வழங்கத் தொடங்கிவிட்டன
விவசாயத்தை புறக்கணித்தால் உணவு கிடைக்குமா? உணவு அவசியம் என கருதும் ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய கட்டுரை
தமிழக பாசன வரலாறு கூற்றின்படி தமிழகத்தில் 39,202 ஏரிகள் இருந்துள்ளன. தற்போது, உண்மையில் ஏரிகளாக இப்போது இருப்பவை எத்தனையென்று உறுதியாகக் கூற முடியாது. இருக்கும் ஏரிகளின் கொள்ளளவும் குறைந்து கொண்டே வருகிறது. காணாமல் போன ஏரிகளால் பாசனம் பெற்று நடைபெற்ற விவசாயம் என்னவாயிற்று என்பது கேள்விக்குறி. விவசாயி ஆண்டாண்டு காலமாக, பல தலைமுறைகளாக விவசாயத்தை விட்டுவிடாமலிருப்பதற்கான காரணம் என்ன? அது லாபகரமான தொழில் என்பதற்காகவா? என்ற கேள்விக்கு பதில் இல்லை என்பது நிதர்சனமான உண்மை.
ஆண்களே, இந்த எட்டு வகையான பெண்களைத் தவிர்க்கவும் – வலைத்தளத்தில் படித்தது – எழுதியது யாரோ?
உங்கள் குணநலன்களால் பெண்களின் குண நலன்கள் மேற்கண்ட வகைகளில் மாற நீங்கள் காரணமாக இருந்து விடாதீர்கள். இங்கு கொடுக்கப்பட்டுள்ள வகையான பெண்களைப் போலவே ஆண்களிலும் பலர் இருக்கிறார்கள் அத்தகைய ஆண்களை பெண்கள் வாழ்க்கையில் தேர்ந்தெடுத்து பயணிப்பதையும் தவிர்க்க வேண்டும்.
இயற்கை அழகுள்ள குட்டி இளவரசி எனப்படும் சிறுமலைக்கு படையெடுக்கும் சுற்றுலாவாசிகள்
அமைவிடம்
வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் சிறுமலை கடல் மட்டத்திலிருந்து 1600 மீட்டர் உயரத்தில் கிழக்கு தொடர்ச்சி மலைகளின் இறுதியில் 60,000 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது. அரிய அழிந்து வரும் தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் களஞ்சியமாக...
21 நவம்பர் 2024 – தாம்பரம் சற்குரு சபையின் 78 ஆம் ஆண்டு குருபூஜை – நமது “பூங்கா...
கடந்த 1959 ஆம் ஆண்டில் ஒட்டன்சத்திரம் வட்டத்தில் உள்ள வாகரை கிராமத்தில் பிறந்த நா. சின்னச்சாமி அவர்கள் அருள்மிகு பழனியாண்டவர் கலை கல்லூரியில் பட்டம் பெற்ற பின்னர் வருவாய் துறையில் பல ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்று பெற்றுள்ளார். மக்களுக்கு வரும் வகையில் சிந்தனையை தூண்டிவிடும் மிகச்சிறந்த பேச்சாளர். எழுத்து, கலை, இலக்கியம் ஆகியவற்றில் மிகுந்த ஆர்வமும் சமூக அர்ப்பணிப்பும் கொண்டவர்.
தாம்பத்தியத்தை பெருக்கி அதிக குழந்தைகளை பெற ஊக்குவிக்க தனித்துறை, திட்டம் போட்டு திருடும் நைஜீரிய கிரிமினல்கள் இந்தியாவில் கைது...
“தமிழகத்திலும் ஆந்திராவிலும் மக்கள் தொகை கட்டுப்படுத்தப்பட்டு முந்தைய மக்கள் தொகை விட வளர்ச்சியை விட குறைந்துள்ளதால் தமிழகம் மற்றும் ஆந்திராவில் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை குறைக்கப்படும் என்று கருதப்படுகிறது. மக்கள் தொகை வளர்ச்சியை கட்டுப்படுத்த தவறிய பல மாநிலங்களில் மக்கள் தொகை காரணமாக நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை கூட்டப்படலாம். இதனால், தமிழகத்திலும் ஆந்திராவிலும் மக்கள் தொகை உயர வேண்டும் என்று இம்மாநில முதல்வர்கள் கருத்து தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன”
குட்டி தீவில் இந்தியா ரகசிய ராணுவ தளத்தை அமைகிறதா? உண்மைதானா?
மொரீஷியஸின் கிழக்கில் 2,000 கி.மீ. தொலைவில் உள்ள சாகோஸ் தீவுகளிலிருந்து வெளியேற்றப்பட்ட குடும்பங்களை சேர்ந்த பலர் தான் அகலேகா தீவில் வசித்துவருகின்றனர். 1965-ம் ஆண்டில் இங்கிலாந்தின் பிரதேசமாக அறிவிக்கப்பட்ட சாகோஸ் தீவில் பெரிய தீவு டியகோ கார்சியா. (Diego Garcia) இங்கிலாந்தின் அனுமதியைப் பெற்று இந்த தீவில் அமெரிக்கா தகவல் தொடர்பு நிலையத்தை அமைத்தது. பின்னர், படிப்படியாக முழு அளவிலான ராணுவ தளமாக மாறியது.
புரியாத வயசு… … அறியாத நண்பர்கள்… … ஆபத்தை ஏற்படுத்தும் ஈர்ப்பு… … மாணவிகளே உஷார்! இதை படிக்கும்...
இந்த காலகட்டத்தில் உள்ளவர்களுக்கு புரியாத வயதாக உள்ள நிலையில் எதையும் அடையாளம் காணும் திறனை பெறுவதற்கு குழப்பமாக உள்ள மனநிலை (confused state of mind) நீடிக்கிறது. இந்தப் புரியாத வயதில் சமூக வலைத்தளங்களில் அறியாத நண்பர்களிடம் நட்பை ஏற்படுத்திக் கொள்ளும் மாணவிகளுக்கு எமனாக இருக்கக்கூடிய மோகம் (காதல் அல்ல) அவர்களை மோசமான பாதைக்கு அழைத்துச் செல்வதோடு அவர்களின் வாழ்க்கையை சீரழித்து விடுகிறது. வளர் பருவ வயதில் உள்ள மாணவிகளை சீரழிக்க மோசமான மனிதர்களும் (individuals) குற்றவாளி குழுக்களும் (criminal gangs) வேகமாக இயங்கிக் கொண்டிருக்கின்றன என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
வலுப்படுத்த வேண்டிய தெரு விழாக்களும் கிராமிய திருவிழாக்களும் புத்தகப் பெருவிழாக்களும்
கிராமங்களில் நடைபெற்ற இத்தகைய திருவிழாக்களில் புலி வேஷம், சிலம்பாட்டம், கோமாளி போன்ற வகையான ரசிக்கும் அம்சங்களும் இடம்பெற்றன. பண்டிகை காலங்களில் கிராமங்களில் நடைபெற்ற இத்தகைய நிகழ்வுகளைப் போலவே நகரங்களில் தெருக்களில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. கிராமங்களிலும் நகரங்களிலும் தெரு நாடகம், தெருக்கூத்து, மேடை நாடகங்கள் இடம்பெற்றன. இவ்வாறு கிராமங்களில் நகரங்களிலும் பண்டிகை காலங்களிலும் திருவிழாக்களிலும் நடைபெற்ற கலாச்சார நிகழ்ச்சிகள் மூலம் மக்கள் மகிழ்ச்சியுற்றதோடு மக்களுடைய ஒற்றுமையும் பரஸ்ப நட்புணர்வும் வலுப்படுத்தப்பட்டது.