அரசியலமைப்பு கூறும் மக்களவைத் துணை சபாநாயகர் பதவி காலியாக இருக்கலாமா? எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு அரசியலமைப்பு அந்தஸ்து ஏன் வழங்க கூடாது?

இந்திய அரசியலமைப்பின் 93 ஆம் கோட்பாடு நாடாளுமன்றத்தின் மக்களவைக்கு ஒரு தலைவரும் ஒரு துணை தலைவரும் (அதாவது சபாநாயகரும் துணை சபாநாயகரும்) இருக்க வேண்டும் என்று தெரிவிக்கிறது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக துணை சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படவில்லை. துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்குவது வழக்கமான மரபாக இருந்து வரும் நிலையில் துணை சபாநாயகர் பதவியை காலியாக வைத்திருப்பது சரியானது அல்ல.