மூன்றாம் உலகப்போர் ஏற்படாமல் இருக்க காரணம் அணு ஆயுதங்களே! ஆச்சரியமாக உள்ளதா?

அமெரிக்காவும் ரஷ்யாவும் மிக அதிக அளவில் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்து உலகில் 90 சதவீத அணு ஆயுதங்களை வைத்திருக்கக் கூடிய நாடுகளாக இருக்கின்றன. இதனைத் தவிர சீனா, பிரான்ஸ், இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், வடகொரியா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளிடம் அணு ஆயுதங்கள் உள்ளது. 1945 ஆகஸ்ட் 6 மற்றும் 9 தேதிகளில், அமெரிக்கா ஜப்பானிய நகரங்களான ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது இரண்டு அணுகுண்டுகளை வெடிக்கச் செய்தது. குண்டுவெடிப்புகளில் 1,50,000 முதல் 2,46,000 பேர் வரை கொல்லப்பட்டனர்.