நவகிரக கோவில்கள்: சுயம்பு லிங்கமாக தோன்றி ஆலங்குடியில் காட்சி தரும் குரு பகவான்

இந்தியா முழுவதிலும் இருந்து பக்தர்கள் குருபெயர்ச்சியன்றும் வியாழக்கிழமைகள் தோறும் ஆலங்குடி வந்து அருள்மிகு தட்சிணாமூர்த்தியை தரிசனம் செய்து செல்கிறார்கள். மாசி மாதம் மூன்றாவது வியாழக்கிழமை மகாகுருவாரமாகக் கொண்டாடப்படுகிறது. இத்தலத்தின் கிழக்கே அமைந்துள்ள பூளைவள ஆற்றில் இருந்து தீர்த்தத்தை எடுத்து வந்து ஐப்பசி மாதத்தில் சுவாமிக்கு அபிஷேகம் செய்கின்றனர்.