வாக்காளரியல் என்றால் என்ன? அறிந்து கொள்ளுங்கள்! சிந்தனைகள் பரவ அனைவருக்கும் பகிருங்கள்! 

தேர்தல் காலங்களில் மட்டுமே வாக்காளர்களை தங்களின் எஜமானவர்களாக வேட்பாளர்கள் சித்தரிக்கின்றனர். இதனையே, அரசியல் அறிஞர் ஜான் ஆடம்ஸ் “தேர்தல் எப்போது முடிவடைகிறதோ, அப்போதே மக்களின் அடிமைத்தனம் தொடங்குகிறது” என தமது நூலில் வர்ணித்துள்ளார். மனிதனின் தேவைதான் படைப்புகளின் காரண கர்த்தா.  ஒவ்வொரு துறைகள் குறித்த கல்வியும் ஆய்வுகளும் காலப்போக்கில் விரிவடைந்து புதிய பிரிவுகள் தோன்றி வளர்ச்சி அடைகின்றன. மனித குலத்தின் மேம்பாட்டுக்கு புதிய சிந்தனைகள் தோன்றி வளர்வது தேவையானது.