அடிதடி, சண்டை தொழிலாக வளரும் கலாச்சாரம் ???

பெருநகரங்களில் மட்டும் இருந்த தீய தொழில்களுக்கான கும்பல்   கலாச்சாரமானது மெல்ல மெல்ல சிறு நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் நகர்ந்து வருகிறதா? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் போதை பொருள் பழக்கம் சிறுவர்களிடையும் மாணவர்களியையும் இளைஞர்களிடையையும் அதிகரித்து வருகிறது.  அடிதடி சண்டைக்கு செல்வது ஒரு தொழில் என்ற மனப்பான்மையையும் கூலிப்படையினராக செல்வது வீரம் என்ற மனப்பான்மையையும் விதைக்கும் நயவஞ்சகர்கள் அதிகரித்துள்ளார்களோ எனக்கருத தோன்றுகிறது. இத்தகைய சூழல் ஏதோ ஒரு மாநிலத்தில் மட்டும் நிலவுகிறது என்று யாரும் கூறிவிட முடியாது.