அரசியலமைப்பை மாற்றுவதில் தவறில்லை. ஆனால், அதற்கான அவசியம் தற்போது இல்லை

அரிஸ்டாட்டிலின் அரசியலமைப்பு குறித்த கருத்து என்னவெனில் “அரசியலமைப்பு என்பது அரசு தனக்குத் தானே தேர்ந்தெடுத்த வாழ்க்கை முறை.”  ஒவ்வொரு நாடும் தனக்கென ஒரு அரசியலமைப்பை வகுத்துக் கொண்டுள்ளது. இந்த அரசியலமைப்புதான் சட்டம் இயற்றும் அமைப்புகள் எவ்வாறு இருக்க வேண்டும்? பாராளுமன்ற முறை அமைப்பு இருக்க வேண்டுமா? அல்லது அதிபர் ஆட்சி முறை இருக்க வேண்டுமா? அல்லது வேறு ஏதாவது வகையிலான ஆட்சி முறை இருக்க வேண்டுமா? என்பதையும்   கூட்டாட்சி அரசாங்கமாக இருக்க வேண்டுமா? அல்லது ஒற்றையாட்சி முறை அரசாங்கமாக இருக்க வேண்டுமா? என்பதையும் நீதித்துறையின் அமைப்பையும் தீர்மானிக்கிறது.