பூமியின் துருவங்களில் இவ்வளவு அதிசயங்களா?

6 மாதம்  இருளும் 6 மாதம் பகலும் காணப்படும்.   அண்டார்டிகாவில் செப்டம்பர் 1 முதல் மார்ச் 22 வரை சூரியன் உதயமாகும்.  மற்ற நாட்களில் இருள் சூழ்ந்து துருவ இரவு (Polar Night) நிலவுகிறது. அண்டார்டிகாவின் கடலோரப் பகுதிகளில் கோடைகாலத்தில் வெப்பநிலை 10 டிகிரி செல்சியஸ் அளவிலும் குளிர்காலத்தில் மைனஸ் 40 டிகிரி செல்சியஸ் அளவிலும் நிலவுகிறது. அண்டார்டிகாவின் உள்பகுதிகளில் உயரமான   பனி பிரதேசங்களில் கோடைகாலத்தில் சுமார் மைனஸ் 30 டிகிரி செல்சியஸ் அளவிலும் குளிர்காலத்தில் மைனஸ் 80 டிகிரி செல்சியஸ் அளவிலும் நிலவுகிறது.