Advertisement

சந்தன மரமாக வாழ விரும்புகிறீர்களா? கரிக்கட்டையாக வாழ விரும்புகிறீர்களா? முடிவு உங்கள் கையில்

ஒரு முறை வேட்டையாட சென்ற அரசர் ஒருவர், காட்டில் வெகு தூரம் சென்று விட்டார். அவருக்கு மிகவும் தாகம் எடுத்தது. தண்ணீரைத் தேடிப்பார்க்கும் போது, ஒரு மரம் வெட்டுபவரை சந்திக்க நேர்ந்தது. அவர் மரத்தில் இருந்து கரி தயார் செய்து கொண்டிருந்தார். அரசர், அவரிடம் சென்று தண்ணீர் கேட்டார். அவரிடம் ஒரே ஒரு குவளை தண்ணீர் இருந்தது என்றாலும் அதை மகிழ்ச்சியோடு அரசருக்குக் கொடுத்தார்.

அரசர் திருப்தி அடைந்து அவரிடம், “நீங்கள் என் அரண்மனைக்கு எப்போது வேண்டுமானாலும் வரலாம். உங்களுக்கு நான் ஒரு வெகுமதி கொடுப்பேன்” என்றார். மரம் வெட்டுபவரும் அரசரின் அழைப்பை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார். சில காலத்திற்கு பிறகு, மரம் வெட்டுபவர் ஒரு நாள் அரண்மனைக்குச் சென்றார். தன்னைத்தானே அரசரிடம் அறிமுகப் படுத்திக் கொண்டார். “நீங்கள் காட்டில் தாகத்துக்காக தண்ணீர் தேடும் போது, உங்களுக்குத் தண்ணீர் கொடுத்த மரம் வெட்டுபவர் நானே!” என்றார்.    

அரசர், அவரை உபசரித்து ஒரு சந்தன மரத்தோட்டத்தை மரம் வெட்டுபவருக்கு பரிசாகக் கொடுத்தார். மரம் வெட்டுபவர் இதன் மூலம், தனக்கு போதுமான வருவாய் கிடைக்கும். தன்னுடைய வாழ்க்கையை நடத்துவதும் எளிதாக இருக்கும் என  மகிழ்ச்சி அடைந்தார். இவ்வாறாக, அந்த மரம் வெட்டுபவர் இதிலிருந்து  அதிகப் பணம், சம்பாதிக்க ஆரம்பித்தார்.

ஒரு நாள் அரசர், மரம் வெட்டுபவரை சந்தித்து, அவரது நிலைமை எப்படி இருக்கிறது  என்பதை சோதிக்க நினைத்தார். சந்தன மரத் தோட்டத்திற்கு ஒரு உல்லாசப் பயணம் போனது போலவும் இருக்கும் எனப் புறப்பட்டார். தூரத்தில் இருந்தே, தோட்டத்தில் இருந்து புகை கிளம்பி வருவதை அரசர் பார்த்தார். அருகில் வந்ததும், சந்தன கட்டைகள் எரிந்து கொண்டிருப்பதையும், மரம் வெட்டுபவர் அதற்குப் பக்கத்தில் நிற்பதையும் அரசர் பார்த்தார்.

அரசர், அவரிடம், “நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?“ என்று கேட்டார். அந்த மரம் வெட்டுபவர் அரசரிடம், “உங்களுடைய நல்லாசியால், நான் மிகவும் வசதியாக வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். இந்த தோட்டத்தை எனக்குக் கொடுத்து, நீங்கள் மிகப் பெரிய நன்மையை எனக்கு செய்து இருக்கிறீர்கள். இந்த தோட்டத்தில் உள்ள மரங்களில் இருந்து கரி தயாரித்து, அதை விற்றுக் கொண்டு இருக்கின்றேன். இப்போது சிறிதளவில்தான் மரங்கள் இருக்கின்றன. உங்கள் ஆசியால், எனக்கு இன்னொரு தோட்டம் கிடைத்தால், என்னுடைய மீதி வாழ்நாளையும் வசதியாகக் கழித்து விடுவேன்“ என்றார்.  

குறுகிய காலத்திலேயே அந்த அழகான சந்தன மரத்தோட்டம்,  ஒரு பாலைவனமாக தோற்றம் அளித்ததை அரசர் பார்த்தார்.    எங்கு பார்த்தாலும், கரிக்குவியல்களாக இருந்தன. இப்போது மிகக் குறைந்த எண்ணிக்கையில்தான் மரங்கள் தோட்டத்தில் இருந்தன. அவைதான், இந்த மரம் வெட்டுபவருக்கு நிழல் தரும் நோக்கத்தோடு இருந்தன. அரசர் மிகவும் ஏமாற்றம் அடைந்தார். மரம் வெட்டுபவரிடம், “பரவாயில்லை, நான் இங்கே காத்திருக்கிறேன்.     சந்தைக்குச் சென்று இந்த மரங்களை விற்று வா. கரியை அல்ல“ என்றார். மரம் வெட்டுபவர் இரண்டு அடி அளவுக்கான மரத்துண்டு ஒன்றை எடுத்துக் கொண்டு சந்தைக்குச் சென்றார். 

நல்ல தரமான சந்தனக் கட்டையைப் பார்த்து மக்கள் பிரமிப்பு அடைந்தார்கள்.  மரம் வெட்டுபவர் அந்த சந்தனக் கட்டையை விற்று 300 ரூபாய் கிடைக்கப் பெற்றார். அவர் வழக்கமாக கரிகளை விற்றுக் கிடைக்கும் தொகையை விட இது எத்தனையோ மடங்கு மேலானது. மரம் வெட்டுபவர் அரசரிடம் வந்தவுடன் மிகவும் மனம் உடைந்து அழுதார். சந்தன மர வாழ்க்கையை கரிக்கட்டை மரமாக வாழ்ந்து விட்டேனே என தன்னுடைய முட்டாள்தனத்தை ஒப்புக் கொண்டார். தன்னுடைய அறியாமையால், விலை மதிப்பற்ற பொருளை இழந்து விட்டதற்காக ஆழ்ந்த வருத்தம் அடைந்தார். அரசர் அவரை அமைதிப்படுத்தி, இனிமேல் புதிதாக தொடங்குங்கள் என்று உற்சாகப்படுத்தினார்.

எல்லோரும் எல்லாவற்றையும் அறிந்திருக்க முடியாது. நாம் வாழும் ஒவ்வொரு நாளையும் அறியாமல் வாழ்வதும் நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் அறியாமல் செய்வதும் அறியாமையின் அடையாளங்கள் ஆகும்.  ஒவ்வொருவரும் தமது வாழ்க்கையில் தமக்கான இலக்கை அறியாமலும் ஒவ்வொருவரின் வாழ்க்கை தரமும் அவரது திட்டமிடலில் வெளிப்பாடு என்பதை அறியாமலும் என்ன செய்கிறோம்? என்று அறியாமலும் மனம் போன போக்கில் வாழ்ந்து கொண்டிருப்பது அறியாமை வழங்கும் பரிசுகள் ஆகும். 

ஒவ்வொரு குழந்தையும் பிறக்கும் போது எல்லாவற்றையும் அறிந்து கொண்டு பிறப்பதில்லை. குழந்தை வளர தொடங்கிய பின்னர்தான் ஒவ்வொன்றையும் அறிந்து கொள்கிறது. வளரும் ஒவ்வொரு குழந்தையும் சிறந்த வாழ்க்கையை வாழ்வதில்லை அல்லது வெற்றியாளராக மாறுவதில்லை.  வளரும் குழந்தை அறியாமையை போக்கி அறிவுத்திறனை வளர்த்துக் கொள்ளும் போதுதான் சிறந்த வாழ்க்கையை வாழ முடிகிறது அல்லது வெற்றியாளராக திகழ முடிகிறது. அறியாமையை போக்க தேவைப்படுவது ஒவ்வொன்றையும் ஆழ்ந்தறிவதாகும்.

அறியாமையை அகற்ற நாம் வாழும் ஒவ்வொரு நாளிலும் நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் உள்ள அர்த்தங்களை அறிந்து கொள்ள முயற்சிப்பது வாழ்க்கையை கரிக்கட்டையாக அல்லாமல் சந்தன மரமாக வாழ்வதற்கான முயற்சியாகும். வாழ்க்கையை சந்தன மரமாக வாழ்வதா? அல்லது கரிக்கட்டையாக வாழ்ந்து விட்டு செல்வதா? என்பது என்பது ஒவ்வொருவரின் கைகளில் தான் இருக்கிறது.

படிக்க வேண்டிய செய்தி கட்டுரைகள்

விண்ணைத் தொடும் காலி மனை இடம், நிலத்தின் விலை  – காரணம் என்ன? எப்படி கட்டுப்படுத்துவது?

https://theconsumerpark.com/land-value-hike-control/

புத்துயிர் தேடும் தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம்

https://theconsumerpark.com/state-commission-for-protection-of-child-rights-dr-v-ramaraj

மாதவிடாய் கால சானிட்டரி நாப்கின்கள் – வரமா? சாபமா?

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Google search engine

Latest Articles