கிரீன்லாந்து நாட்டின் வியத்தகு ஆச்சரியங்கள் குறித்த விவரங்களை நேற்றைய கட்டுரையில் பார்த்தோம் படிக்க தவறியவர்களுக்காக இந்த கட்டுரையின் இறுதியில் மீள் பதிவும் செய்யப்பட்டுள்ளது,
கிரீன்லாந்து (Greenland)
சுய ஆட்சி நாடாக கிரீன்லாந்து இருந்த போதிலும் இந்த நாடு டென்மார்க்கின் அங்கமாகும். கிரீன்லாந்தின் பாதுகாப்பு, வெளியுறவு போன்றவை டென்மார்க் அரசிடமே உள்ளது. இரண்டாம் உலகப் போரைத் தொடர்ந்து, 1946 ஆம் ஆண்டில் டென்மார்க்கிலிருந்து $100,000,000-க்கு தீவை வாங்க முன்வந்தது. அமெரிக்காவின் இந்த விருப்பத்தை டென்மார்க் நிராகரித்துவிட்டது.

“நேட்டோ” (North Atlantic Treaty Organization) என அழைக்கப்படும் ராணுவ கூட்டணியில் தற்போது 32 நாடுகள் இருந்த போதிலும் கடந்த 1949 ஆம் ஆண்டில் இந்த அமைப்பானது சோவியத் ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா, டென்மார்க் (America, Denmark) உள்ளிட்ட 10 நாடுகளால் தொடங்கப்பட்டதாகும். இவ்வாறு அமெரிக்காவும் டென்மார்க்கும் ராணுவ கூட்டாளிகளாக இருந்த போதிலும் டென்மார்க்கின் கிரீன்லாந்தை சொந்தமாக்கிக் கொள்வதில் அமெரிக்காவுக்கு தொடர்ந்து ஆசை இருந்து வருகிறது.
கடந்த 1951 ஆம் ஆண்டில் அமெரிக்காவும் டென்மார்க்கும் பாதுகாப்பு ஒப்பந்தம் (defense treaty) ஒன்றை செய்து கொண்டன. இதன்படி கிரீன்லாந்தில் ராணுவ தளங்களை வைத்திருக்க அமெரிக்காவுக்கு அனுமதி வழங்கப்பட்டது. நேட்டோவால் அவசியமாகக் கருதப்பட்டால் புதிய தளங்கள் அல்லது பாதுகாப்புப் பகுதிகளை நிறுவவும் அமெரிக்காவுக்கு இந்த ஒப்பந்தம் அனுமதி வழங்கியது. கடந்த 1957 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அணுசக்தி இல்லாத மண்டலம் என்ற கொள்கையை (nuclear-free zone policy) டென்மார்க் பின்பற்றி வருகிறது. இதனால், அணு ஆயுத ஏவுகணை தளத்தை (nuclear missile site) அமைப்பதற்கு டென்மார்க் அமெரிக்காவுக்கு அனுமதி வழங்கவில்லை.
டென்மார்க்கின் அனுமதி இல்லாத நிலையிலும், கிரீன்லாந்து பனிப்பாறைகளில் ரகசிய அணு ஏவுகணை ஏவுதளங்களின் நிலத்தடி வலையமைப்பை உருவாக்க அமெரிக்கா முயற்சித்தது. அதற்கு ப்ராஜெக்ட் ஐஸ்வோர்ம் என்று பெயரிடப்பட்டது. 1997 ஆம் ஆண்டு வரை, டென்மார்க் அரசாங்கத்துக்கு அமெரிக்காவின் இந்த திட்டம் குறித்து தெரியவில்லை. 1968 ஆம் ஆண்டு துலே விமானத் தளத்திற்கு (Thule Air Base) அருகே அணு ஆயுதம் பொருத்தப்பட்ட குண்டுவீச்சு விமானம் விபத்துக்குள்ளானது தொடர்பான பதிவுகளை வகைப்படுத்தப்பட்ட ஆவணங்களில் தேடும் போது டென்மார்க் அரசாங்கம் கண்டுபிடித்தது.
(தொடர்ச்சி கீழே உள்ள அட்டவணை செய்திகளுக்கு கீழ்)

அமெரிக்க அதிபராக இரண்டாவது முறை டிரம்ப் பதவியேற்ற சில நாட்களில் கிரீன்லாந்தை அமெரிக்காவின் ஒரு பகுதியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேசினார். இதனை தொடர்ந்து கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல என்று டென்மார்க் பிரதமரும் கிரீன்லாந்து பிரதமரும் பதிலடி கொடுத்தார். ஆனால், ட்ரம்போ கிரீன்லாந்தில் உள்ள மக்கள் அமெரிக்காவுடன் இருக்க விரும்புகிறார்கள் என்று தெரிவித்தார்.
இதனிடையே கிரீன்லாந்தை சொந்தமாக்கிக் கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அமெரிக்க அதிபருக்கு அதிகாரம் வழங்கும் சட்ட மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு எதிர்வினை ஆற்றும் வகையில். அமெரிக்காவின் வளம் மிக்க மாகாணமான கலிபோர்னியாவை (California) நாங்கள் விலைக்கு வாங்கிக் கொள்கிறோம் என்ற ஒரு பிரச்சாரத்தை டென்மார்க் மக்கள் தொடங்கியிருக்கிறார்கள். ராணுவ கூட்டாளியிடமே சண்டையை தொடங்கி இருக்கிறது அமெரிக்கா. எங்கு சென்று முடியும்? என்று பார்ப்போம்!
காசா (Palestine- Gaza)
அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறி வசிப்பவர்களை (illegal immigrants) வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை தீவிரமாக டிரம்ப் மேற்கொண்டு வருகிறார். காசாவை சொந்த நாடாக கொண்டுள்ள பாலஸ்தீன மக்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்றும் அதனை அமெரிக்கா மறு நிர்மாணம் செய்ய திட்டமிட்டுள்ளது என்றும் டிரம்ப் பேசுகிறார் (உனக்கு வந்தால் ரத்தம். எனக்கு வந்தால் தக்காளி சட்னியா?). ஏனெனில் காசா பகுதியானது உலகில் கிழக்கில் இருந்தும் மேற்கிலிருந்தும் பார்க்கும் போது மத்திய பகுதியில் அமைந்துள்ளதால் அதனை ராணுவ கேந்திரமாக (military base) பயன்படுத்துவதற்கு உபயோகமாக இருக்கும் என்று அமெரிக்காதிட்டமிடுகிறது.
கனடா (Canada)

அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் பதவி ஏற்பதற்கு முன்னரே கனடா நாடு அமெரிக்காவின் 51 வது மாநிலமாக மாற வேண்டும் என்ற கருத்தை வெளியிட்டார் டிரம்ப். உலகப் பரப்பளவில் மூன்றாம் இடம் வகிக்கும் அமெரிக்காவை விட சற்று கூடுதலான நிலப்பரப்பு கொண்ட கனடா உலக நிலப்பரப்பில் ரஷ்யாவுக்கு அடுத்தபடியாக இரண்டாம் இடம் கொண்டதாகும். கிரீன்லாந்தும் கனடாவும் அமெரிக்காவுடன் இணைய மறுத்தால் பொருளாதார போர் (Economic war) நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக டிரம்பின் பேச்சுகள் உள்ளன. (வலுவுள்ளவன் வைத்தது சட்டமாகுமா? Trump eyeing with claims on Canada)
அட்லாண்டிக் மற்றும் பசிபிக் பெருங்கடல்களை இணைக்கும் ஒரு முக்கிய வர்த்தக பாதையான பனாமா கால்வாயை (Panama Canal) மீண்டும் கைப்பற்ற டொனால்ட் டிரம்ப் விருப்பம் தெரிவித்துள்ளார். மெக்சிகோ வளைகுடாவை (Gulf of Mexico) அமெரிக்க வளைகுடா என பெயர் மாற்றம் செய்து டிரம்ப் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
டிரம்ப் பதவியேற்ற சில நாட்களிலேயே சர்வதேச சுற்றுச்சூழல் அமைப்பில் இருந்து அமெரிக்கா வெளியேறிவிட்டது. பின்னர் உலக சுகாதார நிறுவனத்திலிருந்தும் (World Health Organization) வெளியேறியது. தற்போது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (International Criminal Court) மீது பல தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது. இத்தகைய நடவடிக்கைகள் மூலம் சர்வதேச அமைப்பான ஐக்கிய நாடுகள் சபையின் (United Nations Organization) உறுதித் தன்மை மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துகிறது என்றே கூறலாம்.
பூங்கா இதழ் (The News Park) கருத்து: சர்வதேச சமநிலை பாதிக்கப்பட்டால் உலக அமைதிக்கு மிகுந்த ஆபத்தாக அமையும்.




