Advertisement

ஐ.நா. அமைதிப்படை தினம்: வீர மரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவோம்!

கடந்த 1948 ஆம் ஆண்டு மே 29 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படை (United Nations Peacekeeping Force) அமைக்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி நடவடிக்கைகளுக்கான துறை (department of peace operations) இந்த படையை ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு குழுவின் (security council) வழிகாட்டுதலில் செயல்படுத்துகிறது.

உள்நாட்டு சண்டைகளால் (internal conflicts) பாதிக்கப்பட்டுள்ள நாடுகளை அமைதி வழியில் கொண்டு வருவதற்கும் இரு நாடுகளுக்கு இடையே போர் (war) நடைபெறும் போது   நாடுகளுக்கு இடையே ஒப்பந்தத்தை ஏற்படுத்தி அமைதியை பராமரிப்பதற்கும் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படை சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு அனுப்பப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படையை அனுப்புவதற்கு சம்பந்தப்பட்ட நாடுகளின் ஒப்புதல் அவசியமாகும்.

ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் குறைந்த எண்ணிக்கையிலான ஐ.நா. இராணுவ பார்வையாளர்களை மத்திய கிழக்கில் நிலைநிறுத்த அங்கீகாரம் அளித்து, ஐக்கிய நாடுகளின் சண்டை கண்காணிப்பு அமைப்பை (UNTSO) இஸ்ரேலுக்கும் இஸ்ரேலின் அண்டை அரபு நாடுகளுக்கும் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தத்தை கண்காணிக்கும் ஐ.நா. அமைதி காக்கும் முதல் பணி மே 1948 -ல் தொடங்கியது.

கடந்த 70 ஆண்டுகளில், 10 லட்சத்துக்கும் அதிகமான ஆண்களும் பெண்களும் 70-க்கும் மேற்பட்ட ஐ.நா அமைதிப்படை நடவடிக்கைகளில் பணியாற்றியுள்ளனர். 125 நாடுகளை சேர்ந்த 1,00,000-க்கும் மேற்பட்ட ராணுவத்தினர், காவல் துறையினர் மற்றும் பொதுமக்கள் தற்போது 14 அமைதி காக்கும் நடவடிக்கைகளில் பணியாற்றுகின்றனர். ஐ.நா. அமைதிப்படையில் பணியாற்றுபவர்கள் நீல நிற தொப்பி அல்லது தலைக்கவசம் அணிவதாலும் ஐ,நா. சபையின் நீல நிற கொடியை (blue flag) கொண்டு செயல்படுவதாலும் இவர்கள் நீல நிற படையினர் என்றும் அழைக்கப்படுகிறார்கள். 

கடந்த 75 ஆண்டுகளில் ஐ.நா. அமைதிப்படையில் பணியாற்றிய 4,300 பேர் பணியின் போது வீரமரணம் அடைந்துள்ளார்கள். கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தின்படி ஒவ்வொரு ஆண்டும் மே 29 அன்று ஐக்கிய நாடுகள் சபை அமைதிப்படை தினமாக அனுசரிக்கப்படுகிறது. அமைதிப்படை பணியில் வீர மரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் அமைதிப்படையில் பணியாற்றிய மற்றும் பணியாற்றுபவர்களின் சேவையை பாராட்டும் விதமாகவும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. 

பூங்கா இதழ்
பூங்கா இதழ்https://thenewspark.in
பூங்கா இதழின் படைப்பு

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Google search engine

Latest Articles