Advertisement

இரண்டாம் ஆண்டில் அமைதிக்கான உத்திகள் நிறுவனம் – நுகர்வோர் பூங்கா & பூங்கா இதழ் இணைய பத்திரிகை பணிகளில் இணைவீர்! பங்களிக்கலாம்! ஆதரிக்கலாம்! Job opportunities for Marketing Executives and Content Writers

நுகர்வோர் பூங்கா

கடந்த 2023 செப்டம்பர் 15 அன்று அமைதிக்கான உத்திகள் நிறுவனமானது இந்திய அரசின் கம்பெனி விவகாரங்களுக்கான துறையின் கீழ் செயல்படும் கம்பெனி பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டது. கடந்த 2024 ஜனவரி முதல் தேதி அன்று நுகர்வோர் விழிப்புணர்விற்காகவும் பாதுகாப்புக்காகவும் “நுகர்வோர் பூங்கா” இணைய இதழ்  (https://theconsumerpark.com/) தொடங்கப்பட்டது. நுகர்வோர் பூங்கா இணைய இதழில் இதுவரை 177 கட்டுரைகள் வெளிவந்துள்ளன.  ஒரு நாள் விட்டு ஒரு நாள் நுகர்வோர் இணைய இதழில் செய்தி கட்டுரைகள் வெளிவந்து கொண்டுள்ளன.

பூங்கா இதழ்

கடந்த 2024 ஏப்ரல் முதல் தேதி அன்று “பூங்கா இதழ்” ( https://thenewspark.in/ ) இணையத்தில் சமூக விழிப்புணர்வு இதழாக வெளிவந்து கொண்டுள்ளது. நுகர்வோர் பூங்கா இணைய இதழில் இதுவரை 121 செய்தி கட்டுரைகள் வெளிவந்துள்ளன.  திங்கள் கிழமை தவிர மற்ற நாட்களில் பூங்கா இதழில் கட்டுரைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. பூங்கா இதழ், நுகர்வோர் பூங்கா ஆகிய இணைய இதழ்களில் 30 சட்டக்கல்லூரி மாணவர்கள் பயிற்சி கட்டுரையாளர்களாக பணியாற்றி வருகிறார்கள்.

ஆய்வு பூங்கா

கடந்த 2024 ஜூலை முதல் தேதி அன்று அமைதிக்கான உத்திகள் நிறுவனத்தின் இணையதளம் (https://tranquilitystrategies.com/) தொடங்கப்பட்டது. வரும் 2024 அக்டோபர் முதல் நாளில்   ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளும் மாணவர்கள், ஆய்வாளர்கள் மற்றும் பேராசிரியர்களுக்காக “ஆய்வு பூங்கா” https://researchpark.in/) என்ற   இணைய இதழ் தொடங்கப்பட உள்ளது. 

ஆங்கில இதழ்கள் 

வரும் 2024 டிசம்பர் முதல் நாளில் இருந்து பூங்கா இதழ் மற்றும் நுகர்வோர் பூங்கா இணைய இதழ்களை  ஆங்கிலத்தில் வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளது. அமைதி பூங்கா  வெளியீட்டு பிரிவு மற்றும் அமைதி பூங்கா ஊடகப் பிரிவு ஆகியனவும் வரும் 2024 நவம்பர் மாதத்தில் தொடங்கப்பட உள்ளன.

சர்வதேச அமைதிக்கான உத்திகள் கல்வி நிறுவனம்

2025 ஆம் ஆண்டின் முதல் நாளிலிருந்து சர்வதேச அமைதிக்கான உத்திகள்   இணைய கல்வி நிறுவனம் (International Institute of Peace Strategies) தொடங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. “உள்ளபடி சொல்வோம்! ஆய்வும் செய்வோம்!” என்பது இந்த சமூக ஊடகத்தின் கொள்கை.   “புதுமையான, உன்னத அமைதி கலாச்சாரத்தை உருவாக்குதல்” என்ற முழக்கத்துடன் எங்களது பயணத்தில் தாங்களும் பல்வேறு வகைகளில் பங்களிக்கலாம்! ஆதரிக்கலாம்!

தூதுவர்/புரவலர் (Good Will Ambassadors/Patrons) 

செய்தி மற்றும் விழிப்புணர்வு கட்டுரைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் கொண்டு செல்வதை வலுப்படுத்தும் வகையில் நல்லெண்ண தூதர்களை  நியமிக்கவும்     பூங்கா இதழ்   மற்றும்  நுகர்வோர் பூங்காவின் பணிகளை ஆதரிக்கும் நண்பர்களை புரவலர்களாக நியமிக்கவும் நுகர்வோர் பூங்கா மற்றும் பூங்கா இதழ் திட்டமிட்டுள்ளது.  இவ்வாறு நியமிக்கப்படும் நல்லெண்ண தூதர்கள் மற்றும் புரவலர்கள் புகைப்படம் இந்த பகுதியில் இருதரப்பிலும் ஒப்புக் கொள்ளப்படும் காலத்திற்கு வெளியிடப்படும். இந்தப் பணியில் அர்ப்பணிக்க விரும்புவோர் [email protected]/ மற்றும் [email protected]. என்ற மின்னஞ்சல் முகவரியில் எங்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

எழுத்தாளராக  பங்களிக்கலாம்

பொதுவான –   உபயோகமான –  விழிப்புணர்வை ஏற்படுத்தும்   வகையிலான கட்டுரைகளும்   சிறப்பு படைப்புகளும் வரவேற்கப்படுகின்றன. தங்கள் படைப்புகளை புகைப்படத்துடன் சமர்ப்பிக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]/ மற்றும் [email protected]. ஆசிரியர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படும் கட்டுரைகள் நுகர்வோர் பூங்கா அல்லது பூங்கா இதழ் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் வெளியிடப்படும்.  தேர்வு செய்யப்படாத கட்டுரைகளை   திருப்பி அனுப்ப இயலாது. தேர்வு செய்யப்படும் கட்டுரைகளுக்கு எவ்வித சன்மானமும் வழங்கப்படாது. கட்டுரையாளரின் பெயரும் புகைப்படமும் கட்டுரையுடன் வெளியிடப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும்.

பயிற்சி கட்டுரையாளராக பங்களிக்கலாம்

கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கும் பட்டப் படிப்பை முடித்த 25 வயதை மிகாத இளைஞர்களுக்கும் செய்தியாளர்/கட்டுரையாளர் பயிற்சியை நுகர்வோர் பூங்கா மற்றும் பூங்கா இதழ் வழங்குகிறது. இந்தப் பணியில்   இணைந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் [email protected]/ மற்றும் [email protected]   என்ற மின்னஞ்சல் மூலமாக அல்லது https://forms.gle/CXdzyUPg3ah2mSfQ8 என்ற இணையதள   கூகுள் படிவம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆய்வாளராக பங்களிக்கலாம்

சமூக விழிப்புணர்வு தலைப்புகளில் ஆய்வு செய்து கட்டுரைகளை வெளியிட நுகர்வோர் பூங்கா மற்றும் பூங்கா இதழ் திட்டமிட்டுள்ளது.  இந்தப் பணியில்   இணைந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் [email protected]  மற்றும் [email protected]  என்ற மின்னஞ்சல் மூலமாக அல்லது   https://forms.gle/CXdzyUPg3ah2mSfQ8  என்ற இணையதள   கூகுள் படிவம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விளம்பரதாரராக பங்களிக்கலாம்

மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக வெளியிடப்படும் நுகர்வோர் பூங்கா மற்றும் பூங்கா இதழ் சிறப்பாக செயல்பட நுகர்வோர் பூங்கா மற்றும் பூங்கா இதழில் விளம்பர வருமானம் அத்தியாவசியமானது. எங்களை ஆதரிக்க “நுகர்வோர் பூங்கா மற்றும் பூங்கா இதழில்” விளம்பரம் செய்ய முன் வாருங்கள் மேலும் விவரங்களுக்கு [email protected]/ மற்றும் [email protected]   என்ற   மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள்.  

Job opportunities for Marketing Executives and Content Writers – interested candidates may register your willingness through  [email protected]/  &  [email protected] or to 9487665454 by WhatsApp. Registered candidates will be contacted. 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Google search engine

Latest Articles