2025 ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்!
வாழ்க்கை குறுகிய கால அளவு கொண்டது (Life is short). இக்காலத்தில் வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக் கொள்வது நமது கைகளில் உள்ளது. 2025 ஆம் ஆண்டில் சிறப்பான வாழ்க்கைக்கான திட்டமிடலும் செயல்பாடும் ஒவ்வொருவருக்கும் அவசியமான ஒன்றாகும். திட்டமிடுதலில் நேர நிர்வாகமும் (time management) செயல் நிர்வாகமும் (operational management) முக்கியமானவை.
ஒவ்வொரு நாளும் எவ்வாறு நேரத்தை செலவிடுவது? என்ற திட்டத்தை (time plan) முந்தைய நாள் இரவே இறுதி செய்யுங்கள். தவிர்க்க இயலாத சூழ்நிலைகளை தவிர மற்ற அனைத்து நாட்களிலும் திட்டமிட்ட பணிகள் அனைத்தையும் ஒவ்வொரு நாளும் செயல்படுத்துங்கள் ஒவ்வொரு நாளும் இறுதியிலும் முந்தைய நாளில் திட்டமிட்ட நேர நிர்வாகப்படி பணிகளை செய்து முடித்துள்ளோமா? என்பதை பரிசீலனை (review) செய்யுங்கள். ஒவ்வொரு வாரத்துக்கும் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு ஆண்டுக்கும் இதுபோல நேர நிர்வாக திட்டத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம்.
இலக்குகளை அடைய செயல்திட்டம் மிக முக்கியமானதாகும். இன்றைய நாளில் என்ன செய்து முடிக்க வேண்டும்? நாளைய நாள் என்ன செய்து முடிக்க வேண்டும்? இந்த வாரத்தில் என்ன செய்து முடிக்க வேண்டும்? இந்த மாதத்தில் என்ன செய்து முடிக்க வேண்டும்? இந்த ஆண்டில் என்ன செய்து முடிக்க வேண்டும்? என்ற செயல் நிர்வாகத்தை (operational management) உருவாக்கி அமல்படுத்தினால் வெற்றி நிச்சயம்.
நீங்கள் மாணவராக இருக்கலாம். வேலை தேடும் இளைஞராக இருக்கலாம். விவசாய தொழிலாளியாக இருக்கலாம். விவசாயியாக இருக்கலாம். அரசு அல்லது தனியார் அமைப்பின் பணியாளராக இருக்கலாம், அரசு அல்லது தனியார் அமைப்பில் உயர் பொறுப்பில் இருக்கலாம். தங்களது நிலைக்கு ஏற்ப நேர திட்டம் மற்றும் செயல் திட்டம் ஆகியவற்றை வகுத்து செயல்படுங்கள்! வெற்றி பெறுங்கள்! இந்த ஆண்டில் வெற்றிகளை ஈட்டுங்கள்! பூங்கா இதழின் வாழ்த்துக்கள்!