தேநீர் கடை, உணவகம், மளிகை கடை இனிப்பு பண்டங்கள் தயாரித்தல், இருசக்கர வாகன பழுது பார்க்கும் நிலையம், சிறிய நிதி நிறுவனம் என பல்வேறு வகையான குறு (micro) மற்றும் சிறு (small) தொழில்களை பலர் செய்து வருகிறார்கள்.
குறு (micro) மற்றும் சிறு (small) தொழில்களை செய்பவர்களில் பலர் தரமான பொருட்களை விற்பனை செய்வார்கள். வாடிக்கையாளர்களுக்கு முக்கியத்துவம் வழங்கி (customers activities) சேவை செய்வார்கள். இருப்பினும் இவர்களால் போதிய வருமானம் கிடைப்பதில்லை. இவர்கள் தொழிலில் வெற்றி பெற போராடிக் கொண்டிருக்கும் பிரிவினர் ஆவார்கள்.
குறு மற்றும் சிறு தொழில் செய்பவர்களில் பலருக்கு உடல்நிலை குறைபாடு மற்றும் வேறு காரணங்களால் நான்கைந்து நாட்கள் விடுமுறை எடுக்க நேரிட்டால் தொழிலை முற்றிலுமாக நிறுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது. இத்தகைய பிரிவினர் சில பணியாளர்களை வைத்தும் தொழில் நடத்தக் கூடியவர்களாக இருப்பார்கள். இவர்கள் தான் இல்லை என்றால் ஒரு நாளும் தொழில் செய்ய முடியாது என்ற மனநிலை படைத்த பிரிவினர் ஆவார்கள்.
முதலாவது பிரிவினரை விட குறைந்த தரம் மற்றும் குறைவான சேவை செய்யும் குறு, சிறு தொழில் செய்பவர்களில் சிலர் நல்ல வருமானத்தை பெறுகிறார்கள். இவர்கள் வெற்றிகரமாக தொழிலை நடத்துபவர்கள் நடத்தும் பிரிவினர் ஆவார்கள். இதற்கு என்ன காரணம் என்னவெனில் இந்த பிரிவினர் வாடிக்கையாளர் சேவைக்கு இணையான முக்கியத்துவத்தை உள்ளமைப்பு முறை (internal system building), குழுவை உருவாக்குதல் (team building) மற்றும் வியூகங்களை ஏற்படுத்துதல் (strategy building) போன்றவற்றில் அதிகம் கவனம் செலுத்துபவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் திட்டத்தை உருவாக்கி சரியாக செயல்படுத்துகிறார்கள்.
சிறந்த உள்ளமைப்பு முறை உருவாக்குதல், நல்ல பணிக்குழுவை ஏற்படுத்துதல் மற்றும் தொழில் முன்னேற்றத்திற்கான வியூகங்களை வகுத்தல் ஆகியவற்றை கவனத்தில் கொள்ளாமல் தொழிலில் வெற்றி பெற இயலாது. தொழிலுக்கான இடத்தை தேர்வு செய்தல், தொழிலுக்கு தேவையான உபகரணங்களை வாங்கி பராமரித்தல், தொழிலுக்கு தேவையான சரக்குகளை வாங்குதல் போன்றவை மூலமாக உட்கட்டமைப்பை மேம்படுத்த இயலும்.
இரண்டு பணியாளர்களை வைத்திருந்தாலும் 100 பணியாளர்களை வைத்திருந்தாலும் பணியாற்றும் குழுவினருக்கு தகுந்த வழிகாட்டுதல்களை வழங்குவதும் (guidance) தொழிலை மேம்படுத்த தேவைப்படும் இலக்குகளை (achieve goals) அடைய உரிய பணியை செய்யுமாறு நிர்வகிப்பதும் (management) பணியாளர் குழுவை உருவாக்கும் திட்டத்தில் மிக அவசியமானவையாகும். பணியாளர்களுக்கு சரியாக சம்பளம் வழங்குவது அவர்களின் நலன்களை காப்பது உள்ளிட்ட அம்சங்களையும் மனதில் கொள்ள வேண்டும்.
தொழில் வெற்றி பெற்வதற்கான வியூகங்களை திட்டமிட்டு செயல்படுத்துவது வெற்றிக்கு அடித்தளம் ஆகும். வாடிக்கையாளர்களை ஈர்ப்பது, நல்ல லாபத்தில் விற்பனை செய்வது, சந்தையில் நல்ல பெயரை பெறுவது, பொதுமக்களிடமும் தொடர்புடைய அரசு துறைகளிலும் நல்ல உறவுகளை பேணிக்காப்பது, தொழிலில் உள்ள நிதியை சொந்த செலவுக்கு மற்ற முதலீடுகளுக்கும் பயன்படுத்தாமல் தொழிலுக்கு மட்டும் பயன்படுத்துவது உள்ளிட்ட அணுகுமுறைகளைக் கொண்டு செயல்படுவது வெற்றிக்கு வழிவகுக்கும்.
எந்த ஒரு உட்கட்டமைப்பு திட்டத்தையும் குழு திட்டத்தையும் வியூக திட்டத்தையும் முழுமையான எழுத்து வடிவில் (documentation) பராமரிப்பது அவசியமாகும். கணக்குகளை சரியாக பராமரித்தல், நியாயமான வணிக முறைகளை பின்பற்றுதல், குறைபாடு இல்லாத சேவைகளை வழங்குதல் போன்றவை வெற்றிக்கு அத்தியாவசியமான அம்சங்கள் ஆகும்.
திட்டமிடுதலும் அதனை செயல்படுத்துவதும் இணை கோடுகள் போன்றவை. வெற்றுத்திட்டம் வெற்றியை தராது. அதைப்போல திட்டமிடாத செயல்பாடுகளும் வெற்றியை தருவதில்லை. சிறந்த திட்டமும் சரியான செயல்பாடும் வியூகங்களுடன் வெற்றியைத் தரும் என்பதில் மாற்றமில்லை.
உள்ளமைப்பு முறை (internal system), குழு (team) மற்றும் வியூக வடிவம் (strategy plan) ஆகியவற்றை உருவாக்கி (building) செயல்படுத்துவதன் மூலம் தான் இன்று தொழில் புரியும் இடத்துக்கு செல்லாவிட்டால் தொழில் நடக்காது என்ற நிலையை மாற்ற இயலும். நானே எல்லா வேலையும் செய்ய வேண்டும். நானே பணியாளர்களை கவனிக்க வேண்டும் என்ற சூழ்நிலையை மாற்ற இயலும் நான் இல்லை எனில் தொழில் செய்ய முடியாது என்ற நிலையை மாற்றி தானியங்கி தொழில் முறையை (auto pilot mode) உருவாக்குபவர்களே தொழிலில் வெற்றியாளர்களாக திகழ முடியும்.
பூங்கா இதழ் (The News Park) கருத்து: நீங்கள் செய்வது குறு தொழிலாகட்டும், சிறு தொழிலாகட்டும் தானியங்கி தொழில்முறையை உருவாக்குங்கள்! வெற்றி பெறுங்கள்! வாழ்த்துக்கள்!
“நுகர்வோர் பூங்கா” படிக்க இங்கே தொடுங்கள்! (Click here)
எங்களது வெளியீடுகள் (Our Current and Upcoming publication) – இதழ்களின் பெயரை தொட்டால் இதழ்களின் இணையதளத்துக்கு செல்லலாம் (Click the heading of journals, see the concern website) |
வெகுஜன வெளியீடுகள் (Popular Park) |
நுகர்வோர் பூங்கா (தமிழ்) – இணைய இதழ் |
நுகர்வோர் பூங்கா (ஆங்கிலம்) – இணைய இதழ் |
பூங்கா இதழ் (தமிழ்) – இணைய இதழ் |
தி நியூஸ் பார்க் (ஆங்கிலம்) – இணைய இதழ் |
தி நியூஸ் பார்க் மொபைல் பயன்பாடு (Mobile App) – soon |
ஆராய்ச்சி வெளியீடுகள் (Research Park) |
சட்டம், மேலாண்மை மற்றும் சமூக அறிவியல் ஆராய்ச்சி இதழ் |
சர்வதேச நிறுவனங்கள், அரசியலமைப்பு சட்டம், ஆட்சியியல் ஆராய்ச்சி இதழ் |
குற்றங்கள், விபத்துகள், குற்றவியல் சட்டம், பாதிக்கப்பட்டோரியல் ஆராய்ச்சி இதழ் |
அமைதி உத்திகள் மற்றும் ஆராய்ச்சி இதழ் |
விண்வெளி, கடல், ஆகாயம் ஆராய்ச்சி இதழ் |
வாக்காளரியல் (Voterology) ஆராய்ச்சி இதழ் |
பூங்கா இதழ் நுகர்வோர் பூங்கா வாட்ஸ் அப் சேனலில் இணையுங்கள்! இணைய இங்கே தொடவும். Click Here!