Advertisement

உலக கோடிஸ்வரர் பில் கேட்ஸ் மகளை திருமணம் செய்ய என்ன தகுதி வேண்டும்? வலைத்தளத்தில் படித்தது

பணக்கார மனிதன் என்றால் அவருக்கு வங்கி சேமிப்பில் முடிவே இல்லாத பணம், எண்ணற்ற வீடுகள், விடுமுறைகள், ஆடம்பரமான,  அழகான உடைகள், கார் வகைகள், நவீன உபகரணங்கள், வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து வசதிகளும் இருக்கவேண்டும்! ஆனால், உலகத்திலேயே  நான்காவது கோடீஸ்வரரான பில்கேட்ஸ்–க்கு  சற்று  வித்தியாசமான பார்வை இருக்கிறது.

சில ஆண்டுகளுக்கு முன், அமெரிக்காவில் நிதி மற்றும் முதலீடு பற்றி ஒரு மாநாடு நடந்தது. அதில் “உலகத்தில் மிகப்பெரிய பணக்கார மனிதர்களில் ஒருவரான அவர், அவரது மகள் ஒரு எளிமையான நபரை திருமணம் செய்து கொள்வதை ஏற்றுக் கொள்வாரா?“ பில் கேட்ஸ்இடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறிய பதிலை பாருங்கள்.

“என் மகள் ஒரு ஏழை மனிதனை திருமணம் செய்து கொள்ளமாட்டாள். முதலில், செல்வம் என்பது வங்கி  அக்கவுண்டில் இருக்கும்  ஏராளமான பணம் அல்ல.    செல்வத்தை அல்லது பணத்தை உருவாக்குவதற்கான திறமை வேண்டும். அதுவே முதன்மையானது. எடுத்துக்காட்டாக, லாட்டரியில் வெற்றி பெற்றோ அல்லது சூதாட்டம் மூலமாக  கிடைத்த பணத்தை வைத்து ஒருவரை பணக்காரர் என்று  ஏற்றுக்கொள்ள முடியாது. அவரிடம் நூறு மில்லியன்  இருந்தாலும், நிறைய பணம் இருந்தும், அவர் ஒரு ஏழை மனிதர்தான். லாட்டரி மூலம்  மில்லியனர் ஆனதில், 90% பேர்  5 ஆண்டுக்குள் மீண்டும் ஏழையாகி விடுகின்றனர்”.

“நம்மிடம் பணக்கார மனிதர்கள் இருக்கிறார்கள்,   ஆனால் அவர்களிடம் பணம் இல்லை. இந்த உலகத்தில் இருக்கும் தொழில் முனைவோர்களில்  பெரும்பாலானோர்களிடம்  இப்போது பணம் இல்லாமல் இருந்தாலும், அவர்கள் பணத்தை சம்பாதிக்கும் வழியில் இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் நிதி நுட்பத்தை அபிவிருத்தி செய்து கொண்டு  இருக்கிறார்கள். இதுதான்,  என்னைப் பொறுத்தவரை உண்மையான செல்வத்திற்கு  சமமானது. (அதாவது,  சம்பாதிப்பதற்கான திறமை) எனவே, இவர்களை  பணக்காரர்கள் என வகைப்படுத்தலாம்”.    

“எனவே, பணக்காரருக்கும், ஏழைக்கும் வேறுபாடு எங்கே இருக்கிறது?  பணக்காரன், மேலும் மேலும் பணத்தை சம்பாதித்துக் கொண்டு தன்னை  அழித்துக்கொண்டு  இருக்கிறான்; ஏழை வெறுமனே  நேரத்தை அழித்துக்கொண்டு இருக்கிறான். தனக்கென்று சிறந்த பார்வைகளும், லட்சியங்களும்,  நேர்மையான ஆசைகளையும்  தொடர்ந்து கற்றுக்கொள்கின்ற ஒரு இளைஞனைப் பார்த்தால்,   அவனேதான் பணக்கார மனிதன்”. 

“எப்போதும் பிரச்சனை அல்லது கஷ்டம்தான் தன் நிலைமை என்றும், பணக்காரர்கள் எல்லோரும்  திருடர்கள், எல்லோரையும்  எப்போதும் விமர்சித்துக் கொண்டும், பிறர்க்கு உரியதை தனக்கு என்று ஆக்கிக் கொள்பவர்தான் உண்மையில் ஏழை மனிதன்.    பணக்காரன் தனக்கு  தகவல்களும், பயிற்சிகளும் தந்துவிட்டால் மட்டும் போதும், அதைக்கொண்டு தான்   முன்னேறி விடுவேன் என்று திருப்தி அடைகிறான். ஏழையோ, தாங்கள் முன்னேறுவதற்கு, அடுத்தவர்கள் தங்களுக்குப் பணம் தர வேண்டும் என்று நம்புகிறார்கள்”.     

“நான் என் மகள் ஏழை ஒருவனை மணம் செய்ய முடியாது என்று கூறியது,  பொருளாதார நிலைமையைப் பொறுத்து இல்லை.  நான் குறிப்பிட்டது, ஏழை மனிதனின் திறமையின்மையை மட்டும்தான்.    அதாவது, அவனுக்கு செல்வத்தை உற்பத்தி செய்வதில் திறமை இல்லை.    நான் இதைக் கூறுவதற்காக, என்னை மன்னித்து விடுங்கள்.     ஏழைகளில் நிறைய பேர்  குற்றவாளிகளாக இருக்கிறார்கள். தாங்கள் சொந்தமாக பணம் சம்பாதிக்கும் திறமையில்  அவர்கள் குறைபாடுடன்  இருக்கிறார்கள். அவர்கள் பணத்தைக் காணும்போது மனதைத் தவற விடுகிறார்கள்.  எனவே அவர்கள் திருடவும், கொள்ளை அடிக்கவும் செய்கிறார்கள்”.     

“ஒரு முறை, ஒரு பேங்கில் வேலை செய்யும் காவலாளி,   பணம் நிரம்பி இருக்கும் பை ஒன்றைக் கண்டு பிடித்தார். அதை உடனே மேனேஜரிடம் சென்று கொடுத்தார்.  அந்த சமயத்தில், இந்த நல்ல மனிதரை, அனைவரும் முட்டாள் என்றார்கள். அவரிடம் பணமே இல்லாவிட்டாலும், உண்மையில் அவர் ஒரு பெரிய பணக்காரர் என்பது இவர்களுக்குத் தெரியாது.  பிறகு, அந்த வங்கி  அவருக்கு வரவேற்பாளார்  வேலையைக் கொடுத்தது. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் அந்த வங்கியில் ‘கஸ்டமர் சர்வீஸ் மேனேஜர்’ ஆனார். 10 ஆண்டுகளுக்குப் பிறகு, மண்டல கிளை நிர்வாகி ஆனார்! இன்று அவர் 100 ஊழியர்களை வைத்து வேலை வாங்கும் நிர்வாகி. அவரது தற்போதையை  வருடாந்திர போனஸ், முன்பு அவரைத் திருடும்படி கூறப்பட்ட  பணத்தை விட மிகமிக  அதிகமானது! நண்பர்களே, செல்வம் என்பது மனதின் நிலையைப் பொறுத்தது!” பில் கேட்ஸ் இவ்வாறாக முடிக்கிறார்.

பணக்காரரைப் பற்றிய பில் கேட்ஸின் முழுமையான பார்வை இப்போது நமக்குப் புரிகிறது. “இதிலிருந்து நீங்கள் என்ன எடுத்துக் கொள்கிறீர்கள்?     உங்களை நீங்கள் என்னவென்று நினைக்கிறீர்கள், பணக்காரரா அல்லது  ஏழையா?”

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Google search engine

Latest Articles