அமைதிக்கான உத்திகள் நிறுவனத்தின் சார்பில் நுகர்வோர் பூங்கா (theconsumerpark.com), பூங்கா இதழ் (thenewspark.in) ஆகிய இணைய இதழ்கள் தமிழில் வெளியாகி வருகின்றன. வரும் 2024 ஜூலை முதல் தேதியில் இருந்து ஆராய்ச்சி பூங்கா (researchpark) என்ற இணைய இதழ் வெளியிடப்பட உள்ளது. நுகர்வோர் பூங்கா, பூங்கா இதழ் ஆகியவற்றின் ஆங்கில மொழி இணைய இதழ்களும் வரும் 2024 அக்டோபர் முதல் தேதியில் இருந்து தொடங்கப்பட உள்ளது. 2025 ஜனவரி முதல் நாளில் இருந்து சர்வதேச அமைதிக்கான உத்திகள் கல்வி நிறுவனம் செயல்பட உள்ளது.
நுகர்வோர் பூங்கா மற்றும் பூங்கா இதழ் ஆகிய இணைய இதழ்கள் சார்பில் மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் செய்தியாளர்/கட்டுரையாளர் மற்றும் சந்தைப்படுத்துதல் பயிற்சி வழங்கப்படுகிறது. இந்த பயிற்சிகளுக்கு கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களிடமிருந்தும், 25 வயதுக்கு மிகாத பட்டப்படிப்பை முடித்த இளைஞர்களிடமிருந்தும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
திட்ட அம்சங்கள்
01. பயிற்சி காலம் (Tenure) : பயிற்சியில் இணையும் நாளிலிருந்து ஓராண்டு காலமாகும். பயிற்சி காலத்தை முழுமையாக நிறைவு செய்பவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சியின் போது இணையதளம், அலைபேசி வாயிலாக தகுந்த பயிற்சிக்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்படும் (assignment/work from home). ஓராண்டு பயிற்சி காலத்தில் ஓரிரு முறை மட்டும் நேரில் அழைப்பதற்கான வாய்ப்பு உண்டு.
02. மதிப்புமிகு ஊக்கத்தொகை (Incentive) : செய்தியாளர்/ கட்டுரையாளர் பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் எவ்வித பயிற்சி கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. இதை போலவே பயிற்சியின் போது எவ்வித ஊக்க தொகையும் வழங்கப்படமாட்டாது. சந்தைப்படுத்துதல் பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு சந்தைப்படுத்துதலில் அடையும் இலக்குகளுக்கு தகுந்தவாறு ஊக்கத்தொகை வழங்கப்படும். செய்தியாளர்/ கட்டுரையாளர், பயிற்சிக்கு விண்ணப்பிப்பவர்கள் விரும்பினால் சந்தைப்படுத்துதல் பயிற்சியையும் கூட்டாக தேர்வு செய்யலாம்.
03. தேர்வு செய்யப்படும் பயிற்சி செய்தியாளர்கள்/கட்டுரையாளர்கள் சமர்ப்பிக்கும் படைப்புகள் தகுதி வாய்ந்தவையாக இருப்பின் இணைய இதழ்களில் படைப்பாளரின் புகைப்படத்துடன் வெளியிடப்படும்.
தகுதிகள்
04. பொது தகுதி: தமிழ் மொழியை நன்கு பேச, படிக்க எழுத தெரிந்திருக்க வேண்டும். மின்னஞ்சல் தகவல் தொடர்பு, இணையதள பயன்பாடு போன்றவற்றை அறிந்திருக்க வேண்டும். ஆங்கில மொழியை நன்கு பேச, படிக்க, எழுத தெரிந்திருப்பது கூடுதல் தகுதியாகும்.
05. செய்தியாளர்/கட்டுரையாளர் பயிற்சிக்கு விண்ணப்பிப்பவர்கள் தமிழகத்தில் உள்ள கல்லூரியில் படிக்கும் மாணவராக அல்லது பட்டப்படிப்பை முடித்து 25 வயதுக்கு மிகாத இளைஞராக இருக்க வேண்டும். வணிக சந்தைப்படுத்துதல் பயிற்சிக்கு எம்பிஏ படிக்கும் மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
06. வணிக சந்தைப்படுத்துதல் பயிற்சிக்கு கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கல்லூரியில் படிக்கும் மாணவராக அல்லது பட்டப்படிப்பை முடித்து 25 வயதுக்கு மிகாத இளைஞராக இருக்க வேண்டும். இத்திட்டம் பிற மாவட்டங்களுக்கு விரைவில் விரிவுபடுத்தப்படும்.
விண்ணப்பிக்கும் முறை
07. கீழே கொடுக்கப்பட்டுள்ள மாதிரியில் [email protected] மற்றும் [email protected] என்ற மின்னஞ்சலில் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட வேண்டும் அல்லது இங்கு கொடுக்கப்பட்டுள்ள கூகுள் படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும் அல்லது https://forms.gle/CXdzyUPg3ah2mSfQ8 என்ற இணையதள கூகுள் படிவம் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு (short listed candidates) இணையதள வழியில் அல்லது நேரடியாக நேர்முகத் தேர்வு நடத்தப்படும். நேர்முக தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு பயிற்சிக்கான கடிதமும் இணைய இதழின் பெயருடன் அடையாள அட்டையும் வழங்கப்படும்.
பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டால் விண்ணப்பதாரர் 18 வயது நிறைவு பெறாதவர் எனில் பெற்றோர் அல்லது காப்பாளரின் சம்மத கடிதம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
வேண்டுகோள்: இத்திட்டத்தில் மாணவர்களும் இளைஞர்களும் பங்கேற்கும் வகையில் இதனை படிப்பவர்கள் பலருக்கும் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது