இனிய வணக்கம்…. நேர்மையும் நம்பிக்கையும் உள்ளவர்கள் தங்களது முயற்சிகளில் வெற்றியடைகிறார்கள் – கிரிஸ் Success comes to those who are honest and confident in their endeavor. – Chris 🎋💐🌸☘🌺🎋💐🌸☘🌺 |
எது கெடும் ? என்று பல ஆண்டுகளுக்கு முன்னர் அவ்வையார் சொன்னதை ஒரு நிமிடம் படியுங்கள்! இன்றளவும் உண்மையாக திகழ்கிறது.
(01) பாராத பயிரும் கெடும்.
(02) பாசத்தினால் பிள்ளை கெடும்.
(03) கேளாத கடனும் கெடும்.
(04) கேட்கும்போது உறவு கெடும்.
(05) தேடாத செல்வம் கெடும்.
(06) தெகிட்டினால் விருந்து கெடும்.
(07) ஓதாத கல்வி கெடும்.
(08) ஒழுக்கமில்லாத வாழ்வு கெடும்.
(09) சேராத உறவும் கெடும்.
(10) சிற்றின்பன் பெயரும் கெடும்.
(11) நாடாத நட்பும் கெடும்.
(12) நயமில்லா சொல்லும் கெடும்.
(13) கண்டிக்காத பிள்ளை கெடும்.
(14) கடன்பட்டால் வாழ்வு கெடும்.
(15) பிரிவால் இன்பம் கெடும்.
(16) பணத்தால் அமைதி கெடும்.
(17) சினமிகுந்தால் அறமும் கெடும்.
(18) சிந்திக்காத செயலும் கெடும்.
(19) சோம்பினால் வளர்ச்சி கெடும்.
(20) சுயமில்லா வேலை கெடும்.
(21) மோகித்தால் முறைமை கெடும்.
(22) முறையற்ற உறவும் கெடும்.
(23) அச்சத்தால் வீரம் கெடும்.
(24) அறியாமையால் முடிவு கெடும்.
(25) உழுவாத நிலமும் கெடும்.
(26)உழைக்காத உடலும் கெடும்.
(27) இறைக்காத கிணறும் கெடும்.
(28) இயற்கையழிக்கும் நாடும் கெடும்.
(29) இல்லாலில்லா வம்சம் கெடும்.
(30) இரக்கமில்லா மனிதம் கெடும்.
(31) தோகையினால் துறவு கெடும்.
(32) துணையில்லா வாழ்வு கெடும்.
(33) ஓய்வில்லா முதுமை கெடும்.
(34) ஒழுக்கமில்லா பெண்டிர் கெடும்.
(35) அளவில்லா ஆசை கெடும்.
(36) அச்சப்படும் கோழை கெடும்.
(37) இலக்கில்லா பயணம் கெடும்.
(38) இச்சையினால் உள்ளம் கெடும்.
(39) உண்மையில்லா காதல் கெடும்.
(40) உணர்வில்லாத இனமும் கெடும்.
(41) செல்வம் போனால் சிறப்பு கெடும்.
(42) சொல்பிறழ்ந்தால் பெயரும் கெடும்.
(43) தூண்டாத திரியும் கெடும்.
(44) தூற்றிப்பேசும் உரையும் கெடும்.
(45) காய்க்காத மரமும் கெடும்.
(46) காடழிந்தால் மழையும் கெடும்.
(47) குறி பிறழ்ந்தால் வேட்டை கெடும்.
(48) குற்றம் பார்த்தால் சுற்றம் கெடும்.
(49) வசிக்காத வீடும் கெடும்.
(50) வறுமை வந்தால் எல்லாம் கெடும்.
(51) குளிக்காத மேனி கெடும்.
(52) குளிர்ந்து போனால் உணவு கெடும்.
(53) பொய்யான அழகும் கெடும்.
(54) பொய்யுரைத்தால் புகழும் கெடும்.
(55) துடிப்பில்லா இளமை கெடும்.
(56) துவண்டிட்டால் வெற்றி கெடும்.
(57) தூங்காத இரவு கெடும்.
(58) தூங்கினால் பகலும் கெடும்.
(59) கவனமில்லா செயலும் கெடும்.
(60) கருத்தில்லா எழுத்தும் கெடும்.
வெற்றிக்கு வழிகாட்டும் முன்னுரிமை நிர்ணயம்
வாழ்க்கையில் வெற்றி அடைய வேண்டுமானால் முதலில் உங்கள் முன்னுரிமைகளை நிர்ணயித்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு எது வேண்டாம்? என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டாம். நீங்கள் எப்படி இருக்க விரும்புகிறீர்கள் என்று பாருங்கள். அதனை நோக்கி வேலை செய்யுங்கள்.

உங்கள் திறமை, தகுதி, நீங்கள் வாழும் சூழ்நிலைக்கு ஏற்றாற்போல நிலைமை வழிக்கு வரும். எந்த விதமான வீட்டில் வாழ வேண்டும்? எந்தவிதமான செயல் செய்ய வேண்டும்? என்று நினைப்பதை விட்டு விட்டு, “நான் மற்றவர்களுக்கு உதவும் நோக்கத்தில் இருக்க விரும்புகிறேன், நலமாக, மகிழ்ச்சியாக வாழ விரும்புகிறேன்” என்று சொல்லத் தொடங்குங்கள். மற்ற செயல்கள் இதைச் சுற்றித் தானாகச் சீரடையும்.
நீங்கள் அன்றாடம் பத்து மைல் நடக்கலாம், ஒரு விலை உயர்ந்த கார் வைத்திருக்கலாம் அல்லது ஒரு சைக்கிளில் பவனி வரலாம் – அதுவல்ல முக்கியம். உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வது, அதன் ஒவ்வொரு அம்சத்தையும் அனுபவிப்பது அது தான் முக்கியம், இல்லையா? மற்ற செயல்கள் எல்லாம் வசதிக்காக நாம் செய்து கொள்ளும் ஏற்பாடுகள் மட்டுமே.
இன்னொருவரை விட நன்றாய் வாழ்வதே நல்வாழ்வு என்று, அதைப் பற்றி புரிந்துக் கொள்ளாதவர்கள் பலர் நினைக்கிறார்கள். இன்னொருவரை விட நன்றாக இருக்க வேண்டும் என்று விரும்புவது நல்வாழ்வு அல்ல, அது ஒரு நோய்.
இன்னொருவரை விட, நன்றாக இருக்க முயற்சி செய்து பலர் தங்களைத் தாங்களே அழித்துக் கொள்கின்றனர். இன்னொருவரை விட நன்றாக இருக்க வேண்டும் என்பதையே நினைத்துக் கொண்டிருந்தால் உங்கள் முழுத் திறன் மலராது. வாழ்க்கையில் உங்களுக்கு எது முன்னுரிமை என்று உறுதி செய்து கொண்டப் பின், உங்கள் முழுத் திறனோடு என்ன செய்ய முடியுமோ அதைச் செய்யுங்கள். என்ன நடக்க வேண்டுமோ, அது நிச்சயம் நடக்கும்.
பூங்கா இதழ் (The News Park) கருத்து: அவ்வையாரின் பொன்மொழிகள் இன்றளவும் ஏற்புடையதாக நிலைத்து நிற்கிறது என்பதில் ஐயமில்லை.