புதிய இணையதளங்கள்! புதிய வாய்ப்புகள்! பார்வையிடுங்கள்! பயன்படுத்துங்கள்!
அறிவு மேம்பாட்டுக்கும் ஆய்வு மேம்பாட்டுக்கும் அமைதிக்கான மக்கள் அமைப்பின் இணைய இதழ்கள் வழி வகுக்கும் என்று நாமக்கல் அரசு சட்டக் கல்லூரியின் முதல்வர் டி. ஆர். அருண் தலைமை உரையில் தெரிவித்தார் தெரிவித்தார். சமூக செயல்பாட்டாளர் கண்ணன், பத்திரிக்கையாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.
இதுதான் உலகமா? – படித்ததில் பிடித்தது
அனுமன், சஞ்சீவி மூலிகையைக் கொண்டுவரும் பயணத்திற்கு, முறைப்படி அயோத்தி அரசரது அனுமதியைப் பெறவில்லை.
அனுமன் ஒரு அரசின் நான்காம் நிலை ஊழியர். எனவே, அவருக்கு வான் வழிப்பயணம் அனுமதி இல்லை. சஞ்சீவ மூலிகை கொண்டு வரச் சொன்னால் சஞ்சீவ மலையை கொண்டு வந்தது கூடுதல் சுமையை ஏற்படுத்தி அதிக செலவுக்கு வழிவகுத்து விட்டது. அவரது செயலால் ஏற்பட்ட அதிக செலவுக்கு அனுமதி இல்லை
வாழ்த்து மழை பொழிந்த வாக்காளர் சாமி
இன்று முதல் தங்கள் நிறுவனத்தால் தொடங்கப்பட உள்ள, நுகர்வோர் பூங்கா ஆங்கில இணைய இதழ், பூங்கா இதழ் ஆங்கில இனிய இதழ், பூங்கா இதழின் மொபைல் செய்தி தளம் (The News Park Mobile App) ஆகியவையும் சட்டம் மேலாண்மை மற்றும் சமூக அறிவியல் ஆய்வு இதழ் (The Journal of Law, Management and Social Science Research), அமைதிக்கான உத்திகள் ஆய்வு இதழ் (The Journal of Peace Strategies and Research), வாக்காளரியல் ஆய்வு இதழ் (The Journal of Voterology and Research) ஆகியவையும் சிறப்பான வெற்றியைப் பெற வாழ்த்துக்கள்!,
உயிரைக் கொல்லும் பாதுகாப்பற்ற உணவு பார்சல்கள்! படியுங்கள்! அனைவருக்கும் தெரிவியுங்கள்!
பிளாஸ்டிக் கவரில் வேக வைக்கப்படும் இட்லி, பிளாஸ்டிக் வடிகட்டியில் வடிகட்டப்படும் தேநீர், பிளாஸ்டிக் பாட்டிலில் அடைக்கப்பட்டு உபயோகிக்கப்படும் உணவுப் பொருட்கள் போன்றவை ஆபத்தை உருவாக்கும் கருவிகள் ஆகும். உணவு வகைகளை பொட்டலம் செய்வதற்கு வாழை இலை, தாமரை இலை, தேக்கு இலை போன்றவற்றை சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் வரை தமிழர்கள் பயன்படுத்தி வந்துள்ளார்கள். தற்பொழுது இத்தகைய பொட்டல முறை மறக்கப்பட்டு வருகிறது.
உயர் நீதிமன்ற உத்தரவுப்படி ஒவ்வொரு மாவட்டங்களிலும் முதியோர் இல்லங்களை அமைப்பது எப்போது?
இதனை செயல்படுத்துவதற்கு முன்பாக இந்த ஆணையத்தை அமைக்கும் வகையில் முதியோர் உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தை நாடாளுமன்றம் இயற்ற வேண்டும் என்பதே முதியோர்களின் விருப்பமாக உள்ளது. இன்றைய இளைஞர்களும் நடுத்தர மக்களும் நாளைய முதியவர்கள் என்பதை மறந்து விடக்கூடாது. நாளைய நமது உரிமைகளை இன்றே முதியோர்களுக்கு வழங்குவது அவசியமானதாகும்.
உதயநிதி துணை முதல் அமைச்சர், செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சர், உலகப் போர் அபாயம், தமிழகத்தில் உயர் பதவிகளை...
மத்திய தகவல் ஆணையத்தில் இதுவரை தமிழகத்தைச் சார்ந்த எவரும் தகவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டதில்லை தற்போது எட்டு தகவல் மத்திய தகவல் ஆணையர்களை நியமிக்கும் பணியை மத்திய அரசு விரைவு படுத்தியுள்ளது இந்த முறை தமிழகத்தை சார்ந்து ஒருவருக்கு மத்திய தகவல் ஆணையர் பதவி கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.தமிழ்நாடு லோக் ஆயுக்தாவிற்கு நிரந்தர தலைவரும் காலியாக உள்ள இடங்களில் இரண்டு புதிய உறுப்பினர்களும் தற்போது வரை நியமனம் செய்யப்படவில்லை. ஆனால், உடனடியாக இந்த நியமனங்களை செய்ய அரசு தீவிரமாக உள்ளது.
அழகான தேவதை அருகில் கைகளை இழந்த ஆண் அமருவதா? விமானத்தில் ஏற்பட்ட பிரச்சனை – படித்ததில் பிடித்தது
"மேடம், நீங்க எடுத்திருக்கிற டிக்கெட் எக்கானமி கிளாஸ். ஆனா எக்கானமி க்ளாஸ்ல உங்களுக்கு ஒதுக்குறதுக்கு வேற சீட் இல்லை. முதல்வகுப்பு பிரிவில் மட்டும் தான் ஒரு சீட் காலியா இருக்கு. ஆனாலும் நீங்க எங்களோட மதிப்பு வாய்ந்த பயணி. உங்களோட கோரிக்கையையும் பரிசீலிக்காம இருக்க முடியாதே. அதனால, எங்கள் பயண வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு எக்கானமி கிளாஸ் பயணி ஒருத்தருக்கு முதல் வகுப்பு சீட்டை ஒதுக்க போறோம் கொஞ்சம் பொறுங்க" அப்டின்னு சொன்னதும் அந்த பெண்மணிக்கு சந்தோசம் தாங்கல.
அழிகிறதா? அழிக்கப்படுகிறதா? நொய்யல் ஆறு
தீத்திப்பள்ளம், சென்னனூர் பள்ளம், ஸ்பிக் பள்ளம், இருட்டு பள்ளம், ஆகிய 34 ஓடைகள் ஏற்கனவே அழிந்த நிலையில் தற்போது மசவொரம்பு என்ற நொய்யலின் துணையாறு அழிவின் விளிம்பில் நிற்கிறது. மசவரம்பு ஆற்றில் மழைக்காலங்களின் பொழுது வரும் தண்ணீர் நொய்யலில் கலக்கின்றது. இந்த ஆறு கால்வாய் நீரினால் மாசடைந்து உள்ளது. இயற்கை ஆர்வலர்கள் பலராலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில் ஆற்றின் விளிம்பில் கால்வாய் வெட்டி கழிவு நீர்கள் தற்பொழுது சேமிக்கப்படுகின்றது.
வாழ்க்கையையும் சிலர் இப்படித்தான் கடத்துகிறார்கள் – ஒரு நிமிடம் படியுங்கள்
வாகனத்தை பிறர் ஓட்டுமாறு செய்து விட வேண்டாம்! நாமே ஓட்ட வேண்டும்! வாழ்க்கை என்பது ஒரு நீண்ட பயணம்! அதில் நமது கட்டுப்பாட்டில் நமது வாகனத்தை... நிதானமாக நாமே இயக்கிச் செல்லும்போது... நம் வாழ்க்கைப் பயணத்தின் இலக்கை... எல்லையை...எளிதாக... பாதுகாப்பாக.... சென்றடைய நிச்சயம் நம்மால் முடியும்!
உயிரோடு இருக்க வேண்டுமா? இந்த இந்திய தீவிற்கு செல்லாதீர்
இவர்கள் பேசும் மொழி எந்த பழங்குடியினரும் புரிந்து கொள்ள முடியவில்லை. ஏனென்றால் இவர்கள் 60,000 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த பழங்குடியினரிடம் இருந்து தனித்து வந்தவர்கள் என மற்ற பழங்குடியினர் கூறுகின்றனர். மனிதர்கள் விவசாயம் செய்ய ஆரம்பித்தது 20,000 வருடங்களுக்கு முன்புதான். இவர்கள் விவசாயத்தை தெரிந்து கொள்ளாமல் இருப்பதற்கு காரணம் அதற்கு முன்னதாகவே இவர்கள் இத்தீவில் தனித்து வசித்து வருவது தெரிகிறது.