புத்தக வாசிப்பு சரிவால் அதிகரிக்கும் மனநல பிரச்சனைகள் – அலசுகிறார்கள் சட்டக் கல்லூரி மாணவிகள்
சரியும் புத்தக வாசிப்பு - ஆர். லக்ஷிதா, சட்டக் கல்லூரி மாணவி
“ஒரு நூலகம் திறக்கப்படும் போது ஊரில் ஒரு சிறைச்சாலை மூடப்படும் “– விவேகானந்தர், “புரட்சிப் பாதையில் கையில் துப்பாக்கியை விட பெரிய...
ஆறுகள், அருவிகள், காடுகள், விலங்குகள், பறவைகள் அடங்கிய இயற்கையை அனுபவிக்க, அகத்தியரை தரிசிக்க, மலையேற்றத்துக்கு விருப்பமா?
சங்கு முத்திரை பகுதியின் மற்றொரு புறம் உள்ள பள்ளத்தாக்கில் பொருநை என்று சங்க இலக்கியத்தில் அழைக்கப்பட்ட ஜீவநதியான தாமிரபரணி உற்பத்தியாகும் பூங்குளம் என்ற சுனை உள்ளது. இந்த இடத்தில் தாமிரபரணி ஆறு உற்பத்தியாகும் இயற்கையான அழகை கண்டு ரசிக்கலாம். சங்கு முத்திரையிலிருந்து அகத்தியமலை உச்சியை அடையும் வரை உள்ள பாதையானது பெரும்பாலும் செங்குத்தான பாறைகளாக உள்ளன.
ஒரு கழுதை, ஒரு நாய் நிலை குறித்த மனதைத் தொட்ட ஒரு நிமிட கதை
நான் பணியிலிருந்து ஓய்வு பெற்று விட்டேன். உயர் பதவிகளில் இருந்தபோது தீபாவளிக்கு பரிசுப் பொருட்களுடன் எனக்கு வாழ்த்து சொல்பவர்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருப்பர். அவர்கள் பரிசுப் பொருளாக அளித்த பல வகையான இனிப்புகள், பாதாம் பிஸ்தா, பேரீச்சை போன்றவை நிறைந்த பெட்டிகள் இன்னும் பிற பரிசுகள் என, ஒருவர் பின் ஒருவர் என என் அறையில் உள்ளே நுழைந்தால் ஏதோ இனிப்பு பரிசு பொருட்கள் விற்கும் கடையைப் போல எனது அறை இருக்கும்.
இலக்கியமும் சரித்திரமும் கூறும் அகத்தியமலை ஆச்சரியங்கள்.
திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம், காரையாறு அணை, பாணதீர்த்தம் அருவி, பேயாறு உள்ளிட்ட காட்டாறுகளைக் கடந்து, பொதிகைக்குப் பக்தர்கள் சென்று வந்தனர். பொதிகை மலையின் உச்சியில் உள்ள அகத்தியர் சிலையை தரிசிக்க மலையேற்றம் செய்ய வேண்டும். தற்போது, இதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் மாற்று பாதையில் பக்தர்களும் மலையேற்ற பிரியர்களும் இயற்கை ஆர்வலர்களும் செல்லுகின்றனர்.
11 லட்சம் கோடி? எலைட் விஜய்? இரட்டை இலை? பாமக மாறுகிறதா? திமுகவுக்கு 200? கம்யூனிஸ்ட், விசிகவின்...
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுக்கு விவசாயத்திற்கும் குடிதண்ணீருக்கும் பஞ்சம் ஏற்படாமல் இருக்கச் செய்யும் கொடையாளியாக உள்ள பிரமபுத்திரா நதி சீனாவின் ஆட்சியில் உள்ள இமயமலையில் தொடங்கி இந்தியாவுக்குள் நுழைந்து வங்காள விரிகுடாவில் கலக்கிறது. இந்நிலையில் பிரம்மபுத்திரா இந்தியாவுக்குள் நுழைவதற்கு முன்பாக ஆற்றின் குறுக்கே ரூபாய் 11 லட்சம் கோடி செலவு செய்து உலகிலேயே மிகப்பெரிய அணையை கட்ட சீனா தயாராகி வருகிறது. இவ்வாறு நடந்தால் இந்தியாவுக்கு பல்வேறு ஆபத்துகள் உள்ளன. இதுகுறித்து பூங்கா இதழில் சிறப்பு கட்டுரை ஒன்றை எழுதுங்கள்
எதிர் எதிர் கோரிக்கைகள்தான், ஆனால் சாத்தியமே! விவசாய உற்பத்தி பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை தேவை! உணவுப் பொருள்களின்...
குறைந்தபட்ச ஆதரவு விலையை கணக்கிட பல்வேறு காரணிகளை விவசாய செலவுகள் மற்றும் விலைகளுக்கான ஆணையம் ஆய்வு செய்கிறது. இருந்த போதும் குறைந்தபட்ச ஆதரவு விலையை வழங்குவதற்கான கொள்கை ஆவணங்களின் நோக்கம் பல தருணங்களில் தெளிவாக இருப்பதில்லை. இருப்பினும், விவசாய செலவுகள் மற்றும் விலைகளுக்கான கமிஷனின் அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்து வழங்கப்படும் அனைத்து பரிந்துரைகளும் அரசால் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. சில நேரங்களில், அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட விலையில் பெருத்த மாற்றம் ஏற்படுகிறது.
புத்தாண்டுக்கான நேர மற்றும் செயல் நிர்வாகத்தை வடிவமைப்பது எப்படி?
நீங்கள் மாணவராக இருக்கலாம். வேலை தேடும் இளைஞராக இருக்கலாம். விவசாய தொழிலாளியாக இருக்கலாம். விவசாயியாக இருக்கலாம். அரசு அல்லது தனியார் அமைப்பின் பணியாளராக இருக்கலாம், அரசு அல்லது தனியார் அமைப்பில் உயர் பொறுப்பில் இருக்கலாம். தங்களது நிலைக்கு ஏற்ப நேர திட்டம் மற்றும் செயல் திட்டம் ஆகியவற்றை வகுத்து செயல்படுங்கள்! வெற்றி பெறுங்கள்! இந்த ஆண்டில் வெற்றிகளை ஈட்டுங்கள்! பூங்கா இதழின் வாழ்த்துக்கள்!
கருணை கொலை சரிதானா? – பல்கீஸ் பீவி. மு, சட்டக் கல்லூரி மாணவி
ஒரு உயிர் வாழ்ந்தது போதும் என்று நிர்ணயிக்கும் உரிமை யாருக்கு உண்டு? இயற்கைக்கா? கடவுளுக்கா? அல்லது படைத்த ஏதோ ஒரு சக்திக்கா? கருணைக்கொலை என்பது ஒரு மனிதனின் நீண்டகால வேதனை மற்றும் வலியை...
1. வெடித்த மனைவி, 2. சிரித்த கணவன் 3. பூரித்த வாரிசுகள் – சிரிக்கவும் சிந்திக்கவும் படிக்க வேண்டிய...
யோவ் இன்னங்கேளுய்யா.. சமைக்குறது பெரிய விஷயமே இல்லதான். ஆனா, தினமும் சமைக்கணும். தினத்துக்கு மூணு வேளையும் சமைக்கணும்.. வருஷம் ஃபுல்லா சமைக்கணும்... சமைக்கணும்,... நேத்து சமைச்சதையே இன்னிக்கு சமைக்கக்கூடாது... இன்னிக்கு சமைச்சதை நாளைக்கு சமைக்கக்கூடாது, புதுசா சமைக்கும்போது ருசியா சமைக்கணும்.
மாத சம்பளம் வாங்குபவர்கள் பெரும் பணக்காரர்கள் ஆவதில்லை – டீ கடை வெற்றி கதை
நீ இல்லாமவாடா. உன்னையும் சேத்துதான் யோசிச்சிக்கிட்டு இருந்தேன். உன்னையும் சேத்து என்னோட மாத வருமான இலக்கு 3 லட்சம். எப்டியாவது ஒரு நாளைக்கு 1000 பேர் நம்ம டீ காப்பி குடிக்கிற மாதிரி உருவாகிட்டா போதும். இது சாத்தியம் டா அருள். அது மட்டும் இல்ல டீ காப்பி இல 20 க்கும் அதிகமா வெரைட்டி யோசிச்சி வச்சிருக்கேன். நானே நல்ல டீ தூள், காப்பி தூள் ஆர்டர் எடுத்து நம்ம கடைல வித்தியாசமான முறையில கலக்க போறேன். அதோட சீனா பிஸ்கட், கொரியன் பண்ணு , இப்பிடு புதுசு புதுசா டீக்கு சைடு டிஷ் வச்சி, ம்ம். இன்னும் நிறைய ஐடியா இருக்கு. எதிர்காலத்துல இந்த சிட்டிலையே எல்லாரும் என்னோட டீ காப்பி குடிக்கிற அவளுக்கு வரணும்னு நினைக்கிறன். எப்படியும் வருஷத்துக்கு ஒரு கோடி வருமானம் வர்ற மாதிரி உருவாக்கணும். இது என்னோட நீண்ட கடைசி லட்சியம். இப்போதிக்கி மாசம் ஒரு லட்சம் வர்ற மாதிரி உருவாக்குவோம்.