Equivalent economic regions

சமச்சீரான பொருளாதார பிராந்தியங்கள் உருவாக்கப்பட வேண்டும்

ஒவ்வொரு பகுதியிலும் அந்த பகுதிக்கு ஏற்றவாறு தொழில்களை வளர்ச்சி அடைய செய்ய நடவடிக்கைகள் எடுப்பதன் மூலம் வேலை வாய்ப்பின்மை கட்டுப்படுத்தப்படும். இதன் மூலம் அனைத்து பகுதிகளிலும் சாலை, குடியிருப்பு உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்படும். எல்லாவற்றிற்கும் மேலாக மக்களின் ஒற்றுமையும்  கலாச்சாரமும் சிறப்பாக வளரும்.  இதற்கு தேச அளவிலான திட்டத்தை வகுத்து அதனை அமல்படுத்த வேண்டிய தருணம் இதுவாகும் மத்திய, மாநில அரசுகள் உடனடியாக இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள தவறினால் பொருளாதார சமச்சீரின்மை ஏற்பட்டு அதன் காரணமாக பல்வேறு பிரச்சனைகளை மேற்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படும்.
Ma.Po.Si. tamil

சென்னை மாநகராட்சி கொடியில் மீன், புலி, வில் அம்பு சின்னம் பொறிக்க காரணமாக இருந்த ம.பொ.சி.

யார் இந்த ம.பொ.சி? தனது  ஏழ்மை நிலை காரணமாக, மூன்றாம் படிவப் படிப்பை பாதியிலிலேயே நிறுத்திய ம.பொ.சி திறன்மிக்க புத்தக படைப்புகளின் மூலம் தன் பட்டறிவை நிரூபித்தார். சென்னை பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்றக் குழுவில் இருமுறை உறுப்பினராகவும், மதுரை காமராஜர் பல்கலை கழகம் மற்றும் அண்ணாமலைப் பல்கலை கழகம் ஆகியவற்றில்  செனட் உறுப்பினராகவும் பொறுப்பு வகித்திருக்கிறார். இவர் எழுதிய சுதந்திரவீரன் கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் ஆகிய புத்தகங்கள் பின்னாளில் திரைப்படங்களாக எடுக்கப்பட்டன. 
united nations peacekeeping day

ஐ.நா. அமைதிப்படை தினம்: வீர மரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவோம்!

கடந்த 75 ஆண்டுகளில் ஐ.நா. அமைதிப்படையில் பணியாற்றிய 4,300 பேர் பணியின் போது வீரமரணம் அடைந்துள்ளார்கள். கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தின்படி ஒவ்வொரு ஆண்டும் மே 29 அன்று ஐக்கிய நாடுகள் சபை அமைதிப்படை தினமாக அனுசரிக்கப்படுகிறது. அமைதிப்படை பணியில் வீர மரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் அமைதிப்படையில் பணியாற்றிய மற்றும் பணியாற்றி கொண்டு உள்ளவர்களின் சேவையை பாராட்டு விதமாகவும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. 
Calorie calculation

தேவையானதை விட கூடுதல் கலோரி ஆற்றல் தரும் உணவுகளை எடுத்து கொழுப்பை அதிகரிக்கிறீர்களா?

ஒருவருக்கு தேவையான கலோரி அளவைவிட கூடுதலான உணவை சாப்பிடும்போது உடல் தனது தேவைக்கானது போக  கூடுதலாக பெறப்படும் கலோரிகளில்  குறிப்பிட்ட அளவு பங்கை மட்டும் உடல் சேமித்து வைத்துக் கொள்ளும்.  உடலால் சேமிக்க கூடிய அளவையும் விட கூடுதலாக உணவுகள் மூலமாக உடலுக்கு கலோரி கிடைக்கப்பெற்றால் அவை கொழுப்பாக மாறிவிடும்.
using mobile in bike ride

கண்ணாடி இல்லையா-  கைது செய்?

தலைய வளைச்சு செல்போனை பேசி   அடுத்தவங்க உயிரை எடுக்க நினைச்ச நபர்களின் செல்போன்களையும் கைது செய்து நீதிமன்றத்தில் இப்போதே ஒப்படைத்து ஒப்புகை சீட்டு பெற்றுக்கொள்ள வேண்டும். தப்பு செஞ்சவங்க 24 மணி நேரம் கழித்து அதாவது நாளைக்கு மாலை 5 மணிக்கு ஒப்புகை சீட்டை  கொடுத்து செல்போனை பெற்றுக் கொள்ளலாம்
free water education medical facilities

கட்டணமில்லாமல் அனைவருக்கும் குடிநீர், மருத்துவம், கல்வி

பாராளுமன்றத்தில் அடுத்த வாரத்தில் நடைபெறும் முதலாவது கூட்டத் தொடரில் நாட்டில்  உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும் மருத்துவமனைகளும் குடிநீர் உற்பத்தி மற்றும் விற்பனை தொழில்களும் அரசுடமையாக்கும் சட்டம் அரசின் முதலாவது சட்டமாக நிறைவேற்றப்படும் என்றும் நாட்டில் உள்ள அனைவருக்கும் அரசின் சார்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், கல்வி மற்றும் மருத்துவ வசதிகள் வழங்கப்படும் என்றும் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது.
kanakkanpatti sidhar gurunathar

வரும் மே 30: கணக்கன்பட்டியில் சித்தர்களின் குருநாதருக்கு ஆண்டு குருபூஜை

சத்குரு சச்சிதானந்தத்தின் கோட்பாடுகளை தீவிரமாக வலியுறுத்தும் அகண்ட பரிபூரண சச்சிதானந்த முதல் சபையானது கடந்த 1938 ஆம் ஆண்டு கணக்கன்பட்டியில் நிறுவப்பட்டது. பழனியில் இருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள கிராமம் கணக்கன்பட்டி. இந்த கிராமம் சிறந்த ஆன்மீக தலமாகவும் சிந்தனையாளர்களின் பிறப்பிடமாகவும் திகழ்கிறது. வரும் மே 30 அன்று கணக்கம்பட்டி கிராமத்தின் வட எல்லையில் அமைந்துள்ள பெட்டகம்பதியில் நடைபெற உள்ளது. அதே நாளில் கணக்கன்பட்டி கிராமத்தின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள அகண்ட பரிபூரண சச்சிதானந்த சபையிலும் ஆண்டு குரு பூஜை நடைபெற உள்ளது.
Iran president Raisi death murder?

யார் இந்த ரையீசி? ஏன் இந்த பதட்டம்? கொலையா?

ஒவ்வொரு நாட்டிலும் உளவுப்படைகள் (intelligence forces) நாட்டின் நிர்வாக தலைவர்களுக்கு தலைவர்களின் கொள்கையை முன்னெடுத்துச் செல்வதிலும் பாதுகாப்பிலும் முக்கிய பங்கு வைக்கின்றன. இந்தியாவில் இண்டலிஜென்ஸ் ஐ.பி., (I.B.,) என அழைக்கப்படும்  உள்நாட்டு விவகாரங்களை கவனிக்கும் முக்கிய உளவு அமைப்பாகவும் ரா (R.A.W.,) எனப்படும் என அழைக்கப்படும் ரிசர்ச் அண்ட் அனலைசிங் விங் வெளிநாட்டு விவகாரங்களை கவனிக்கும் முக்கிய உளவு அமைப்பாகவும் செயல்படுகிறது. இந்தியாவில் அனைத்து மாவட்டங்களிலும் ஐபி உளவு பிரிவு அதிகாரிகள் தங்கள் யாரென வெளியில் தெரியாமலேயே பணியாற்றி வருகிறார்கள். இதே போலவே நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் ரா உளவு பிரிவு அதிகாரிகள் உலகம் முழுவதும் இந்தியாவிற்காக பணியாற்றி வருகிறார்கள்.
Panchabhuta temples

பஞ்சபூதசிவாலயங்கள்

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்து இயற்கையின்   கொடையானது பஞ்ச பூதங்கள் என அழைக்கப்படுகிறது. பஞ்சம் என்பதன் மறு பொருள் ஐந்து என்பதாகும். பஞ்சபூதத் தலங்கள் என்பவை நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றிற்குரிய  சிவாலயங்களாகும்
Cyber addition effects

ஆபத்தை வழங்கும் தொடுதிரை/இணையதள அடிமைத்தனம்

தொடுதிரை அடிமைத்தனத்தால் “குடும்ப உரையாடல்களை அழித்து விடுகிறோம். நண்பர்களை மறந்து விடுகிறோம். வீதிக்கு வந்து நடப்பதை -விளையாடுவதை மறந்து உடல் நலத்தை கெடுத்து விடுகிறோம். தூக்கத்தை தொலைத்து விடுகிறோம். சமூக அக்கறை என்றால் என்ன விலை? என கேட்கும் நிலைக்கு உள்ளாகிறோம்”. என்று முடியும் இந்த அடிமைத்தனம்? என்று விடியும் வெற்றிக்கான பாதை?