அமைதிக்கான உத்திகள் அமைப்பின் சார்பில் பூங்கா இதழ் (தமிழ்), நுகர்வோர் பூங்கா (தமிழ்), பூங்கா இதழ் (ஆங்கிலம்) மற்றும் நுகர்வோர் பூங்கா (ஆங்கிலம்) ஆகிய வெகுஜன இணைய இதழ்கள் (popular journals) வெளியாகி வருகின்றன. மக்களுக்கு செய்திகள், தகவல்கள் உள்ளிட்டவற்றை கொண்டு சேர்க்கும், கட்டணம் இல்லாமல் (no subscription charge) பயன்படுத்தக்கூடிய, பொது தளமாக (open access) இந்த இணைய இதழ்கள் செயல்பட்டு வருகின்றன. ஓரிரு வாரங்களில் ஆறு ஆராய்ச்சி இதழ்கள் (research journals) தொடர்ந்து வெளியாக உள்ளன. சமூக மேம்பாட்டுக்கு ஆய்வுகள் மூலம் பங்களிக்க தகுந்த ஆதரவை வழங்குவது ஆராய்ச்சி இதழ்களின் நோக்கமாகும். அமைதிக்கான உத்திகள் அமைப்பின் சார்பில் வெளிவரும் இந்த பத்து இணைய இதழ்களின் இணைப்புக்குச் செல்லும் இணைய முகவரிகள் (web ids) இந்த கட்டுரையின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ளன.
கொள்கைகள்
அமைதிக்கான உத்திகள் அமைப்பின் முக்கிய குறிக்கோள் “புதுமையான – உன்னதமான அமைதி கலாச்சாரத்தை உருவாக்குதல்“. பொது நலன் (public interest) மற்றும் ஜனநாயக விழுமியங்களுக்கு (democratic values) அர்ப்பணிப்புடன் நேர்மையான நோக்கத்துடன் (bona fide Intention) நாங்கள் பணியாற்றி வருகிறோம். “உள்ளபடி சொல்வோம் – ஆய்வும் செய்வோம்” என்பதுதான் எங்களின் முதன்மைக் கொள்கை. நடுநிலை வெளியீடு, அங்கீகரிக்கப்பட்ட தகவல், தகவல் சார்ந்த செய்திகள், தரவு சார்ந்த கட்டுரைகள், எளிமையான படைப்பு, பகுப்பாய்வு மற்றும் விசாரணையுடன் வெளியீடு ஆகியவையும் எங்கள் கொள்கைகளாகும்.
கௌரவ நல்லெண்ண தூதர்- கௌரவ புரவலர்
வெகுஜன இதழ்கள் மூலம் மக்களுக்கு செய்தி மற்றும் தகவல் கட்டுரைகளை கொண்டு செல்வதை வலுப்படுத்தவும் ஆராய்ச்சி இதழ்கள் மூலம் சமூக முன்னேற்றத்திற்கான பணியை மேற்கொள்ளவும் எங்களது பத்து இணைய பத்திரிகைகளில் ஒவ்வொரு பத்திரிகைக்கும் வளர்ச்சிக்கு தகுந்த பங்களிப்பை (monetary contribution) வழங்க கூடிய ஒரு நல்லெண்ண தூதரை (Goodwill Ambassadors) நியமிக்கவும் இந்தப் பணிகளை ஆதரிக்கும் நண்பர்களை கண்டறிந்து ஒவ்வொரு பத்திரிக்கையிலும் வளர்ச்சிக்கு தகுந்த பங்களிப்பை (monetary contribution) வழங்க கூடிய ஓரிரு புரவலர்களை (Patron) நியமிக்கவும் அமைதிக்கான உத்திகள் அமைப்பு திட்டமிட்டுள்ளது. இவ்வாறு நியமிக்கப்படும் நல்லெண்ண தூதர்கள் மற்றும் புரவலர்கள் புகைப்படம் சம்பந்தப்பட்ட பத்திரிக்கையில் இரு தரப்பிலும் ஒப்புக் கொள்ளப்படும் காலத்திற்கு இடம் பெறும்.
கௌரவ விரிவாக்க அலுவலர்
அறிவை மேம்படுத்தவும் தகவல்களை வழங்கவும் கட்டணம் இல்லாமல் பொதுதளமாக செயல்படும் பொதுஜன மற்றும் ஆராய்ச்சி பத்திரிகைகளை சமூக ஊடகங்கள் மற்றும் பிற உத்திகள் மூலமாக மக்களுக்கு கொண்டு செல்ல தகுந்த பங்களிப்பை வழங்க தன்னார்வலர்களாக (Volunteer) பணியாற்ற விருப்பம் உள்ள கௌரவ விரிவாக்க (Honorary Extension Officers) அலுவலர்களை அமைதிக்கான உத்திகள் அமைப்பின் சார்பில் நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கௌரவ ஆசிரியர் – ஆசிரியர் குழு உறுப்பினர்
வெகுஜன இதழ்கள் மூலம் மக்களுக்கு செய்தி மற்றும் தகவல் கட்டுரைகளை கொண்டு செல்வதை வலுப்படுத்தவும் ஆராய்ச்சி இதழ்கள் மூலம் சமூக முன்னேற்றத்திற்கான பணியை மேற்கொள்ளவும் எங்களது பத்து இணைய பத்திரிகைகளில் ஒவ்வொரு பத்திரிகைக்கும் வளர்ச்சிக்கு தகுந்த பங்களிப்பை (contribution) வழங்க கூடிய ஒரு கௌரவ ஆசிரியரை (Honorary Editor)) நியமிக்கவும் இந்தப் பணிகளை ஆதரிக்கும் நண்பர்களை கண்டறிந்து ஒவ்வொரு பத்திரிக்கையிலும் வளர்ச்சிக்கு தகுந்த பங்களிப்பை (contribution) வழங்க கூடிய ஓரிரு கௌரவ ஆசிரியர் குழு உறுப்பினர்களை (Honorary Member of Editorial Board) நியமிக்கவும் அமைதிக்கான உத்திகள் அமைப்பு திட்டமிட்டுள்ளது. இவ்வாறு நியமிக்கப்படும் கௌரவ ஆசிரியர் மற்றும் ஆசிரியர் குழு உறுப்பினர்களின் புகைப்படம் சம்பந்தப்பட்ட பத்திரிக்கையில் இரு தரப்பிலும் ஒப்புக் கொள்ளப்படும் காலத்திற்கு இடம் பெறும்.
ஆராய்ச்சி இதழ் ஆசிரியர் குழு உறுப்பினர்
அறிவை மேம்படுத்தவும் தகவல்களை வழங்கவும் கட்டணம் இல்லாமல் பொதுதளமாக செயல்படும் அமைதிக்கான உத்திகள் அமைப்பின் சார்பில் வெளிவரும் ஆராய்ச்சி இதழ்களில் தன்னார்வமாக ஆசிரியர் குழு உறுப்பினராக (Member of Editorial Board) பணியாற்ற கல்லூரிகளில் ஆசிரியராக பணியாற்றும் அல்லது பணியாற்றிய அனுபவம் வாய்ந்தவர்களிடமிருந்து விருப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பொறுப்புக்கு தேர்வு செய்யப்பட முனைவர் பட்டம் பெற்றவராகவும் ஆராய்ச்சி அனுபவம் உள்ளவராகவும் இருக்க வேண்டும்.
எழுத்தாளராக பங்களிக்கலாம்
பொதுவான, உபயோகமான, விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான கட்டுரைகளும் தொழில், வர்த்தகம், விவசாயம், வர்த்தகம், அறிவியல், கல்வி, வேலை வாய்ப்பு, ஆன்மீகம், பண்பாடு, இயற்கை, சுற்றுலா, கலை, திரை, இலக்கியம், விளையாட்டு, ஆரோக்கியம், சட்டம் தொடர்பான கட்டுரைகளும் குழந்தைகள், மகளிர், இளைஞர், மாணவர்கள் உள்ளிட்டவர்களுக்கான சிறப்பு கட்டுரைகளும் அரசியலமைப்பு, பாதுகாப்பு, அமைதி, போர், சர்வதேச உறவுகள் தொடர்பான கட்டுரைகளும் சிறப்பு படைப்புகளும் பூங்கா இதழ் (தமிழ்), நுகர்வோர் பூங்கா (தமிழ்), பூங்கா இதழ் (ஆங்கிலம்) மற்றும் நுகர்வோர் பூங்கா (ஆங்கிலம்) ஆகிய வெகுஜன இணைய இதழ்களுக்கு (popular journals) வரவேற்கப்படுகின்றன. ஆசிரியர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படும் கட்டுரைகள் வெளியிடப்படும். தேர்வு செய்யப்படாத கட்டுரைகளை திருப்பி அனுப்ப இயலாது. தேர்வு செய்யப்படும் கட்டுரைகளுக்கு எவ்வித சன்மானமும் வழங்கப்படாது.
பயிற்சி கட்டுரையாளர்
கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கும் பட்டப் படிப்பை முடித்த 25 வயதை மிகாத இளைஞர்களுக்கும் செய்தியாளர்/கட்டுரையாளர் பயிற்சியை (Trainee columnist) பூங்கா இதழ் வழங்குகிறது. இந்தப் பணியில் இணைந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் மின்னஞ்சல் மூலமாக அல்லது https://thenewspark.in/reporter-columnist-marketing-trainee/ என்ற கட்டுரையில் உள்ள https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdY3IOXe4B8ECgOs06yEgjT3UU6gq7jSGrMoffHHIbViR5o_g/viewform என்ற கூகுள் படிவம் மூலம் விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் பயிற்சி கட்டுரையாளர்களுக்கான பட்டியல் (Panel of Trainee columnist) தயாரிக்கப்பட்டு ஆறு மாதங்களுக்கு பயிற்சி வழங்கப்படும். இந்த பயிற்சியை நிறைவு செய்பவர்களுக்கு தகுந்த சான்றிதழ் வழங்கப்படும்.
ஆராய்ச்சி கட்டுரைகள்
ஆராய்ச்சி இதழ்களின் முதல் பதிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். இதன் பின்னர் ஒவ்வொரு ஆராய்ச்சி இதழிலும் வெளியிடுவதற்கு தகுதி வாய்ந்த ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பிக்குமாறு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆராய்ச்சி இதழ்களில் கட்டுரைகள் உள்ளிட செயலாக்க கட்டணம் செலுத்துவது பொதுவான வழக்கமாக இருப்பினும் எங்களது ஆராய்ச்சி இதழ்களுக்கு சமர்ப்பிக்கப்படும் கட்டுரைகளுக்கு 2025 ஆம் ஆண்டில் எவ்வித கட்டணமும் செலுத்த வேண்டியது இல்லை.
தொடர்புக்கு
வெகுஜன மற்றும் ஆராய்ச்சி பத்திரிகைகள் மூலமாக சமூக பங்களிப்பை புரிய ஆர்வம் உள்ளவர்கள் [email protected] or [email protected] or [email protected] or [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தொடர்பு கொள்ளுமாறு வேண்டப்படுகிறது அல்லது 9487665454 என்ற வாட்ஸ் அப் எண்ணில் தங்களைப் பற்றிய விவரங்களையும் தங்கள் தொடர்பு எண்ணையும் தங்கள் விருப்பத்தையும் அனுப்பலாம். இந்த எண் தகவலை அனுப்ப மட்டுமே – பேசுவதற்கு அல்ல.
விருப்பம் தெரிவிப்பவர்கள் தேர்வு செய்ய தகுதி வாய்ந்தவர்களாக இருக்கும் போது அமைதிக்கான உத்திகள் அமைப்பின் சார்பில் தொலைபேசியில் அல்லது மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளப்படும். இந்த வாய்ப்பை ஆர்வமுள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறும் வெகுஜன மற்றும் ஆராய்ச்சி இதழ்களுக்கு ஆதரவு வழங்குமாறும் அமைதிக்கான உத்திகள் அமைப்பு கேட்டுக் கொள்கிறது.
எங்களது வெளியீடுகள் (Our Current and Upcoming publication) – இதழ்களின் பெயரை தொட்டால் இதழ்களின் இணையதளத்துக்கு செல்லலாம் (Click the heading of journals, see the concern website)
அமைதிக்கான உத்திகள் நிறுவனம் (Tranquility Strategies)
வெளியீடு மற்றும் ஊடகக் குழுவைத் தவிர (Publication and Media Group), எங்கள் நிறுவனத்தின் செயல்பாடுகள் குழு (Promotional Activities Group) மற்றும் சமூகப் பொறியியல் குழுவும் (Social Engineering Group) சமூகத்தை மேம்படுத்தும் நோக்கில் செயல்பட்டு வருகின்றன. எங்கள் செயல்பாடுகள் குழுவானது மூன்று பிரிவுகளைக் கொண்டுள்ளது: மேம்பாட்டுத் திட்டங்கள், படத்தை உருவாக்குதல் மற்றும் நிகழ்ச்சித் திட்டமிடல்.
சமூகப் பொறியியல் குழுவின் எங்கள் அறிவுப் பூங்கா மற்றும் சமூக சேவைப் பிரிவுகள், தாராள மனப்பான்மையுள்ள தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுடன் ஒத்துழைப்பதன் மூலம் சமூகத்திற்கு உதவுவதில் கவனம் செலுத்துகின்றன. எங்கள் சமூக பொறியியல் குழுவானது “அமைதி உத்திகள் மற்றும் ஆராய்ச்சிக்கான சர்வதேச நிறுவனம்” (International Institution of Peace strategies and Research), “விண்வெளி அமைதி மற்றும் ஆராய்ச்சிக்கான சர்வதேச நிறுவனம்”(International Institution of Peace Space and Research) மற்றும் ” வாக்காளரியல் ஆராய்ச்சிக்கான சர்வதேச நிறுவனம்” (International Institution of Voterology and Research) ஆகியவற்றுடன் இணைந்து செயல்படுகிறது. எங்கள் சேவையைப் பற்றி மேலும் அறிய https://tranquilitystrategies.com/ என்ற இணையதளத்தை பார்வையிடலாம்.