Advertisement

மைனஸ் ஃபார்முலா! கழித்தல் – வெற்றியை ஈட்டும் ரகசியம் அறிவீர்!

வாழ்க்கையில் நமக்கு பிடிப்பு ஏற்படுத்தாதவற்றை மைனஸ் என கருதுகிறோம். இரண்டு மைனஸ்களை பெருக்கினால் பிளஸ் உருவாகும் என்ற கணித கோட்பாடு எனக்கு மிகவும் பிடித்ததாகும். இந்த கோட்பாடு வாழ்க்கைக்கு மிகவும் தேவையானது என்று இன்றளவும் பெரிதாக நினைப்பது உண்டு. இதை நம் வாழ்க்கையில் எப்படி கையாள்வது என்பதை பற்றி பல நாட்களில் நான் யோசனையில் இருந்தது உண்டு. 

நம் வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் தடைகளும் அதனால் நமக்கு ஏற்படும் தடுமாற்றமும் முதல் மைனஸ் ஆகும். அது சர்வ நிச்சயமாக அனைவரது வாழ்க்கையிலும் இருப்பது உண்டு. அதனோடு பயணிப்பதுதான் மனித வாழ்க்கையின் இயல்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த முதல் மைனஸ் எவ்வாறாக இருப்பினும் அதனை பொறுத்துக் கொண்டு அதனோடு ஒருங்கிணைந்து நம் வெற்றி பயணத்தை நோக்கி செல்ல வேண்டி உள்ளது. 

முதல் மைனஸ் என்பது தற்செயலாக அமைந்த ஒன்று. பல தருணங்களில் நாம் தடைகளை கடந்து முயற்சி செய்வதையே ஒரு பெரிய பாரமாக கருதி காரணங்களை கூறி அவற்றிலிருந்து திசை திரும்ப முயல்வதே பெரிதளவிலும் நடக்கிறது. தடையை தாண்டும் முயற்சியை நாம் அடுத்த மைனஸ்சாக காண்கிறோம். இதைத்தான் நான் இரண்டாவது மைனஸ்சாக கருதுகிறேன். இரண்டாவது மைனஸ் என்பது உண்மையான மைனஸ் அல்ல. நாம் ஏற்படுத்திக் கொள்ளக் கூடிய ஒன்றாகும்.

கீழே உள்ள தலைப்புகளை படியுங்கள்! பிடித்தால் தலைப்புகளை தொடுங்கள்! முழுவதும் படியுங்கள்!
 
உங்களையும் உங்கள் எண்ணங்களையும் அடையாளப்படுத்த – உங்கள் படைப்புகள் பூங்கா இதழ் மற்றும் நுகர்வோர் பூங்காவில் வெளியாக வேண்டுமா? இங்கே தொடவும் (Click Here!)
 
“உணவகங்கள் ஏற்படும் பிரச்சனைகளும் தீர்வுகளும்” என்பது குறித்த தங்கள் கருத்துக்களை நுகர்வோர் பூங்காவிற்கு அனுப்ப இறுதி நாள்: 21-01-2025. கருத்துக்களும் புகைப்படமும் வெளியாக வெளியாக வேண்டுமா? விவரங்களுக்கு இங்கே தொடவும்.  (Click Here!)  
 
மறைந்து வரும் தமிழர்களின் பழக்க வழக்கங்கள் எவை?” என்பது குறித்த தங்கள் கருத்துக்கள் பூங்கா இதழுக்கு அனுப்ப இறுதி நாள்: 21-01-2025. கருத்துக்களும் புகைப்படமும் வெளியாக வெளியாக வேண்டுமா? விவரங்களுக்கு இங்கே தொடவும்.  (Click Here!)
 
இணைய பத்திரிகைகளில் கௌரவ தூதர், இயக்குனர், புரவலர், விரிவாக்க அலுவலர், ஆசிரியர்ஆசிரியர் குழு உறுப்பினர், தன்னார்வலர் பொறுப்புகளில் இணைய விருப்பமா? இங்கே தொடவும் (Click Here!)
 
பயிற்சி கட்டுரையாளராக (Columnist Trainee) அல்லது பயிற்சி சந்தைபடுத்துனராக (மார்க்கெட்டிங் ட்ரெய்னிங்யாக) அல்லது சந்தைப்படுத்துதல் முகவராக (மார்க்கெட்டிங் ஏஜெண்டாக) பணியாற்ற விருப்பமா? இங்கே தொடவும் (Click Here!)  
 
வாக்காளரியல் என்றால் என்ன? அறிந்து கொள்ளுங்கள்! சிந்தனைகள் பரவ அனைவருக்கும் பகிருங்கள்! இங்கே தொடவும் (Click Here!)  

என்ன காரணத்திற்காக நாம் இவ்வளவு கடினமாக முயற்சி செய்து கொண்டிருக்கிறோம்?,  அதனால் என்ன பலன்? என்று நாம் பல நேரங்களில் சிந்திக்கிறோம். ஆனால், தடைகளை தாண்டி முன்னேறிச் சென்றால் இரண்டாவது மைனஸ் முதல் மைனஸோடு இணைந்து பிளஸ்சாக மாறி உங்களுக்கு வெற்றியை உங்கள் வாழ்க்கையில் வெற்றியை தரும் என்பதை யாராலும் மறுக்க முடியாது என்பது என் கருத்தாகும். மைனஸ் இல்லாமல் வாழ்க்கை இல்லை என்பதை மனதில் கொண்டு மைனசை மைனஸோடு பெருக்கி பிளஸ்சாக மாற்றி வெற்றியை பெற வேண்டியது நமது கடமையாகும் இலக்காக இருக்க வேண்டும்

மைனஸ் பார்முலாவை முழு எண்கள் கோட்பாட்டில் இருந்து எடுத்துக் கொண்ட வாழ்க்கை பாடமாக இன்றளவும் நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்.  உளி தாங்கும் கற்கள் தான் சிலையாகும் என்பதை நாம் உண்மை வாழ்க்கையில் கண்டிருப்பதும் உண்டு. உளி வைப்பது ஒரு வலி என்றால் அந்த வலியை தாங்குவதுதான் அடுத்த வழியை ஏற்படுத்தும். எனவே எத்தகைய தோல்விகள் வந்தாலும் அது நம்மை வழிமுறைப்படுத்தி செதுக்குவதற்காகத்தான் என்பதை உணர்ந்து அனைவரும் நம் வாழ்க்கையின் இன்னல்களை இன்பமாகக் காண ஆரம்பிப்போம்!

இவையெல்லாம் எதிர்மறை அடையாளங்கள் அல்ல 

அவசரமா பெட்ரோல் அடிக்க போனா, பெட்ரோல் பங்குல நமக்கு முன்னாடி இருக்கிறவன் டேங் மூடி திறக்க முடியாம தடுமாறிட்டு இருப்பான்.  ஏடிஎம்ல பணம் எடுக்கப் போனா அங்க ஒருத்தன் ரொம்ப நேரம் நின்னு நோண்டிட்டு இருப்பான்.

சிக்னல் விழுந்தவுடனே எல்லாருமே போனாலும், நமக்கு முன்னாடி இருக்கிறவன் வண்டிய ஆப் பண்ணிட்டு, ஸ்டார்ட் பண்ணிட்டு இருப்பான். ஹெல்மெட் போடாம மறந்துட்டு வந்த டைம்ல தப்பிச்சு போயிடலாம்னு பார்த்தா, நமக்கு முன்னாடி போறவன் பிரேக் அடிச்சு, நம்மள நிறுத்தி போலீஸ் கிட்ட புடிச்சி கொடுத்துட்டு போவான்.

டோல் கேட்ல எல்லா லைனுமே போகும். நமக்கு முன்னாடி வந்தவன் காசு தராம எதாவது ஒரு கார்டை காட்டி சண்டை பண்ணிட்டு இருப்பான்.  பேங்க் மேனேஜர பார்க்கப் போனா, ஒருத்தன் உட்கார்ந்து ஊர் கத பேசிட்டு இருப்பான்.

ஆம்லேட் ஆர்டர் பண்ணி அரைமணி நேரம் வெயிட் பண்ணிட்டு இருப்போம். சப்ளையர் ஆள் தெரியாம பக்கத்துல இருக்கிறவனுக்கு வச்சிட்டு, சார் ஆம்லேட் கேட்டீங்களே, கொஞ்சம் வெயிட் பண்ணுங்க இப்ப போட்றலாம்னு சொல்லுவான். சூடா வடை இருக்குன்னு பார்த்தா, நமக்கு முன்னடி ஒருத்தன் விருந்தாடி வந்திருக்காங்கன்னு அம்பது வடையை பார்சல் வாங்குவான்.

பந்தியில எழுந்திருக்கட்டும் உட்காருவோம்னு வெயிட் பண்ணா, மாப்ள இங்க வா நான் எந்திருக்க போறேன்னு இன்னொருத்தரை கூப்பிட்டு உட்கார வச்சிட்டு போவான். பஸ்ல நமக்கு பின்னாடி வந்தவன், அடுத்த ஸ்டாப்ல இறங்க வேண்டியவன் சீட்ட புடிச்சி உட்கார்ந்துக்குவான். 

இவையெல்லாம் இயல்பானதே. இவற்றைத்தான் கடந்து செல்ல வேண்டும். எப்போதும் எதிர்மறையாக உள்ளது என்ற மனநிலையை வளர்த்துக் கொள்ளக் கூடாது. Always other queue moves என்பது ஆங்கிலத்தில் கூறப்படும் ஒரு பழமொழியாகும். 

பூங்கா இதழ் (The News Park) கருத்து: முயற்சி என்னை கைவிட்டதுண்டு. ஆனால், நான் முயற்சியை கைவிட்டதில்லை என்ற கொள்கையை பின்பற்றினால் கழித்தல்கள் மூலமே வெற்றிகளை சாத்தியமாகலாம்!

கட்டுரையாளர் வி கே காவியா – அரசு சட்டக் கல்லூரி மாணவி

பூங்கா இதழ், நுகர்வோர் பூங்கா இணைய இதழ்களின் படைப்புகளை நேரடியாக தங்கள் அலைபேசியில் பெற வாட்ஸ் அப் குழுவில் இணையுங்கள்! இணைய இங்கே தொடவும் (Click Here!)

“நுகர்வோர் பூங்கா” படிக்க  இங்கே தொடுங்கள்! (Click here)

பூங்கா இதழ் நுகர்வோர் பூங்கா வாட்ஸ் அப் சேனலில் இணையுங்கள்! இணைய இங்கே தொடவும். Click Here!

எங்களது வெளியீடுகள் (Our Current and Upcoming publication) – இதழ்களின் பெயரை தொட்டால் இதழ்களின் இணையதளத்துக்கு செல்லலாம் (Click the heading of journals, see the concern website)
 
வெகுஜன வெளியீடுகள் (Popular Park)
நுகர்வோர் பூங்கா (தமிழ்) – இணைய இதழ்
நுகர்வோர் பூங்கா (ஆங்கிலம்) – இணைய இதழ்
பூங்கா இதழ் (தமிழ்) – இணைய இதழ்
தி நியூஸ் பார்க் (ஆங்கிலம்) – இணைய இதழ்
தி நியூஸ் பார்க் மொபைல் பயன்பாடு (Mobile App) – soon
 
ஆராய்ச்சி வெளியீடுகள் (Research Park)
சட்டம், மேலாண்மை மற்றும் சமூக அறிவியல் ஆராய்ச்சி இதழ் 
சர்வதேச நிறுவனங்கள், அரசியலமைப்பு சட்டம், ஆட்சியியல் ஆராய்ச்சி இதழ் 
குற்றங்கள், விபத்துகள், குற்றவியல் சட்டம், பாதிக்கப்பட்டோரியல் ஆராய்ச்சி இதழ்
அமைதி உத்திகள் மற்றும் ஆராய்ச்சி இதழ் 
விண்வெளி, கடல், ஆகாயம் ஆராய்ச்சி இதழ்
வாக்காளரியல் (Voterology) ஆராய்ச்சி இதழ்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Google search engine

Latest Articles