Advertisement

பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவர்களுக்கு ஐந்தாண்டு சட்டக் கல்வி

பட்டப் படிப்பை முடித்தவர்களுக்கு மூன்றாண்டு கால சட்ட பட்ட படிப்பும் (Three year LL.B.,) பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவர்களுக்கு ஐந்தாண்டு கால சட்ட பட்ட படிப்பும் (Five year LL.B.,)  சட்டக் கல்லூரிகளில் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் டாக்டர் அம்பேத்கார் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் 15 அரசு சட்டக் கல்லூரிகளும் சில தனியார் சட்டக் கல்லூரிகளும் இயங்கி வருகின்றன. டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் சேர பன்னிரண்டாம் வகுப்பில் மொழி பாடத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களை  தவிர மற்ற மதிப்பெண்களின் மொத்த மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை   வழங்கப்படுகிறது. வழக்கமான இட ஒதுக்கீட்டு நடைமுறைகளும்  சேர்க்கையில் பின்பற்றப்படுகிறது. சட்டக் கல்லூரியில் சேர விரும்புபவர்கள் https://tndalu.emsecure.in/5YearsLaw என்ற இணையதளத்தை பார்க்கவும். 

அரசு சட்டக் கல்லூரிகள்

01. சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி, பட்டரை பெரம்புதூர், திருவள்ளூர் மாவட்டம் – 631 203

02. சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி, புதுப்பாக்கம், திருப்போரூர் வட்டம், செங்கல்பட்டு மாவட்டம் – 631 203

03. அரசு சட்டக் கல்லூரி, மதுரை – 625 020

04. அரசு சட்டக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி – 620 023

05. அரசு சட்டக் கல்லூரி, கோயம்புத்தூர் – 641 046

06. அரசு சட்டக் கல்லூரி, திருநெல்வேலி – 627 011

07. அரசு சட்டக் கல்லூரி, செங்கல்பட்டு – 603 001

08. அரசு சட்டக் கல்லூரி, வேலூர் – 632 006

09. அரசு சட்டக் கல்லூரி, விழுப்புரம் – 605 603

10. அரசு சட்டக் கல்லூரி, தருமபுரி – 636 701

11. அரசு சட்டக் கல்லூரி, ராமநாதபுரம் – 623 501

12. அரசு சட்டக் கல்லூரி, சேலம் – 636 010

13. அரசு சட்டக் கல்லூரி, நாமக்கல் – 637 001

14. அரசு சட்டக் கல்லூரி, தேனி – 625 534

15. அரசு சட்டக் கல்லூரி, காரைக்குடி – 630 003

தனியார் சட்டக் கல்லூரிகள்

16.  மத்திய சட்டக் கல்லூரி, சேலம் – 603 008 

17.  சரஸ்வதி சட்டக் கல்லூரி, திண்டிவனம் 

18.  அன்னை தெரசா சட்டக் கல்லூரி, புதுக்கோட்டை மாவட்டம் – 622 102 

19.  G.T.N சட்டக் கல்லூரி, திண்டுக்கல் மாவட்டம் – 624 005 

20.  KMC சட்டக் கல்லூரி, திருப்பூர் மாவட்டம் – 641 605 

21.  ஈரோடு சட்டக் கல்லூரி, ஈரோடு மாவட்டம் – 638 453 

22.  எஸ்.தங்கப்பழம் சட்டக் கல்லூரி, தென்காசி மாவட்டம் – 627 758 

23.  துளசி பெண்களுக்கான சட்டக் கல்லூரி, தூத்துக்குடி மாவட்டம் – 628 252 

24.  முகில் சட்டக் கல்லூரி, கன்னியாகுமரி மாவட்டம் – 629 172

இந்தக் கல்லூரிகளை தவிர  டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் சீர்மிகு சட்டப்பள்ளி (School of Excellence in Law) ஒன்றும் நடத்தப்படுகிறது   இதில் எல்.எல்.பி., ஹானர்ஸ் (LL.B., Honours) பட்டம் வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.

நிகர் நிலை பல்கலைக்கழகங்கள்

தமிழகத்தில் டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் நடத்தப்படும் சட்ட கல்லூரிகளை தவிர வேலூர் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி – சென்னை, சாஸ்திரா நிகர் நிலை பல்கலைக்கழகம் – தஞ்சாவூர், எஸ்.ஆர்.எம் நிகர் நிலை பல்கலைக்கழகம் – சென்னை, சவிதா நிகர் நிலை பல்கலைக்கழகம் – சென்னை உள்பட தனியார் நிகர் நிலை பல்கலைக்கழகங்களிலும் (deemed universities). சட்டப்படிப்புகள் நடத்தப்படுகின்றன. இந்தக் கல்லூரிகளில் சேர தனியாக விண்ணப்பம் செய்ய வேண்டும். 

சில நிகர் நிலை பல்கலைக்கழக கல்லூரியில் தேசிய அளவில் நடத்தப்படும் மத்திய சட்ட சேர்க்கை தேர்வு (CLAT-central law admission test) மதிப்பெண்களையும் சில நிகர் நிலை பல்கலைக்கழக கல்லூரியில் வேறு வகையான  சட்டக் கல்லூரி சேர்க்கை தேர்வு (other entrance) மதிப்பெண்களையும் பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கின்றனர்.  சில நிகர் நிலை பல்கலைக்கழகசட்டக் கல்லூரிகள் தனியாக நுழைவுத் தேர்வுகளை நடத்துகிறார்கள்.  முழுமையான  சேர்க்கை விவரங்கள் சட்ட படிப்புகளை நடத்தும் ஒவ்வொரு நிகர் நிலை பல்கலைக்கழக இணையதளங்களில் வெளியிடப்படுகிறது. இந்தக் கல்லூரிகளை தவிர திருச்சி அருகே உள்ள ஸ்ரீரங்கத்தில் தேசிய சட்ட பள்ளியும் செயல்படுகிறது. இதில் சேர தேசிய அளவில் நடத்தப்படும் மத்திய சட்ட சேர்க்கை தேர்வு (CLAT-central law admission test) மதிப்பெண்களை பெற்றிருக்க வேண்டும்.

பிரிவுகள்

ஐந்தாண்டு சட்ட கல்வியில் அனைவருக்கும் பொதுவாக சட்ட பாடங்கள் கற்பிக்கப்படும் போதிலும் முதல் இரண்டு ஆண்டுகள் சேரும் பிரிவுக்கு ஏற்ப கலை, வணிகவியல் போன்ற பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன ஐந்து ஆண்டு சட்டக் கல்லூரியில் உள்ள பிரிவுகள் பின்வருமாறு.

1.  பி. ஏ., எல்எல். பி.,

2.  பி.காம்., எல்எல்.பி.,

3.  பி.பி.ஏ., எல்எல். பி.,

4.  பி.சி.ஏ., எல்எல். பி.,

5.  பி. ஏ., எல்எல். பி., ஹானர்ஸ்

6.  பி.காம்., எல்எல்.பி., ஹானர்ஸ்

7.  பி.பி.ஏ., எல்எல். பி., ஹானர்ஸ்

8.  பி.சி.ஏ., எல்எல். பி., ஹானர்ஸ்

உயர்கல்வி

ஐந்தாண்டு இளம் சட்டவியல் (LL.B.,) படிப்பை முடித்தவர்களுக்கு முதுநிலை சட்டவியல் (LL.M.,) படிப்பு தமிழகத்தில் டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளிலும் தனியார் நிகர் நிலை பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் சட்ட பள்ளிகளிலும் நடத்தப்படுகிறது. முதுநிலை  சட்ட பட்ட படிப்பை தேர்வு செய்யும் போது அரசியலமைப்பு  சட்டம், சர்வதேச சட்டம், குற்றவியல் சட்டம், மனித உரிமைகள் சட்டம்,   வரி  சட்டம், தொழிலாளர் நல சட்டம், நிர்வாக சட்டம் போன்ற சிறப்பு பாடத்தை (specialization) தேர்வு செய்ய வேண்டும்.  ஐந்து ஆண்டு சட்டப் படிப்பை (LL.B.,) முடித்த பின்னர் பலர் லண்டன் உள்ளிட்ட வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில்   ஓராண்டு கால அளவு கொண்ட முதுநிலை சட்டப்படிப்பு  (LL.M.,)படிக்க செல்கின்றனர்.

வாய்ப்புகள்

சட்டக் கல்வி தொழில்முறை படிப்பு (poressional) என்பதால் பட்டம் பெற்று பார் கவுன்சிலில் பதிவு செய்தவுடன் வழக்கறிஞராக பணியாற்றும்   வாய்ப்பும் நீதித்துறையில் நீதிபதிகளாக பணியாற்றும் வாய்ப்பும்   சட்டம் படித்தவர்களுக்கு கிடைக்கிறது. நீதித்துறையை தவிர பெரும்பாலான தீர்ப்பாயங்கள் (tribunals), ஆணையங்கள் (commissions) போன்றவற்றின் தலைவராகவும் உறுப்பினராகவும் பணியில் சேர சட்டப்படிப்பு அவசியமானதாக உள்ளது. 

மத்திய, மாநில அரசு பணிகளில் இணைவதற்கு சட்ட பட்ட படிப்பு பெரிதும் உதவிகரமாக இருப்பதோடு அரசின் சில பணிகளுக்கு சட்ட படிப்பு மிக அவசியமானதாக உள்ளது. தனியார் நிறுவனங்களிலும் சட்ட அலுவலராக பணியாற்ற சட்டம் படித்தவர்களுக்கு வாய்ப்புகள் உள்ளன. இதனைத் தவிர ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளிலும் சட்டம் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்புகள் உள்ளன.  இந்த ஆண்டு சட்டக் கல்லூரியில் இணையும் மாணவ, மாணவியருக்கு வாழ்த்துக்கள்!

பூங்கா இதழ்
பூங்கா இதழ்https://thenewspark.in
பூங்கா இதழின் படைப்பு

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Google search engine

Latest Articles