Advertisement

வாழும் காலம்  கொஞ்சமே!  புல்லானாலும் புத்தகம்! தமிழர் பண்பாடு! – சட்டக் கல்லூரி மாணவர்களின் கருத்து மூட்டைகள். படியுங்கள்! பகிருங்கள்!

சி. விமலா, சட்டக் கல்லூரி மாணவி – போகும் பாதை தூரமே! வாழும் காலம்  கொஞ்சமே!  

காலம் கடந்தால் கடந்ததுதான் அதனை மீண்டும் பெற இயலாது.  கடந்துவிட்ட காலத்தை நம்மால் பெறவே முடியாது.  இப்பொழுது இருக்கும் இந்த பொன்னான காலத்தை பயனுள்ளதாக ஆக்க வேண்டும்.

 காலத்தை வீணாக்க வேண்டாம்

காலத்தின் அருமை தெரிந்து அதனை ஒழுங்காக பயன்படுத்தி கடமை புரிபவர்களுக்கு காலம் விரைந்து செல்வது போல தோன்றும்.  கடமை உணர்வு எதுவும் இன்றி உறங்கிக் காலம் கழிப்பவர்களுக்கு காலம் மெதுவாக செல்வது போல தோன்றும்.   உயர்ந்த குறிக்கோள் ஒருவரை உயர உயர பறக்க வைக்கும். “ஒளிபடைத்த கண்ணினாய் வா வா, உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா” என அழைக்கும் காலத்தின் சவாலை ஏற்க  உயர்ந்த குறிக்கோள் உள்ளவர் முறையாக நன்றாக திட்டமிட்டு ஒழுங்காக காலத்தை பயன்படுத்துதல் வேண்டும் காலத்தின் முக்கியத்துவத்தை முற்றும் உணர்ந்தும் சிறிதும் நேரத்தை வீண் செய்யாமல் சரியாக பயன்படுத்தினால் சாதனைகள் படைக்கலாம். 

காலத்தை கவரும் தீய சக்திகள் 

நம் பொன்னான காலத்தை கவர்ந்து கொள்ளும் தீய சக்திகள் சில உள்ளன. மனிதர்கள் தங்கள் கடமைகளையும் காரியங்களையும் செய்யவிடாமல் தடுத்து அவர்கள் காலத்தை அழிப்பதே அந்த தீய சக்திகளின் நோக்கம். உறக்கம், சோம்பல், சூது, தன்னம்பிக்கையின்மை, அறியாமை,பொய்மை, புறங்கூறல், கட்டுப்பாடற்ற வாழ்க்கை முறை.  இப்பொழுது  அதில் ஒன்றாக நம் அன்றாடம் பயன்படுத்தும் கைபேசியும் சேர்ந்து உள்ளது. கிராமத்தில் காலத்தை கழிப்பவர்களை விட   இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் காலத்தை கழிப்பவர்களே அதிகம். நம்மில் பலர்  இவற்றிடம் சிக்கி காலத்தை வீணே கழித்துக் கொண்டிருக்கின்றனர்.  

ஒத்தி வைத்தல் நம் எதிரி

வெற்றி வெற்றிக்கு முக்கியமானது சரியாக காலத்தை பயன்படுத்துவதே. ஒரு செயலை செய்ய வேண்டிய காலத்தில் செய்யாமல் பிறகு செய்வோம் என்று இருந்தால் பல வேலைகளும் மலைபோல குவிந்துவிடும் பிறகு எந்த செயலையும் செய்ய முடியாது. காலத்தை வீணாக்காமல் அந்தந்த நேரத்தில் அந்தந்த செயலை செய்யும் பழக்கத்தை மேற்கொண்டால் வாழ்வின் குறிக்கோள் நினைத்தபடி நிறைவேற்ற முடியும்.

ஒரு கதை

அண்ணல் காந்தியடிகள் தலைமையில் பாலகங்காதர திலகர் பேசுவதற்கு ஒரு பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காந்தியடிகள் தனது வளர்க்கப்படி குறிப்பிட்ட நேரத்தில் மேடைக்கு வந்துவிட்டார் பெருந்தலைவரான திலகர் தமது வழக்கப்படி காலந்தவறி வந்தார்.  அதன் பிறகு திலகர் ஆற்றிய வீரகனல் பறக்கும் சொற்பெருங்காற்றினால் பொதுமக்களோ ஆர்வமுடன் அவரின் பேச்சை கேட்டுக் கொண்டிருந்தனர். காந்தியடிகள் தமது பின்னுரையில் “நமது இணையற்ற விடுதலை வீரர் சுதந்திர தந்தை திலகர்  வீரஉறையில் நாம் எழுச்சி கொண்டோம். அவரது உரையில் இந்திய சுதந்திரம் நம் கையில் கிடைத்தது போலவே அமைந்திருந்தது. அந்த நாள் வரவே போகிறது ஆனால், சுதந்திரத்தை நாம் பெறுவதற்கு அரை மணி நேரம் தாமதமானால் அந்த பாவம் திலகரையே சாரும் என்று கூறினார். அதைக் கேட்ட திலகர், தம் காலம் தவறி வந்ததற்காகவே அடிகள் இவ்வாறு கூறுகின்றார் என்று உணர்ந்த அவர் அன்று முதல் காலம் கடந்து செல்லும் வழக்கத்தை கைவிட்டார்.

அடைவோம் குறிக்கோளை

வாழ்க்கையில் தம் குறிக்கோளை அடைந்து சாதனைகள் படைத்து வெற்றி காண விரும்புவோர், தம் முயற்சிக்கேற்ற காலத்தை அறிந்து அதனை சிறிதும் வீணாக்காது பயன்படுத்துதல் வேண்டும். சரி இதுவரை எப்படியோ இனிமேல் சரியாக பயன்படுத்துவோம்.அப்புறம் என்ன இனிமே நம்ம வாழ்க்கையும் சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம் ஆகாயம் பூக்கள் தூவும் காலம் தான்.

வாசுகி, சட்டக் கல்லூரி மாணவி  – கல்லானாலும் கல்வி புல்லானாலும் புத்தகம் 

கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே என்பது ஆன்றோர் வாக்கு வாழ்க்கையில் எவ்வாறான வறுமை வந்தால் கூட கல்வியை கற்பதை நிறுத்தி விடக்கூடாது. ஆதிகாலத்தில் மனிதன் காடுகளில் வாழ்ந்தாலும் கல்வி கற்பதற்காக நல்ல குருவை தேடி அவர்களுடைய குருகுலம் நோக்கிச் சென்று அவருக்கு சேவை செய்து கல்வி கேள்வி போர்க்களை வித்தைகள் இலக்கியங்கள், இதிகாசங்கள் போன்றவற்றை கற்றுக் கொள்வார்கள். சங்ககாலத்தில் முச்சங்கங்கள் வைத்து தமிழ் வளர்த்தார்கள். 

அடுத்த காலமான சங்கமருவிய காலத்தில் அறம் சார்ந்து பள்ளிகள் உருவாக்கப்பட்டு அறம் போதிக்கப்பட்டு இக்காலத்தில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் உருவாகின. உலகப் பொதுமறியான திருக்குறள் ஆகும். இக்காலங்களில் வெறுமனே தமிழ் கல்வி மட்டுமல்லாமல் விஞ்ஞானம், கணிதம், இயற்பியல், ஜோதிடம் போன்ற பல துறை சார் கல்வி வளர்ச்சி நிலவியது என்பதற்கு இலக்கிய ஆதாரங்கள் உள்ளன. 

ஆணுக்குப் பெண் சலித்தவள் இல்லை – பெண்களுக்கும் கல்வியில் உயர வேண்டும் என வாதிட்டார் மகாகவி பாரதியார்.  யார் கல்வி கற்கிறார்களோ அவர்களே வலிமையானவர்களாகவும் இங்கு உள்ள எல்லா நலன்களை அனுப்பிவித்து கற்காத பாமர மக்களை அடக்கும் முறை நம் பிரதேசங்களில் காணப்பட்டது. பிரித்தானியர்களின் ஆட்சியில் பாடசாலை கல்வி முறை கொண்டுவரப்பட்டது. 

அடக்கப்பட்ட சமூகத்தின் விடுதலை கல்வியில் தங்கி இருந்தது பாடசாலை கல்வி, இலவச கல்வி. இவற்றின் காரணமான கல்வி கற்க எல்லா மக்களும் கல்வி கற்க ஆரம்பித்தனர். இதுவே கல்வி மறுமலர்ச்சியையும் சமூக மாற்றத்தையும்  விதைத்தது. இன்றைக்கு பின்தங்கிய குடும்பங்களில் இருந்து வருகின்ற மாணவர்களே கல்வியில் அதிகம் அவர்களாகவும் கல்வியில் உச்சம் தொடுபவர்கள் ஆகவும் உள்ளனர்.

இன்றைக்கு கல்வியினை வீடுகளில் இருந்து கொண்டே கற்கும் அளவிற்கு தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது. இணையவழிக் கல்வி என பல வழிகளிலும் தேடி இலகுவாக கற்க கூடிய வழிமுறைகள் கல்வியில் வளர்ந்து விட்டன. பாட சாலைகளை விடவும் தனியார் கல்வி நிலையங்கள் இன்றைய மாணவர்களை ஈர்க்கின்றன. 

இன்றைய கல்வி முறையில் ஒவ்வொரு பள்ளிகளிலும் ஒவ்வொரு விதமான கல்வியே நடத்தி வருகின்றனர். வீடியோ பதிவாகவும் மற்றும் இணையதள காணொளி மூலமாகவும் நடத்துகின்றனர். இன்றைய பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் கல்விக்காகவே அதிக பணம் செலவழிக்கின்றனர். தனியார் கல்வியை சேவையாக இன்றி வியாபாரமாக மாற்றி உள்ளார்கள். 

முன்பெல்லாம் ஆசிரியர்களின் பணி மாணவர்களின் நெறிப்படுத்தும் உயரிய நோக்கத்திற்காக என்று பணியாற்றினார்கள். இன்று ஆசிரியர் தொழில் அதிக லாபம் ஈட்ட முடியும் என்று ஒரு சிலர் மாற்றியுள்ளார். இன்றைக்கு உயர்கல்வி, தொழில்கல்வி, வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் மேல்படிப்பு – என கல்வியே வாழ்க்கை எனும் அளவிற்கு இன்றைய கல்வி வாழ்வோடு நீக்கமற கலந்துள்ளது.

அதாவது, கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்ற நிலை மாறி கல்லானாலும் கல்வி புல்லானாலும் புத்தகம் என்ற நிலை வந்து விட்டது. நமது இந்திய திருநாட்டில் கல்வி கற்காதவர் ஒருவர் கூட இல்லை என்கிற நிலை விரைவில் உருவாக வேண்டும். கல்வி கற்பதும் கற்பிப்பதும் மிகவும் முக்கியம். அதே நேரத்தில் நாம் சிறந்த மனிதனை உருவாக்குவதாக அவை அமைய வேண்டும்.

டி.எஸ்.கீர்த்தனா, சட்டக் கல்லூரி மாணவி – மறந்து போன தமிழர் பண்பாடு

பண்டைத் தமிழர்கள் தமது ஒவ்வொரு பழக்க வழக்கத்திலும் ஏதோ ஒரு நன்மையினை நோக்கமாகக் கொண்டு அவற்றை கடைபிடித்தனர். வீட்டுக்கு வந்தோருக்கு உண்ணவும், பருகவும் உணவும் நீர்பானமும் கொடுத்து உபசரிப்பது (விருந்தோம்பல்), இரு கைகளையும் கூப்பி வணக்கம் செய்தல், பெரியோரை பெயரிட்டு அழைக்காமை, ஆகியவை தமிழர்களின் நற்பண்புகள் ஆகும்.

தமிழர்கள் தங்களுடைய வீட்டு வாசலில் கோலம் போடுதல், துளசிச் செடியை வளர்த்தல், மாவிலை தோரணம் கட்டுதல் போன்ற பழக்க வழக்கங்களை கடைபிடித்தனர். இவற்றை நம் முன்னோர்கள் சம்பிரதாயம் என்ற பெயரில் அழைப்பர்.

இன்று நாம் கோலமிடுவதை அழகுக்காக என எண்ணி ஸ்டிக்கர்களை வாங்கி ஒட்டுகின்றனர். அந்தக் காலத்தில் தமிழர்கள் கம்பு, கேழ்வரகு, திணை, வரகு, சாமை போன்ற பாரம்பரிய உணவுகளை உண்டனர். இப்பொழுது இட்லி, தோசை, பீட்சா, பர்கர் போன்ற உணவுகளை உட்கொள்கின்றனர். நமது பாரம்பரிய உணவுகளை தமிழர்கள் மறந்து விட்டனர்.

தாத்தா, பாட்டிகளின் பெயர்களை பேரன், பேத்திகளுக்கு வைக்கும் வழக்கம் அன்று இருந்தது. ஆனால், இப்பொழுது அது வெகுவாக குறைந்திருக்கிறது. அதுமட்டுமின்றி குழந்தைகளுக்கு தமிழ் பெயர்களை வைக்கும் பழக்கமும் கூட வெகுவாக குறைந்து வருகிறது.

எஸ். தக்ஷினா, சட்டக் கல்லூரி மாணவி 

தமிழர்கள் பின்பற்றிய பண்பாட்டில் ஆயிரம் அறிவியல் உண்மைகள் ஒளிந்து கொண்டிருக்கின்றன ஆனால் அதனை மறந்து நாம் மேற்கத்திய கலாச்சாரத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பது சரியானது அல்ல. ஒத்துப் போகும் அறிவியல் பூர்வமான சங்கதிகள் மட்டும் மேற்கத்திய கலாச்சாரத்தில் இருந்து எடுத்துக் கொள்ளலாம்.

என் ஜீவிதா, சட்டக் கல்லூரி மாணவி 

தமிழக விவசாயிகளின் பண்பாட்டை போற்றுவதும் அவர்களது குழந்தைகளை கல்வியில் மேம்படுத்துவதும் தற்போதைய தேவையாகும்.

உங்களையும் உங்கள் எண்ணங்களையும் அடையாளப்படுத்த – உங்கள் படைப்புகள் பூங்கா இதழ் மற்றும் நுகர்வோர் பூங்காவில் வெளியாக வேண்டுமா? இங்கே தொடவும் (Click Here!)

ந. ஞானிதா, சட்டக் கல்லூரி மாணவி 

கல்வி உரிமையும் பண்பாட்டு உரிமையும் பாதுகாக்கப்பட வேண்டும். சமூகத்தில் பின்தங்கிய மக்களின் குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் உரிய கல்வியை வழங்கினால் மட்டுமே ஒரு நாடு வளம் பெறும்.

கருத்துக்களும் புகைப்படமும் வெளியாக வெளியாக வேண்டுமா? விவரங்களுக்கு இங்கே தொடவும்.  (Click Here!)

ச. ரம்யா, சட்டக் கல்லூரி மாணவி 

ஒவ்வொரு மணித்துளியும் திட்டமிட்டு பணியாற்றினால் நாமும் வெற்றி பெறுவோம்! நமது சமுதாயமும் வெற்றி பெறும்! 

சு தேவதர்ஷினி, சட்டக் கல்லூரி மாணவி 

oppo_34

இந்திய அரசியலமைப்பில் கல்வி அடிப்படை உரிமையாக காலம் தாழ்ந்து ஏற்கபட்டு இருந்தாலும் தற்போது கல்வி இந்திய மக்களின் அடிப்படை  உரிமையாக உள்ளது மகிழ்ச்சியாக உள்ளது.

இணைய பத்திரிகைகளில் கௌரவ தூதர், இயக்குனர், புரவலர், விரிவாக்க அலுவலர், ஆசிரியர் – ஆசிரியர் குழு உறுப்பினர், தன்னார்வலர் பொறுப்புகளில் இணைய விருப்பமா? இங்கே தொடவும் (Click Here!)

தா நவீன், சட்டக் கல்லூரி மாணவர்

சில ஐரோப்பிய நாடுகளில் உள்ளது போல இந்திய மக்கள் அனைவருக்கும் எல்லா விதமான கல்வியும் கட்டணமில்லாமல் வழங்கப்பட வேண்டும்.

பயிற்சி கட்டுரையாளராக (Columnist Trainee) அல்லது பயிற்சி சந்தைபடுத்துனராக (மார்க்கெட்டிங் ட்ரெய்னிங்யாக) அல்லது சந்தைப்படுத்துதல் முகவராக (மார்க்கெட்டிங் ஏஜெண்டாக) பணியாற்ற விருப்பமா? இங்கே தொடவும் (Click Here!)

பல்கீஸ் பீவி.மு,  சட்டக் கல்லூரி மாணவி 

கல்லூரியில் படிக்கும் போதே பொருளாதார சுதந்திரம் பெற, பணத்தை ஈட்ட, பணத்தை சேமிக்க பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும்.

வாக்காளரியல் என்றால் என்ன? அறிந்து கொள்ளுங்கள்! சிந்தனைகள் பரவ அனைவருக்கும் பகிருங்கள்! இங்கே தொடவும் (Click Here!)

ஆர். லக்ஷிதா, சட்டக் கல்லூரி மாணவி 

மாணவ மாணவியரின் மதிப்பும் திறமையும் மதிப்பெண்கள் அடிப்படையிலேயே தீர்மானிக்கபடுகிறது.  படிப்பு வராத மாணவர்களுக்கு வேறு என்ன திறமை இருக்கிறது? என்று பார்க்க தவறி விடுகிறது இன்றைய கல்வி முறை. இன்று கல்வி என்பது லாபம் ஈட்டும் வியாபாரம் ஆகிவிட்டது..

இரா.இராஜஹரிஹரன், திருச்சி சட்டக் கல்லூரி மாணவர் 

ஒவ்வொருவரும் நேர நிர்வாகத்தை படித்து அறிந்து கொண்டு இலக்கை நிர்ணயம் செய்து வெற்றியை நோக்கி பயணிக்க வேண்டும்.

பூங்கா இதழ், நுகர்வோர் பூங்கா இணைய இதழ்களின் படைப்புகளை நேரடியாக தங்கள் அலைபேசியில் பெற வாட்ஸ் அப் குழுவில் இணையுங்கள்! இணைய இங்கே தொடவும் (Click Here!)

வ.கா.காவ்யா,  சட்டக் கல்லூரி மாணவி 

எனது பார்வையில் நேரம் என்பது இந்த உலகில் இருக்கக்கூடிய மிகவும் விலைமதிப்பற்ற விஷயம், ஏனென்றால் ‘நேரமும் அலையும் மனிதனுக்காக காத்திருக்காது’.இது ஒரு ஆங்கில பழமொழி, (time and tide wait for no man).‌ கடிகாரத்தில் முள் சுற்றுவதை நாம் பார்த்திருப்போம். ஆனால் உண்மை வாழ்க்கையில், நம் கனவுகள் மெய்ப்பட, மனிதன் தான் கடிகாரம் முள்ளாக நேரத்தின் பின் ஓடியாக வேண்டும். அத்தகைய சூழலில் அதனை சாமர்த்தியமாக பயன்படுத்துகிறோமா அல்லது தள்ளி போட்டு பிறகு செய்து கொள்ளலாம் என்று வீணடிக்க போகிறோமா என்பது நம் கையில் தான் உள்ளது. இவ்வுலகில் உள்ள எதையும் ஏதேனும் வழியில் தக்கவைத்துக் கொள்ள முடியும், ஆனால் நேரத்தை வாங்கவோ திரும்பப் பெறவோ முடியாது, எனவே அதன் சாராம்சத்தை உணர்ந்து அதை பலனளிக்கும் வகையில் நமது திறமையைச் செம்மைப்படுத்துவோம்.

எஸ். ஏ. சூரியா, சட்டக் கல்லூரி மாணவர் 

MESSIA

வேர்க்கடலையின் வித்தியாசமான வரலாறு – உலகத்தின் அனைத்து பகுதிகளிலும் வேர்க்கடலை மிட்டாய்கள் விதவிதமான வடிவங்களிலும் சுவைகளிலும் விற்பனையாகி கொண்டிருந்தாலும் கோவில்பட்டி கடலை மிட்டாய் இன்றும் நாவில் நர்த்தனம் ஆடும் சுவைக்கு சொந்தமானதாக இருந்து கொண்டிருக்கிறது. அதற்கு என்ன காரணம் தெரியுமா? என்பது உள்ளிட்ட விவரங்களுடன் சூர்யாவின் கட்டுரை ஓரிரு நாளில் நுகர்வோர் பூங்காவில் வெளியாக உள்ளது.

Related Articles

1 COMMENT

  1. Very good. Friends your opinion is really great and true. Keep it up guys.. Vimala and vasuki perspective is very nice. Thilakar speech Gandhi replay .story also nice……..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Google search engine

Latest Articles