Advertisement

இணைய பத்திரிகைகளில் கௌரவ தூதர், இயக்குனர், புரவலர், விரிவாக்க அலுவலர், ஆசிரியர் – ஆசிரியர் குழு உறுப்பினர், தன்னார்வலர் பொறுப்புகளில் இணைய விருப்பமா?

கௌரவ நல்லெண்ண தூதர், கௌரவ இயக்குனர், கௌரவ புரவலர்

வெகுஜன இதழ்கள் மூலம் மக்களுக்கு செய்தி மற்றும் தகவல் கட்டுரைகளை கொண்டு செல்வதை வலுப்படுத்தவும் ஆராய்ச்சி இதழ்கள் மூலம் சமூக முன்னேற்றத்திற்கான பணியை மேற்கொள்ளவும் எங்களது பத்து இணைய பத்திரிகைகளில் ஒவ்வொரு பத்திரிகைக்கும் வளர்ச்சிக்கு தகுந்த பங்களிப்பை (monetary contribution) வழங்க கூடிய ஒரு நல்லெண்ண தூதரை (Goodwill Ambassadors) நியமிக்கவும் ஒரு கௌரவ இயக்குனர் நியமிக்கவும் ஓரிரு புரவலர்களை (Patron) நியமிக்கவும் அமைதிக்கான உத்திகள் அமைப்பு திட்டமிட்டுள்ளது. இவ்வாறு நியமிக்கப்படுபவர்களின் புகைப்படம் சம்பந்தப்பட்ட பத்திரிக்கையில் இரு தரப்பிலும் ஒப்புக் கொள்ளப்படும் காலத்திற்கு இடம் பெறும். 

கௌரவ விரிவாக்க அலுவலர், தன்னார்வலர்

அறிவை மேம்படுத்தவும் தகவல்களை வழங்கவும் கட்டணம் இல்லாமல் பொதுதளமாக செயல்படும் பொதுஜன மற்றும் ஆராய்ச்சி பத்திரிகைகளை சமூக ஊடகங்கள் மற்றும் பிற உத்திகள் மூலமாக மக்களுக்கு கொண்டு செல்ல தகுந்த பங்களிப்பை வழங்க பணியாற்ற விருப்பம் உள்ள கௌரவ விரிவாக்க (Honorary Extension Officers) அலுவலர்களையும் தன்னார்வலர்களையும் (Volunteer) அமைதிக்கான உத்திகள் அமைப்பின் சார்பில் நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கௌரவ ஆசிரியர் – ஆசிரியர் குழு உறுப்பினர்

எங்களது பத்து இணைய பத்திரிகைகளில் ஒவ்வொரு பத்திரிகைக்கும் வளர்ச்சிக்கு தகுந்த பங்களிப்பை (contribution) வழங்க கூடிய ஒரு கௌரவ ஆசிரியரை (Honorary Editor)) நியமிக்கவும் இந்தப் பணிகளை ஆதரிக்கும் நண்பர்களை கண்டறிந்து ஒவ்வொரு பத்திரிக்கையிலும் வளர்ச்சிக்கு தகுந்த பங்களிப்பை (contribution) வழங்க கூடிய ஓரிரு கௌரவ ஆசிரியர் குழு உறுப்பினர்களை (Honorary Member of Editorial Board) நியமிக்கவும் அமைதிக்கான உத்திகள் அமைப்பு திட்டமிட்டுள்ளது. 

ஆராய்ச்சி இதழ் ஆசிரியர் குழு உறுப்பினர்

ஆராய்ச்சி இதழ்களில் தன்னார்வமாக ஆசிரியர் குழு உறுப்பினராக (Member of Editorial Board) பணியாற்ற கல்லூரிகளில் ஆசிரியராக பணியாற்றும் அல்லது பணியாற்றிய அனுபவம் வாய்ந்தவர்களிடமிருந்து விருப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பொறுப்புக்கு தேர்வு செய்யப்பட முனைவர் பட்டம் பெற்றவராகவும் ஆராய்ச்சி அனுபவம் உள்ளவராகவும் இருக்க வேண்டும்.

தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்துவது எப்படி?

வெகுஜன மற்றும் ஆராய்ச்சி பத்திரிகைகள் மூலமாக சமூக பங்களிப்பை புரிய ஆர்வம் உள்ளவர்கள் [email protected] or [email protected] or [email protected] or [email protected]  என்ற மின்னஞ்சல் மூலமாக அல்லது 9487665454 என்ற வாட்ஸ் அப் எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு வேண்டப்படுகிறது. 

தங்களது பெயர், முகவரி, தொடர்பு எண், கல்வித் தகுதி, தொழில் அனுபவங்கள், இதர திறமைகள் உள்ளிட்ட தங்களது விவரங்களையும் தங்கள் விருப்பத்தையும் அனுப்பலாம். இந்த எண் தகவலை அனுப்ப மட்டுமே – பேசுவதற்கு அல்ல. விருப்பம் தெரிவிப்பவர்கள் தேர்வு செய்ய தகுதி வாய்ந்தவர்களாக இருக்கும் போது அமைதிக்கான உத்திகள் அமைப்பின் சார்பில் தொலைபேசியில் அல்லது மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளப்படும். 

வெகுஜன வெளியீடுகள் (Popular Park)
நுகர்வோர் பூங்கா (தமிழ்) – இணைய இதழ்
நுகர்வோர் பூங்கா (ஆங்கிலம்) – இணைய இதழ்
பூங்கா இதழ் (தமிழ்) – இணைய இதழ்
தி நியூஸ் பார்க் (ஆங்கிலம்) – இணைய இதழ்
தி நியூஸ் பார்க் மொபைல் பயன்பாடு (Mobile App) – soon

ஆராய்ச்சி வெளியீடுகள் (Research Park)
சட்டம், மேலாண்மை மற்றும் சமூக அறிவியல் ஆராய்ச்சி இதழ் 
சர்வதேச நிறுவனங்கள், அரசியலமைப்பு சட்டம், ஆட்சியியல் ஆராய்ச்சி இதழ் 
குற்றங்கள், விபத்துகள், குற்றவியல் சட்டம், பாதிக்கப்பட்டோரியல் ஆராய்ச்சி இதழ்
அமைதி உத்திகள் மற்றும் ஆராய்ச்சி இதழ் 
விண்வெளி, கடல், ஆகாயம் ஆராய்ச்சி இதழ்
வாக்காளரியல் (Voterology) ஆராய்ச்சி இதழ்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Google search engine

Latest Articles