மக்களாட்சி நாடுகளில் மக்களின் நல்வாழ்வுக்கு சிறந்த ஆட்சி (good governance) அவசியம் என்பதை யாராலும் மறுக்க இயலாது. இதற்கு மக்களிடையே ஊழல் எதிர்ப்பு விழிப்புணர்வும் (vigilance) அரசின் ஊழல் தடுப்பு நடவடிக்கைகளும் (anti-corruption) மிக முக்கியமானவை என்பதையும் யாராலும் மறுக்க முடியாது.
ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் (Transparency International) என்ற அமைப்பு வெளியிட்ட ஊழல் புலனாய்வு குறியீட்டில் (corruption perception index – CPI) பின்லாண்ட், டென்மார்க், சிங்கப்பூர் ஆகிய நாடுகள் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன. ஆனால், ஊழல் குறியீட்டு ஊழல் புலனாய்வு குறியீட்டில் 100 மதிப்பெண்களுக்கு 38 மதிப்பெண்களை மட்டுமே இந்தியா பெற்றுள்ளது. இதன் மூலம் உலக நாடுகளில் ஊழல் ஒழிப்பு வரிசையில் 96 ஆம் இடத்தை மட்டுமே பிடித்துள்ளது என்பது கசப்பான உண்மையாகும்.
அப்படியெனில், இந்திய அரசும் மாநில அரசுகளும் ஊழல் எதிர்ப்பு விழிப்புணர்வுக்கும் ஊழல் தடுப்பு நடவடிக்கைகளுக்கும் அரசின் வரவு செலவு திட்டங்களில் பணம் ஒதுக்கி (allocation of funds) நடவடிக்கைகளை மேற்கொள்வது இல்லையா? என்ற கேள்வி எழுவது இயல்பானதாகும்.
இந்தியாவில் புதிய இந்திய தண்டனைச் சட்டம், 2023, ஊழல் தடுப்புச் சட்டம், 1988 லோக்பால் மற்றும் லோக்ஆயுக்தா சட்டம், 2013, வருமான வரி சட்டம்,1961, சட்ட விரோத பண பரிவர்த்தனை தடுப்பு (prevention of money laundering) சட்டம், 2002, பினாமி பரிவர்த்தனைகள் (தடுப்பு) சட்டம், 1988. அன்னிய செலாவனி மோசடி தடுப்புச் சட்டம் வெளிநாடு நிதியுதவி (ஒழுங்குமுறை) சட்டம், 2010, இடித்துரைப்பாளர் பாதுகாப்புச் சட்டம், 2014 (The whistle blowers protection act,2014) உள்ளிட்ட சட்டங்கள் ஊழலைத் தடுக்கவும் ஊழல் செய்பவர்களை தண்டிக்கவும் இயற்றப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசில் சென்ட்ரல் விஜிலன்ஸ் கமிஷன் (Central vigilance Commission) என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. இதே போலவே மத்திய அரசின் அமலாக்கத்துறை, சட்ட விரோத பண பரிவர்த்தனை தடுப்பு அமைப்புகள் (prevention of money laundering), வருமான வரித்துறை உள்ளிட்ட பல துறைகளும் ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் ஊழல் எதிர்ப்பு விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு காவல்துறை அமைப்புகள் செயல்படுகின்றன. இதனைத் தவிர தன்னாட்சி அமைப்புகளாக ஊழல் ஒழிப்பு விசாரணைகளை மேற்கொள்ள இந்திய அளவில் லோக்பால் அமைப்பும் ஒவ்வொரு மாநிலத்திலும் லோக் ஆயுக்த அமைப்பும் அமைப்புகளும் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

இந்திய அரசாலும் மாநில அரசுகளாலும் அமைக்கப்பட்டுள்ள ஊழல் தடுப்பு அமைப்புகளில் தலைவர் முதல் கடை நிலை ஊழியர் வரை பல்லாயிரக்கணக்கானோர் பணியாற்றுகிறார்கள். இவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப்படுகிறது. ஊழல் தடுப்பு அமைப்புகளுக்கான அலுவலக கட்டிடங்கள், அலுவலகங்களில் தேவையான வசதிகள், அலுவலர்களுக்கான வாகனங்கள் உட்பட ஊழல் தடுப்பு உட்கட்டமைப்புக்கு பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதோடு அவற்றை பராமரிக்கவும் ஆண்டுதோறும் செலவு செய்யப்படுகிறது.
(தொடர்ச்சி கீழே உள்ள அட்டவணை செய்திகளுக்கு கீழ்)
ஆக, இந்திய அரசும் மாநில அரசுகளும் ஊழல் ஒழிப்புக்கு வரவு செலவு திட்டங்களில் பணம் ஒதுக்குவதில்லை என்று கூறிவிட முடியாது. ஊழல் ஒழிப்பு அமைப்புகள் எவை என்பது குறித்தும் அவற்றில் எவ்வாறு புகார் செய்வது என்பது குறித்தும் புகார் செய்பவரின் அடையாளம் ரகசியமாக பாதுகாக்கப்படுமா? என்பது குறித்தும் மக்களிடையே எவ்வித விழிப்புணர்வும் மிக குறைவான விழிப்புணர்வு மட்டுமே உள்ளது. குறிப்பாக, தேசிய அளவில் ஊழல் ஒழிப்பு உயர் விசாரணை அமைப்பான லோக்பால் மற்றும் மாநிலங்களில் அமைக்கப்பட்டுள்ள லோக் ஆயுக்தா போன்றவை குறித்த விழிப்புணர்வு ஆயிரம் மக்களின் ஒருவருக்கு உள்ளதா? என்பதை என்பதே சந்தேகமானதாகும்.
இந்நிலையில் அரசின் ஊழல் ஒழிப்பு அமைப்புகள் மற்றும் தன்னாட்சியான ஊழல் ஒழிப்பு உயர் விசாரணை அமைப்பான லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தாக்கள் ஆகியவை குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவது தற்போதைய உடனடி தேவையாக உள்ளது. இதற்காக தன்னார்வ அமைப்புகளும் சமூக ஆர்வலர்களும் தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய தருணம் இதுவாகும். விழிப்புணர்வு ஏற்பட்டால் ஊழலை ஒழித்து விட முடியுமா? என்றால் விழிப்புணர்வு ஏற்பட்ட பின்பு அடுத்த கட்டமாக எத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது ஊழல் ஒழிப்பில் அடுத்த நிலையாகும் என்றால் மிகை ஆகாது மிகையாகாது.

பூங்கா இதழ் (The News Park) கருத்து:
இந்த கட்டுரை படைப்பின் உதவி: லக்ஷிதா ரவி, அரசு சட்டக் கல்லூரி மாணவி, நாமக்கல்.