இனிய வணக்கம். பழமையானவை தானாகவே வளரும். புதுமையானவை விருப்பத்திற்குட்பட்டு வளரும் – வான்கொதே. Growing old is mandatory. Growing up is optional – Von Goethe🌹🎋💐☘🌸🌺🌹🎋🌸🌺 |
யுத்தம்.. யுத்தம்.. யுத்தம்.. வரும், ஆனா வராது என்ற தலைப்பில் நேற்று பூங்கா இதழில் கட்டுரை வெளியானது. “மிகவும் அவசியமானது என்ற நிலை வரும் வரை இந்தியா நேரடியாக போரை தொடங்காது என்றும் பாகிஸ்தான் மீது மிகப்பெரிய பொருளாதார தாக்குதலையும் எல்லைகளை பலப்படுத்தி எல்லை பிரதேசங்களில் உள்ள பயங்கரவாதிகளை அழிக்கும் போரையும் இந்தியா நடத்தும் என்றே சர்வதேச பார்வையாளர்கள் கருதுகிறார்கள்” என்று நேற்றைய கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கட்டுரை வெளியான 24 மணி நேரத்துக்குள் பாகிஸ்தானுக்குள்ளும் பாகிஸ்தான் கைப்பற்றியுள்ள காஷ்மீரிலும் இந்திய ராணுவம் துல்லிய தாக்குதலை நடத்தியுள்ளது.

இன்று 7 மே 25 அதிகாலை 1:44 மணிக்கு இந்திய அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானிலும் பாகிஸ்தான் கைப்பற்றியுள்ள ஜம்மு காஷ்மீர் பகுதியிலும் 9 இடங்களில் பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானிய ராணுவ தளங்கள் மீது இந்த தாக்குதல் நடைபெற உள்ள என்றும் நடைபெறவில்லை என்றும் பகல்காமில் நடைபெற்ற பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பின்புலமாக இருந்தவர்களை அழிக்கும் நோக்கத்துடன் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்றும் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஹல்காம் தாக்குதலில் கணவரை இழந்த பெண்களுக்காக பழிதீர்க்கவே ‘ஆபரேஷன் சிந்தூர்’ திருமணம் ஆன பெண்கள் நெற்றி வடுகில் வைக்கும் குங்குமம் ‘சிந்தூர்’ என அழைக்கப்படும். பஹல்காம் தாக்குதலில் பல பெண்கள கண் எதிரில் அவர்கள் கணவன் சுட்டுக்கொள்ளப்பட்டு தங்கள் குங்குமத்தை இழந்தனர். பெண்கள் நெற்றியில் வைக்கும் குங்குமத்தை குறிக்கவே, ராணுவ நடவடிக்கைக்கு ‘ஆபரேஷன் சிந்தூர்‘ என இந்த தாக்குதலுக்கு பெயரிடப்பட்டதாக கருதப்படுகிறது. போர் ஒத்திகையை நாடு முழுவதும் இன்று நடத்துவதாக இந்தியா அறிவிருத்திருந்த நிலையில் இந்த ஒத்திகைக்குப் பிறகு பாகிஸ்தான் பகுதிகளில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தும் என்று பாகிஸ்தான் எதிர்பார்த்து நிலையில் அவர்களது எதிர்பார்ப்பை நிர்மூலமாக்கி இன்றைய தாக்குதல் இந்தியாவால் நடத்தப்பட்டுள்ளது.
இந்திய ராணுவத்தின் அதிரடி தாக்குதலால் பாகிஸதான், லாகூர், பஞ்சாப் நகரங்களில் அவசரநிலை பிரகடனத்தை அறிவித்துள்ளது. இந்திய ராணுவத்தின் லாகூர் தாக்குதலால் லாகூர் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். நேற்றைய கட்டுரையில் சொல்லப்பட்டது போல மட்டுப்படுத்தப்பட்ட யுத்தம் நடத்தப்பட்டுள்ளது. இந்த யுத்தம் முழு அளவிலான யுத்தமாக மாறாமல் இருப்பது பாகிஸ்தானின் சரியான எதிர்வினைகள் பாகிஸ்தான் ஆற்றும் எதிர் வினைகள் மூலமாக தெரிய வரும்.
பூங்கா இதழ் (The News Park) கருத்து: மட்டுப்படுத்தப்பட்ட யுத்தம் நடைபெறும் போது எதிரி ஆற்றும் எதிர்வினைகளுக்கு ஏற்பவே யுத்தத்தின் போக்கு நகரும் என்பதில் மாற்றமில்லை.