Advertisement

இந்த ஆண்டு மட்டும் தமிழகத்தில் தாக்கலான விவாகரத்து வழக்குகள் 17,638.  காரணங்களை அலசுகிறார்கள் சட்டக் கல்லூரி மாணவிகள்!

பல்கீஸ் பீவி. மு, சட்டக் கல்லூரி மாணவி

விவாகரத்து வழக்குகள் பெருமளவில் அதிகரித்துள்ளது என்பதை நாள்தோறும்  செய்தித்தாள்களில் வரும் செய்திகள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலமாக நாம்  தெரிந்துக் கொள்கிறோம். சில பிரபலங்களின் விவகாரத்து தகவல்கள் சில காலமாக பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அது சமூகத்திலும் எதிரோளித்தது என்பதே நிதர்சனம்.

பல்கீஸ் பீவி. மு, சட்டக் கல்லூரி மாணவி

தமிழகத்தில் விவாகரத்து கோரி நீதிமன்றங்களை நாடுவோரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் போன்ற நகரங்களில் செயல்படும் குடும்பநல நீதிமன்றங்களில் விவாகரத்து வழக்குகள் எகிறிக் கொண்டே இருக்கிறது. தமிழகத்தில் உள்ள 40 குடும்ப நல நீதிமன்றங்களில் இந்த ஆண்டு  2024 வரை விவாகரத்து, ஜீவனாம்சம் கோருதல், ஒன்றாக சேர்த்து வைக்க கோருதல், பரஸ்பர விவாகரத்து என 33 ஆயிரத்து 213 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் 17 ஆயிரத்து 638 வழக்குகள் இந்த ஆண்டு தாக்கல் ஆனவை. விவாகரத்து கோரி நீதிமன்றங்களை நாடுவோரில் இந்தியாவிலேயே மகாராஷ்டிரா மாநிலம் தான் முதலிடத்தில் உள்ளது. சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் தமிழகம் ஆறாவது இடத்தில் இருக்கிறது.

தற்போதைய சமூக சூழலில் பெரும்பாலான மக்கள் நிதி ரீதியாக சுதந்திரமாக உள்ளனர், அவர்கள் தங்கள் வாழ்க்கையைப் பற்றி தீர்மானிக்க சுதந்திரமாக உள்ளனர். இது குறிப்பாகப் பெண்களுக்கும் பொருந்தும். ஏனெனில் கடந்த காலங்களில் பெரும்பாலான பெண்கள் துஷ்பிரயோகம் அல்லது அவமதிப்புகளுக்கு ஆளாக வேண்டியிருந்தது மற்றும் அவர்கள் கணவரின் நிதியை சார்ந்திருப்பதன் காரணமாக இன்னும் கணவருடன் இருக்க வேண்டியிருந்தது. ஆனால், இப்போது விஷயங்கள் மாறிவிட்டன, பெண்கள் மன அமைதியை இழக்கும் தருவாயில் அந்த உறவில் தங்குவதற்குப் பதிலாக நச்சு உறவை முடிக்க விரும்புகிறார்கள். ஆனால்,  சிலர்  நிதிச் சுதந்திரத்தை தவறாகவும் பயன்படுத்தப்படுகிறார்கள். அங்கு சில மக்கள் சிறிய தவறான புரிதலுக்காக கூட உறவை முடித்துக் கொள்கிறார்கள் அவ்வாறு செய்தல் குடும்பத்திற்கு ஆபத்தானவை ஆகும். பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சிலர் தங்கள் துணைவரின் உணர்வுகளுக்கு நேரம் தராததும்,அவர்களுடன் நேரம் செலவு செய்யாததும்  விவகாரத்துக்கு வழி வகுக்கிறது.


கட்டுரைகளை வரவேற்கிறோம்  

** சமூக விழிப்புணர்வு மற்றும் அறிவு மேம்பாட்டுக்கான கட்டுரைகளை “பூங்கா இதழுக்கு” தாங்களும் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.  

** வெளியிட தகுந்தனவாக தேர்வு செய்யப்படும் கட்டுரைகள் பூங்கா இதழ்” இணைய இதழில் வெளியிடப்படும். கட்டுரைகளுடன் தங்களது பெயர், தொடர்பு எண் மற்றும் புகைப்படம் ஆகியவற்றை மின்னஞ்சலில் இணைத்து அனுப்பவும்.  

** தாங்கள் அனுப்பும் கட்டுரைகள் 500 வார்த்தைகளுக்கு மிகாமலும் 300 வார்த்தைகளுக்கு குறையாமலும் இருக்க வேண்டும் எம் எஸ் வேர்ட் (MS word) வடிவத்தில் மின்னஞ்சலுடன் இணைத்து அனுப்ப வேண்டும் கட்டுரைகளை சுருக்கவும், திருத்தவும், நிராகரிக்கவும் ஆசிரியர் குழுவுக்கு உரிமை உண்டு.

நட்பு என்பதே தம்பதியினர் இடையே நல்ல உறவை ஏற்படுத்தும். நட்பு என்பதை சிலர் இன்று தங்களது ஆசைகள் மற்றும் அலாதியான எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் ஆயுதமாக தங்களுக்காக பயன்படுத்தி கொள்கின்றன. இன்று சிலர் தங்கள் துணைவரை நண்பராகவும் கருதுவதில்லை, சமமான மனிதராகவும் கருதுவதில்லை. நாம்! என்று கருதாமல் நான் என்னும் அகங்காரம் கொண்டு வாழ்வதும் ,குடும்பம் குறித்தான விஷயங்களை பகிர்ந்து கொள்ளாமலும், தனக்கு எவ்வாறு எல்லாம் வாழ்க்கையை வாழ சுகந்திரம், உரிமை உள்ளதோ அதுப்போலவே தனது இணையருக்கும்  உள்ள உரிமையைப் புரிந்து கொள்ளாமல் அவருக்கான கனவுகள் மற்றும் இலக்குகளை அடைய தடையாக இருத்தலும், புரிதலோடு திருமணம் என்ற உறவில் பயணிக்காததும் உறவில் விரிசல் ஏற்பட்டு உறவு பிரிய காரணமாக உள்ளது.

சில பெண்களும் அவர்களுக்கு சட்டத்தின் வழியாக கிடைக்கும்  உரிமையை தவறாகவும் துஷ்பியோகம் செய்கின்றனர். இத்தகைய போக்கும் ஏற்புடையது அல்ல. பிடிக்கவில்லை என்றால் விலக்குதல் என்பது ஒன்றும் குற்றம் அல்ல! வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கபதிலும் கவனமாக இருக்க வேண்டும்.சேர்ந்து வாழ்வதிலும் கவனம் தேவை.

“கணவன் மனைவியிடமும் மனைவி கணவனிடம் தோற்கத் தயாராக இருந்தால் அங்கே “குடும்பம் ஜெயிக்கிறது” என்றே அர்த்தம்! காதல் என்பது நல்ல நேரங்களை செலவிடுவது மட்டுமல்ல, கடினமான காலங்களில் ஒருவருக்கொருவர் புரிந்துகொள்வது!”

ஆர். லக்ஷிதா, சட்டக் கல்லூரி மாணவி

இரு மனங்கள் இணையும் திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் என்பார்கள். “கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்”; “மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்” என்ற பழமொழிகள் கணவன் மனைவி உறவின் ஆழத்தை வெளிப்படுத்துகிறது. ஆனால், இன்று என்ன தான் ஜாதகம் பார்த்து, பொருத்தம் பார்த்து, சீர் செய்து, தடபுடலாக திருமணம் செய்து வைத்தாலும் பலரின் திருமண வாழ்க்கை நீண்ட நாள் நிலைப்பதில்லை.

காயப்படுத்தும் வார்த்தைகள், குடும்ப வன்முறை, அடிக்கடி எட்டிப்  பார்க்கும் சந்தேகங்கள், நான் என்கின்ற அகங்காரம், கோபம், வரட்டு கௌரவம்,  சுதந்திர மனப்பான்மை மற்றும் சகிப்பு தன்மை   இல்லாமை போன்ற காரணங்கள் விவாகரத்து மனநிலையை உருவாக்குகின்றன. விவாகரத்து பெற்று விட்டால் அவர்களின் வாழ்க்கையே முடிந்து விட்டது என்ற நிலை மாறிவிட்டது.  ஆசை பத்து  நாள்,  மோகம் முப்பது நாள்  என்பதைப் போல திருமணம் ஆகி சில மாதங்களிலேயே விவாகரத்து செய்கிறார்கள்.

“சில நேரங்களில் கசப்பான திருமணத்தை  விட  சுமுகமான  விவாகரத்து மேலானது. ஆனால், எல்லா விவாகரத்தும் மகிழ்ச்சியானதாக அமைவதில்லை. கணவன் மனைவி நீயா? நானா?  என்று வாழ்க்கையை நடத்துவதை விட நீயும் நானும் என்று வாழ்க்கை நடத்தினால் திருமணம் அர்த்தமுள்ளதாகும்”.

நுகர்வோர் முன்னெச்சரிக்கையாக இருக்கவும் பாதிப்புக்குள்ளாகும் போது தீர்வு காணவும் நுகர்வோர் உரிமைகளுக்கும் நுகர்வோர் பாதுகாப்புக்கும் அனைவரும் படியுங்கள் – “நுகர்வோர் பூங்கா (தமிழ்) – இணைய இதழ்”

டி. கீர்த்தனா, சட்டக்கல்லூரி மாணவி

நமது நாட்டில் திருமணம் என்பது ஒரு புனிதமான மட்டும் நிரந்தர பந்தமாக கருதப்படுகிறது. ஆனால் மாறிவரும் காலநிலைக்கு ஏற்ப, திருமணத்தில் அதிகரித்து வரும் பிரச்சனைகள் மற்றும் மோதல்களால் விவாகரத்து வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  விவாகரத்து என்பது பொதுவாக திருமணத்தின் சட்டப்பூர்வ கடமைகள் மற்றும் பொறுப்புகளை ரத்து செய்தல் அல்லது மறுசீரமைத்தல் ஆகியவற்றை உள்ளடக்குகிறது.

டி. கீர்த்தனா, சட்டக்கல்லூரி மாணவி

கணவன், மனைவி இருவருக்கும் இடையில் சகிப்புத்தன்மையின்மை,, பணப்பிரச்சனைகள், குடும்ப வன்முறை, யதார்த்தமற்ற எதிர்பார்ப்புகள், நம்பிக்கை சிக்கல்கள், திருமணத்துக்கு வெளியே உறவு, விருப்பமில்லா திருமணம் போன்றவை விவாகரத்துக்கு காரணமாக அமைகின்றன.

கடந்த பத்து ஆண்டுகளை ஒப்பிடுகையில் விவாகரத்து வழக்குகள் மூன்று மடங்கு அதிகரித்திருப்பது புள்ளி விவரங்கள் மூலம் தெரிகிறது.

பூங்கா இதழ் (The News Park) கருத்து: திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயப்படுவதில்லை. தமக்கான துணையைத் தேர்ந்தெடுக்க போது ஆணானாலும் சரி பெண்ணானாலும் சரி கவனமாக இருக்க வேண்டும். திருமண வாழ்க்கை வெற்றி பெற ஒருவருக்கொருவர் புரிதல் அவசியமானதாகும். திருமணத்துக்கு முன்பு ஆணுக்கும் பெண்ணுக்கும் வாழ்க்கையை உணர்த்தும் கல்வியை வழங்குவதும் அவசியமாகும்.

இதையும் படிக்கலாமே?  

வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு, துவரம் பருப்பு போன்றவற்றின் விலை திடீரென பல மடங்கு உயர்வது ஏன் தெரியுமா? இன்னும் மூன்று மாதத்தில் துவரம் பருப்பின் விலை மூன்று மடங்காகி விடுமா?  

ஜாமீன் கையொப்பம் செய்தவரிடம் அசல் ஆவணங்களை வழங்கிய வங்கி வாடிக்கையாளருக்கு ரூபாய் 30 லட்சம் இழப்பீடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு
இதையும் படிக்கலாமே?

வாக்காளரியல் என்றால் என்ன? அறிந்து கொள்ளுங்கள்! சிந்தனைகள் பரவ அனைவருக்கும் பகிருங்கள்!  

நல்லெண்ண தூதராக, புரவலராக, கௌரவ விரிவாக்க அலுவலராக பத்து இணைய பத்திரிகைகளில் பணியாற்ற வாய்ப்பு  

கௌரவ ஆசிரியராக, ஆசிரியர் குழு உறுப்பினராக, எழுத்தாளராக, பயிற்சி கட்டுரையாளராக பத்து இணைய பத்திரிகைகளில் பணியாற்ற வாய்ப்பு  

எங்களது வெளியீடுகள் (Our Current and Upcoming publication)

வெகுஜன வெளியீடுகள் (Popular Park)

நுகர்வோர் பூங்கா (தமிழ்) – இணைய இதழ்
நுகர்வோர் பூங்கா (ஆங்கிலம்) – இணைய இதழ்
பூங்கா இதழ் (தமிழ்) – இணைய இதழ்
தி நியூஸ் பார்க் (ஆங்கிலம்) – இணைய இதழ்
தி நியூஸ் பார்க் மொபைல் பயன்பாடு (Mobile App)

ஆராய்ச்சி வெளியீடுகள் (Research Park)

சட்டம், மேலாண்மை மற்றும் சமூக அறிவியல் ஆராய்ச்சி இதழ் 
சர்வதேச நிறுவனங்கள், அரசியலமைப்பு சட்டம், ஆட்சியியல் ஆராய்ச்சி இதழ்  குற்றங்கள், விபத்துகள், குற்றவியல் சட்டம், பாதிப்புகள் ஆராய்ச்சி இதழ்
அமைதி உத்திகள் மற்றும் ஆராய்ச்சி இதழ் 
விண்வெளி, கடல், ஆகாயம் ஆராய்ச்சி இதழ்
வாக்காளரியல் (Voterology) ஆராய்ச்சி இதழ்

Related Articles

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Google search engine

Latest Articles