ஏழைகளின் ஆப்பிள் தக்காளி என்பது எல்லோருக்கும் தெரியும். அதுபோல் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மக்களின் முந்திரி பருப்பு எது? என்ற கேள்விக்கு பலரும் அளிக்கும் பதில் வேர்க்கடலை! சுவையான சத்துக்களாலும் மக்களுக்கு பிடித்தமானதாக இருக்கும் வேர்க்கடலை எப்போது இருந்து பயிரிடப்படுகிறது? என்பதற்கு சரியான ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்றால் சுமார் 7,500 ஆண்டுகளுக்கு முந்தைய வேர்க்கடலை படிமங்களை பெரு நாட்டில் கண்டுபிடித்திருக்கிறார்கள். அங்குள்ள பழங்குடியினர் தான் அதனை முதன் முதலில் பயிரிட்டு இருக்கிறார்கள் என தெரிய வருகிறது.

கிட்டத்தட்ட அதே காலகட்டத்தில் பிரேசில் நிலக்கடலை ஓவியங்களும் நிறைய உருவாக்கப்பட்டுள்ளன. பேசில் மற்றும் பெருவில் இருந்து வேர்க்கடலை வேகமாக கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று இருக்கிறது.
தென்னிந்தியாவில் வேர்க்கடலையின் வரலாற்றை குறிப்பிடும் போது அன்றைய ஒருங்கிணைந்த பெண்ணார் காடு மாவட்டத்தின் பங்குகளின் தவிர்க்க முடியாதது. வண்டியில அன்றைய சென்னை மாகாண பகுதியில் முதன் முதலில் தென்னார்க்காடு மாவட்டத்தில் தான் வேர்க்கடலை விளைந்திருக்கிறது. அங்குள்ள மண்வளம் அதற்கு ஏற்றதாக இருப்பதே முதன்மை காரணமாகும் அண்டை மாநிலங்களான ஆந்திரா கர்நாடகாவும் அங்கிருந்துதான் பரவியுள்ளது.
கிபி 1850 -களில் தென்னார்க்காடு மாவட்டத்தில் சுமார் 1000 ஹெக்டேர் அளவுக்கு பயிரிட்டு இருக்கிறார்கள். பின்பு பல மடங்கு அதிகரித்திருக்கிறது அன்றைய பிரெஞ்சு குடியிருப்பு பகுதியாக இருந்த புதுச்சேரியில் இருந்து பிரான்சுக்கு வேர்க்கடலையும் கடலை எண்ணெயும் ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறது.
(தொடர்ச்சி கீழே உள்ள அட்டவணை செய்திக்கு கீழ்)

வேர்க்கடலை சத்துக்களில் பெட்டகமாக இருப்பது தெரியாமல் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு வரை அதனை கால்நடைகளுக்குதான் உணவாக்கி இருக்கிறார்கள். ஆடு மாடு பன்றிகள் அதனை தின்று கொழுத்திருக்கின்றன. அரிசி கோதுமை நவதானியங்கள் சாப்பிட கிடைக்காத ஏழைகள் மட்டுமே அப்போது அதனை உணவாக்கி இருக்கிறார்கள்.
வேர்க்கடலை மனிதர்கள் சாப்பிட வேண்டிய மிகச்சிறந்த உணவு என்பதை செயல்பாட்டிற்கு கொண்டு வந்தவர் பி.டி. பர்னம் என்ற அமெரிக்க சர்க்கஸ் கலைஞரான அவர் முதலில் தனது சர்க்கஸ் குழுவில் இருந்த அனைவரும் உடலுக்கு தேவையான ஆற்றலை பெற வேர்க்கடலை உருண்டைகளை தயார் செய்து வழங்கியுள்ளார். அதனை அனைவரும் விரும்பி சாப்பிட்டதால் சர்க்கஸ் காண வந்த ரசிகர்களும் அதனை தயார் செய்து வழங்கினார். அவர்கள் மீண்டும் மீண்டும் கேட்டு வாங்கி சுவைத்தனர். அங்கிருந்த விளையாட்டுப் போட்டிகளை காண வந்த ரசிகர்களின் கேலரிகளுக்கு கடலை உருண்டைகள் கொண்டு செல்லப்பட்டன. பின்பு வியாபாரிகள் அதனை வீதி வீதியாக கொண்டு சென்று விற்பனை செய்தனர். இப்படியாக வேர்க்கடலை உருண்டையின் புகழ் வேகவேகமாக பரவியது. மக்களும் வேர்க்கடலையில் விதவிதமாக தின்பண்டங்களை தயார் செய்து உண்ண ஆரம்பித்தனர்.
(தொடர்ச்சி கீழே உள்ள அட்டவணை செய்திக்கு கீழ்)

அமெரிக்காவில் வேர்க்கடலையின் தந்தையாக புகழ்படுகிறவர் ஜார்ஜ் வாஷிங்டன் கார்வர். இவர் 1896 ஆம் ஆண்டு விவசாயத் துறையில் முதுகலை பட்டம் பெற்றார். லாபம் தராத பருத்தி சாகுபடியில் இருந்து மக்களை மீட்டு வேர்க்கடலையை பயிரிட செய்தார். அதனால் அமெரிக்காவில் மண்வளம் அதிகரித்தது மகசூலம் அதிகம் கிடைத்தது வேர்க்கடலையில் இருக்கும் சத்துக்கள் மற்றும் வேதிப்பொருள்கள் பற்றி ஆராய ஆராய்ச்சி கூடம் ஒன்றினை கார்வர் நிறுவினார்.
தனது ஆராய்ச்சி மூலம் வேர்க்கடலையில் 33 சதவீதம் எண்ணெய் சத்து இருப்பதையும் 7 விதமான வேதிப்பொருள்கள் இருப்பதையும் கண்டறிந்தார். வேர்க்கடலை சிறந்த உணவுப் பொருள் மட்டுமல்ல வேர்க்கடலையும் அதன் தோடுகளையும் தொழில் துறையிலும் பல விதங்களில் பயன்படுத்தலாம் என்பதை கண்டறிந்து உலகிற்கு அறிவித்தவர் கார்வர் தான். அதனால் வேர்க்கடலைக்கு அதிக மவுசு ஏற்பட்டது.
நமது சுதந்திரப் போராட்ட காலத்தில் காந்திஜி அடிக்கடி உண்ணாவிரதம் போராட்டத்தில் பங்கு பெற்றார். அடிக்கடி சிறை வாசமும் அனுபவித்தார். அதை கேள்விப்பட்டு ஜார்ஜ் வாஷிங்டன் கார்வர் பெரும் கவலை கொண்டார். அப்போது காந்திஜிக்கு அவர் ஒரு கடிதம் எழுதினார் அதில் உங்கள் உடல் வலுவாக இருந்தால் தான் உங்களால் தொடர்ச்சியாக போராட்டங்களில் ஈடுபட முடியும். அதனால் உங்களுக்கு புரதச்சத்து மிக அவசியம் அதற்காக வேர்கடலையும் ஆட்டுப்பாளையம் பருகுங்கள் என்று குறிப்பிட்டு இருந்தார். அதன் பின்பே ஆட்டுப்பாளையம் கடலையும் காந்திஜி அன்றாடம் பயன்படுத்த தொடங்கி இருக்கிறார்
உலகத்தின் அனைத்து பகுதிகளிலும் வேர்க்கடலை மிட்டாய்கள் விதவிதமான வடிவங்களிலும் சுவைகளிலும் விற்பனையாகி கொண்டிருந்தாலும் கோவில்பட்டி கடலை மிட்டாய் இன்றும் நாவில் நர்த்தனம் ஆடும் சுவைக்கு சொந்தமானதாக இருந்து கொண்டிருக்கிறது. அதற்கு என்ன காரணம் தெரியுமா?
(தொடர்ச்சி கீழே உள்ள அட்டவணை செய்திகளுக்கு கீழ்)
முந்தைய நாட்களில் தூத்துக்குடி சுற்றுவட்டாரம் பகுதிகளில் வேர்க்கடலை சாகுபடி சமூகமாக நடந்து கொண்டிருந்தது. கோவில்பட்டி வட்டார பகுதிகளில் பனைத் தொழில் முதல் இடத்தை பிடித்திருந்தது. அவை இரண்டையும் கலந்து கடலை உருண்டை தயாரிக்கும் முறை கோவில்பட்டியில் அரங்கேறியது. கருப்பட்டியால் தயாரிக்கப்பட்ட அந்த கடலை உருண்டைகளை வீடுகளிலே மக்கள் உருவாக்கி சுவைத்தனர்.
தேர்ந்தெடுத்து வாங்கப்படும் வேர்க்கடலையும் வறுக்கும் பதமும் தரமான வெல்லமும் பக்குவமாக காய்ச்சப்படும் பாகுவும் கோவில்பட்டி கடலை மிட்டாயின் புகழுக்கு காரணமாக இருக்கின்றன. அதோடு சிறிதளவு கற்கண்டு ஏலக்காய் தூள் சுக்குத்தூள் தாங்கி துருவல் போன்றவைகளும் சேர்க்கப்படுகின்றன. கோவில்பட்டி கடலை மிட்டாய் 3 மாதங்கள் வரை முறுமுறுப்பா இருக்கும். இதுவே அதன் சுவையின் ரகசியம். உடல் ஆரோக்கியத்திற்கு கடலை உருண்டை சாப்பிடுங்கள்.
படைப்பு: எஸ்.ஏ. சூரியா, அரசு சட்டக் கல்லூரி மாணவர், நாமக்கல்.
பூங்கா இதழ் (The News Park) கருத்து: ஒரு சட்டக் கல்லூரி மாணவரின் இந்த படைப்பு பாராட்டுதலுக்குரியது.


