- உலகில் உள்ள ஏழு கண்டங்களில் வட அமெரிக்கா, தென் அமெரிக்கா என்பவை இரண்டு கண்டங்கள். இதில் வட அமெரிக்காவில்தான் அமெரிக்கா என்று பொதுவாக இந்தியர்களால் கூறப்படும் நாடு அமைந்துள்ளது. அந்த நாட்டின் முழு பெயர் அமெரிக்க ஐக்கிய நாடுகள் (United Stated of America) என்பதாகும்.
- இந்திய நேரப்படி இன்று மாலை அமெரிக்காவின் அறுபதாவது அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
- இந்தியாவை இங்கிலாந்தின் ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்ததைப் போலவே அமெரிக்காவையும் அவர்கள் ஆட்சி செய்து வந்தனர். இங்கிலாந்து நாட்டவரிடமிருந்து கடந்த 4 ஜூலை 1876 அன்று அமெரிக்கா விடுதலை பெற்றது. அமெரிக்காவின் விடுதலை நாளாக ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 4 அன்று கொண்டாடப்படுகிறது.
- அமெரிக்க சுதந்திரம் பெறும்போது 13 மாகாணங்கள் மட்டுமே இங்கிலாந்துக்கு எதிரான சுதந்திர போராட்டத்தில் பங்கு பெற்று வெற்றி பெற்றனர். இதன் பின்னர் பல மாகாணங்கள் அமெரிக்காவில் இணைந்ததை தொடர்ந்து தற்போது அமெரிக்காவில் 50 மாகாணங்கள் உள்ளன. மாநில ஆளுநர்களும் தேர்தல் மூலமாகவே தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
- உலகில் பரப்பளவில் நான்காவது பெரிய நாடு அமெரிக்கா. நிலப்பரப்பின் அடிப்படையில் முதலாவது பெரிய நாடாக ரஷ்யாவும் இரண்டாவதாக கனடாவும் மூன்றாவதாக சீனாவும் நான்காவதாக அமெரிக்க ஐக்கிய நாடுகளும் ஐந்தாவதாக பிரேசிலும் ஆறாவதாக ஆஸ்திரேலியாவும் ஏழாவதாக இந்தியாவும் உள்ளது.
- அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அரசியலமைப்பை (Constitutional law of USA) தயாரிக்கும் பணி செப்டம்பர் 1787 -ல் தொடங்கியது. அமெரிக்காவின் அரசியலமைப்பு 4 மார்ச் 1889 அன்று நடைமுறைக்கு வந்தது. கடந்த 1789 முதல் தற்போது வரை அமெரிக்க அரசியலமைப்பில் 27 திருத்தங்கள் மட்டுமே செய்யப்பட்டுள்ளன. ஏனெனில், அமெரிக்க அரசியலமைப்பை திருத்துவது எளிதானதல்ல. அதற்கு பெரும்பான்மையான மாநிலங்களும் ஆதரவளிக்க வேண்டும்.
- அமெரிக்காவில் உள்ள மாகாணங்கள் ஒவ்வொன்றும் அமெரிக்காவின் மத்திய அரசியலமைத் தவிர மாநில அரசியலமைப்பையும் கொண்டுள்ளன. ஒவ்வொரு மாகாணத்துக்கும் தனி கொடி உள்ளது. ஒவ்வொரு மாகாணமும் ஒரே மாதிரியாக இல்லாமல், வேறுபட்ட மாகாண சட்டமன்றங்களை கொண்டுள்ளன.
- அமெரிக்க அரசியலமைப்புபடி அமெரிக்க ஐக்கிய நாட்டில் அதிபர் ஆட்சி முறை உள்ளது. நான்காண்டுகளுக்கு ஒரு முறை அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. அமெரிக்க அரசியலமைப்புபடி இரண்டு முறை மட்டுமே ஒருவர் அமெரிக்காவின் அதிபராக இருக்க இயலும். சில சிறிய அரசியல் கட்சிகள் அமெரிக்காவில் இருந்த போதிலும் அங்கு இரட்டை கட்சி ஆட்சி முறையே அமெரிக்கா சுதந்திரம் பெற்றதிலிருந்து வலுவாக இருந்து வருகிறது
- இந்தியாவின் பாராளுமன்றம் போல அமெரிக்காவின் உள்ள பாராளுமன்றத்தின் பெயர் காங்கிரஸ் (Congress). இந்தியாவின் பாராளுமன்றத்தில் கீழவை எனப்படும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் லோக்சபா போல அமெரிக்காவின் காங்கிரஸில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் சபை (House of Representatives) உள்ளது. இதைப் போலவே இந்தியாவின் பாராளுமன்றத்தில் மேலவை -மாநிலங்களவை எனப்படும் ராஜ்யசபா போல அமெரிக்காவின் மாநிலங்களவையாக செனட் (senate) உள்ளது.
- இந்தியாவைப் போலவே மக்கள் தொகைக்கு ஏற்ப அமெரிக்காவின் கீழவையான பிரதிநிதிகள் சபைக்கு உறுப்பினர்கள் ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் தற்போது உறுப்பினர்களின் எண்ணிக்கை 435.
- இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் சமமான உறுப்பினர்கள் எண்ணிக்கை மாநிலங்கள் அவையில் வழங்கப்படவில்லை. ஆனால், அமெரிக்காவில் மாநிலங்கள் அவையான செனட்டில் 50 மாகாணங்களுக்கும் தலா இரண்டு உறுப்பினர்கள் வீதம் நூறு உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர்.
- கடந்த 1845 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டப்படி நான்காண்டுகளுக்கு ஒருமுறை அதாவது லீப் வருடத்திற்கு முந்திய வருடத்தில் நவம்பர் மாதத்தில் வரக்கூடிய திங்கள்கிழமைக்கு அடுத்த செவ்வாய்க்கிழமை அமெரிக்க அதிபருக்கான தேர்தல் நாடு முழுவதும் நடத்தப்படுகிறது.
- அமெரிக்க அதிபரை மக்கள் நேரடியாக தேர்ந்தெடுப்பதில்லை. ஒவ்வொரு மாகாணத்திலும் மக்கள் தொகைக்கு ஏற்ப மாகாண பிரதிநிதிகளை மக்கள் தேர்வு செய்கிறார்கள். இவ்வாறு தேர்வு செய்யப்பட்ட 538 மாகாண பிரதிநிதிகள் ஒன்று கூடி அமெரிக்க அதிபரை தேர்வு செய்கிறார்கள். புதிதாக தேர்வு செய்யப்படும் அதிபர் ஒவ்வொரு லீப் வருடத்திலும் ஜனவரி மாதம் இருபதாம் தேதி பதவியேற்றுக் கொள்கிறார்.
- அமெரிக்காவில் அதிபர் இறந்து விட்டாலோ அல்லது வேறு காரணங்களுக்காக பதவி விலகி விட்டாலோ இடைத்தேர்தல் நடத்தப்படுவதில்லை. மாறாக, அந்த நாட்டின் துணை அதிபர் நான்காண்டுகளில் எஞ்சிய காலத்துக்கு அதிபராக இருப்பார். இதனால், அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கு இடைத்தேர்தல் என்பது கிடையாது. நான்காண்டுகளுக்கு ஒருமுறை அதிபர் மட்டுமே தேர்தல் நடைபெறுகிறது.
- அமெரிக்க அதிபர் தேர்தலில் தேர்தல் நாள் அன்று வாக்களிப்பதற்கு பதிலாக முன்னதாகவே வீட்டிலிருந்தே வாக்களிக்கும் நடைமுறையும் உள்ளது அமெரிக்காவில் நியூயார்க் மாகாணத்தில் நடைபெறும் அதிபர் தேர்தலுக்கான வாக்கு சீட்டில் இந்திய மொழியான பெங்காலி இடம் பெற்றுள்ளது.
- அமெரிக்க ஐக்கிய நாடுகளின் கூட்டாட்சி அரசாங்கத்திற்கு தற்போதைய நிலவரப்படி 35.87 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் (35,87,000 லட்சம் கோடி அமெரிக்க டாலர்) கடன் உள்ளது. இந்த வகையில் அமெரிக்க முதல் இடத்தை பிடித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி அமெரிக்காவின் ஒரு டாலர் என்பது இந்தியாவின் 84.15 ரூபாயாகும்.
- அமெரிக்காவில் வீடு இல்லாதவர்களும் பிச்சை எடுப்பவர்களும் வேறு நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக குடியேறி உள்ளவர்களும் ஏராளமாக உள்ளனர். 1972 ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலின் போது நடந்ததாக கூறப்படும் வாட்டர் கேட் ஊழல் என்பது உலகப் பிரசித்தி பெற்ற ஒன்றாகும். தனிநபர்கள் துப்பாக்கிகளை வைத்து கொள்ளுதல் காரணமாக பிரச்சனைகள், போதை பொருள் புழக்கம் போன்ற பிரச்சனைகளும் அமெரிக்காவில் உள்ளன.
- தற்போதைய தேர்தலில் எப்போதும் இல்லாத அளவுக்கு இரண்டு கட்சிகளின் தரப்பிலும் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் தேர்தலுக்காக செலவிடப்படுவதாக கூறப்படுகிறது. நாட்டின் பாராளுமன்றத்தை விட அதிக அதிகாரம் படைத்தவராகவே அமெரிக்க அதிபர் திகழ்கிறார். உலக நாடுகளில் வலிமை மிக்கவராக அமெரிக்க அதிபர் விளங்குவதால் உலக நாடுகள் அமெரிக்க அதிபர் தேர்தலின் முடிவை உற்று நோக்குகின்றன.
வீடு வாங்க போனா எப்படி எல்லாம்
ஏமாத்துறாங்க! கட்டாத வீட்டுக்கு ஜிஎஸ்டி வரி பிடித்தம்!
https://theconsumerpark.com/house-booking-cacellation-unfair-trade-practice