Advertisement

ரூ 36,000 கோடி மெத்தம்பேட்டமைன் பறிமுதல், விற்ற காவலர்கள் கைது, கொடிய மெத்தம்பேட்டமைன் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்! அனுப்பி விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்!

கடந்த வாரத்தில் சென்னைக்கு கிழக்கே உள்ள அந்தமான் தீவுகளுக்கு அருகில் ரூ 36,000 கோடி மதிப்புள்ளான மெத்தம்பேட்டமைன் போதை  பொருளை கடலோர காவல் படையினர் பறிமுதல் செய்தனர் என்பது ஒரு செய்தி. மத்திய போதை பொருள் புலனாய்வு நுண்ணறிவு பிரிவினர் மெத்தம்பேட்டமைன் போதை பொருளை கைப்பற்றி வைத்திருந்ததில் அதிகாரிகளுக்கு தெரியாமல் அந்தப் பிரிவில் உள்ள காவலர் எடுத்து விற்பனை செய்துள்ளார். அதனை வாங்கி விற்றவரும் சென்னை காவல் காவல்துறையில் டி. நகர் உதவி ஆணையர் அலுவலகத்தில் வேலை பார்க்கும் காவலர் ஆவார் இவர்கள் இருவரும் கடந்த வாரம் சென்னை காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது ஒரு செய்தி. இத்தகைய மெத்தம்பேட்டமைன் செய்திகள் சமீப காலமாக இந்தியா முழுவதும் அதிகரித்துள்ளது.

மெத்தம்பேட்டமைன் என்றால் என்ன? ஏன் அதனை கொடிய போதைப் பொருளாக பார்க்கிறோம்? என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்கு இந்த பதிவு வெளியிடப்படுகிறது இதனை மற்றவர்களுக்கும் அனுப்பி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

மெத்தம்பேட்டமைன் என்பது ஆய்வகத்தில் (lab) உருவாக்கப்படும் மனிதனின் மைய நரம்பு மண்டலத்தை தூண்டும் பொருளாகும். இந்தப் பொருள் சில வகை நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், இதனை உட்கொள்ளுவர்களை அடிமையாக்கும் திறன் இந்தப் பொருளுக்கு உண்டு. இதனால், பல நாடுகளில் இந்த மருந்து பொருள் தடை செய்யப்பட்டிருக்கிறது அல்லது கட்டுப்படுத்தப்பட்ட (restricted) பொருளாக மருத்துவரின் பரிந்துரையின் பெயரில் விற்பனை செய்யப்படுகிறது இதனால்தான் இதனை போதைப் பொருளாக கள்ளச் சந்தையில் உருவாக்கி விற்பனை செய்கிறார்கள். 

கள்ளச் சந்தையில் மெத்தம்பேட்டமைன் போதை பொருளை   மருந்து, மாத்திரை, பொடி அல்லது ஐஸ் எனப்படும் சங்கி படிகங்களாக தயாரிக்கின்றனர். இதனை மாத்திரை வடிவில் விழுங்கியும் மூக்கின் மூலம் இழுத்தும் அல்லது புகை பிடிக்கப்பட்டும் அல்லது ஊசி மூலம் நரம்பில் செலுத்தியும் பயன்படுத்தப்படுகிறது. கிரிஸ்டல் மெத் என்ற புனைப்பெயர் கொண்ட ஐஸ் ஒரு பிரபலமான போதைப்பொருள் இளைஞர்களிடையே விற்பனை செய்யப்படுகிறது. 

மெத்தம்பேட்டமைன் உபயோகிப்பவர்கள் தாங்கள் ஆவி போல பறந்து கொண்டிருப்பதாக நினைக்கிறார்கள். தாங்கள் உயர் மற்றும் ஆற்றல் நிறைந்தவர்களாக உணருகிறார்கள். ஆனால், மெத் உடல் மற்றும் மூளைக்கு மிகவும் தீங்கு விளைவிக்க கூடியது. இந்தப் போதைப் பொருளை உட்கொள்வதால் பசி இல்லாமல் போகிறது. இதனால் இதற்கு அடிமையானவர்கள் விரைவாக உடல் எடை  குறைந்து விடுவார்கள். இந்தப் பொருளால் ஒழுங்கற்ற இதயத் துடிப்பு, அதிக ரத்த அழுத்தம், தலை வலி, பார்வை குறைபாடு ,உலர்ந்த வாய், தலை சுற்றல் போன்றவை ஏற்படும். 

மெத்தம்பேட்டமைன் உபயோகிப்பவர்களின் பற்களில் சிதைவு ஏற்படுவதோடு ஈறு நோயும் ஏற்படுகிறது இவர்களது பற்கள் உடைந்த வண்ணம் காணப்படுவதோடு சில நேரங்களில் விடுகிறது. நீண்ட காலமாக மெத்தை பயன்படுத்தும் போது நினைவாற்றல் இழப்பும் உடல் இயக்கத்தில் சிக்கலும் ஏற்படும். அதிக அளவுகளில் பயன்படுத்தப்படும் போது, ​​ ஆபத்தான உயர் உடல் வெப்பநிலை, குழப்பம், வலிப்பு, கட்டுப்படுத்த முடியாத உடல் அசைவுகள் போன்றவையும் மரணமும் ஏற்படக்கூடும்.

மெத்தம்பேட்டமைன் உபயோகிப்பதால் பலர் வாழ்க்கையை தொலைத்து விடுகின்றனர். இதனை வாங்குவதற்கு பணம் பிரச்சனை ஏற்படும் போது குற்றச் செயல்களில் இவர்கள் ஈடுபடுகிறார்கள். இதனை உபயோகிப்பவர்களுக்கு அதிக நேரம் தூக்கம் வராது, இதனால் கெட்ட சிந்தனைகளும் குற்ற தூண்டுதல்களும் அதிகரிக்க கூடும். மெத்தம்பேட்டமைன் உபயோகிப்பவர்களின் மனநிலை மாற்றங்கள் உடையதாக தோன்றுவதோடு இவர்களது நடத்தை வன்முறையாக மாறுகிறது. கற்பனையான தன்னம்பிக்கை காரணமாக மெத்தம்பேட்டமைன் பயன்பாடு பாலியல் நடத்தைகளில் மாற்றங்களுக்கு வழிவகுக்கும். மெத்தம்பேட்டமைன் உபயோகிப்பவர்களின் வன்முறையால் குற்றங்கள் சமூகத்தில் அதிகரிக்கிறது. இவர்களது பாலியல் தூண்டுதல் மனநிலையால் பெண்களுக்கு மிகுந்த ஆபத்து ஏற்படுகிறது.

ஆய்வகங்களில் மெத்தம்பேட்டமைன் உருவாக்கப்படுவதால் எளிதில் காவல்துறையினரால் உருவாக்கப்படும் இடத்தை கண்டுபிடிக்க இயலுவதில்லை. காவல்துறையினர் புலனாய்வு மேற்கொண்டு இத்தகைய போதை பொருள் தயாரிக்கும் ஆய்வகங்களை களை எடுக்க வேண்டும். இவற்றை கள்ளச் சந்தையில் மொத்த வியாபாரம் செய்பவர்களை கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மெத்தம்பேட்டமைன் சில்லறை வியாபாரத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும்.  இந்த வியாபாரிகளின் குறி இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மீதானதாக உள்ளது. இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் போதிய போதை பொருள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியமாகும்.

வாழ்க்கையை இழந்து, உடல்நலத்தை இழந்து, குற்றவாளிகளாக மாறிப் போகும் மெத்தம்பேட்டமைன் போதை பொருள்  கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுவது முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும். இந்தப் போதைப் பொருளால் அடிமையானவர்களை மீட்க மீட்பு மையங்கள் செயல்படுகின்றன. இவர்களை மீட்பதற்கு மருத்துவ உலகமும் பல்வேறு ஆராய்ச்சிகளை செய்து கொண்டிருக்கிறது. இத்தகைய போதை பொருள் மீதான நாட்டம் எவருக்கும் ஏற்படாமல் இருக்க செய்வது ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ளவர்களின் கடமை – சமூகத்தில் இருப்பவர்களின் ஒவ்வொருவரின் கடமையாகும்.

நவகிரக அதிபதிகளில் முதன்மையான
சூரியனுக்கு இந்தியாவில் இரண்டு கோவில்கள் – அதில் ஒன்று தமிழகத்தில்!

https://theconsumerpark.com/suriyanar-kovil-sun-temple-tamilnadu

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Google search engine

Latest Articles