Advertisement

தாம்பத்தியத்தை பெருக்கி அதிக குழந்தைகளை பெற ஊக்குவிக்க தனித்துறை, திட்டம் போட்டு திருடும் நைஜீரிய கிரிமினல்கள் இந்தியாவில் கைது செய்யப்படாத மாதமே இல்லை – என்பது உள்ளிட்ட கருத்து மூட்டையுடன்  வாக்காளர் சாமி.

இன்று காலையில் பூங்கா இதழ் அலுவலகத்துக்கு வருகை புரிந்த வாக்காளர் சாமிக்கு வணக்கம் செலுத்தி விட்டு, “என்ன சாமி செய்திகள்?” என கேட்டதும் கருத்து மூட்டையை அவிழ்க்க தொடங்கினார் அவர். 

“சென்னையில் மெத்தாம்பெட்டமைன் போதைப்பொருள் விற்பனை செய்ததாக நைஜீரிய நாட்டைச் சேர்ந்த வில்லியம் ஜோசப் என்பவரை சென்னை காவல் துறையினர் பெங்களூருவில் நேற்று கைது செய்துள்ளனர். கடந்த மாதத்தில் (2024, அக்டோபர்) தகுந்த ஆவணங்கள் இன்றி இந்தியாவில் வசித்த நைஜீரிய நாட்டைச் சேர்ந்த நபரை திருப்பூர் நகர போலீஸார் கைது செய்தனர். ஈரோட்டில் தங்கியிருந்த அவர் பின்னலாடை தொழிலுக்காக அடிக்கடி திருப்பூருக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது” என்றார் வாக்காளர் சாமி.

“ஈரோட்டில் டிராவல்ஸ் ஏஜெண்டிடம் இந்திய ரூபாய்க்குப் பதிலாக போலி அமெரிக்க டாலர்களைக் கொடுத்து ஏமாற்றிய நைஜீரிய நாட்டைச் சேர்ந்த நாதன் இகெச்சுக்வ் என்பவரை ஈரோடு போலீஸார் கடந்த 2024 ஆகஸ்ட் மாதத்தில் கைது செய்தனர்.  போலி வெளிநாட்டு கரன்சி வழங்கி  ஏமாற்றியதாக அந்த நபர் மீது ஏற்கனவே கோயம்புத்தூர் காவல்துறையில் நிலுவையில் இருப்பதாக தெரியவந்துள்ளது” என்றார் வாக்காளர் சாமி. 

“கடந்த 2024 பிப்ரவரி மாதத்தில் சென்னையைச் சேர்ந்த ஒரு பெண்மணி மேட்ரிமோனியல் இணையதளம் மூலமாக நைஜீரிய நாட்டினை சேர்ந்த ஒருவனுடன் அறிமுகமாகியுள்ளார். தொலைபேசியில் தொடர்பு கொண்ட அந்த நபர் திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்துள்ளார். இந்நிலையில் அந்தப் பெண்மணிக்கு விலை உயர்ந்த பொருளை கொண்ட பரிசு பெட்டகத்தை தாம் அனுப்பி உள்ளதாக தொலைபேசியில் அவன் தெரிவித்துள்ளான். ஓரிரு நாட்களில் டெல்லி விமான நிலைய சுங்கத்துறையின் அதிகாரிகள் பேசுவதாக அந்த பெண்மணிக்கு தொலைபேசி வந்துள்ளது. அதில் சட்ட விரோதமான பொருட்கள் இருப்பதாகவும் அந்த வழக்கிலிருந்து விடுவிக்க பணம் தராவிட்டால் கைது செய்ய நேரிடும் என மிரட்டி பல்வேறு வங்கி கணக்குகளில் 2.8 கோடி பணத்தை டெபாசிட் செய்ய வைத்து அந்த பெண்ணை ஏமாற்றி உள்ளனர். அவர் கொடுத்த புகாரில் அகஸ்டின் மதுபுச்சி மற்றும் சினேடு என்ற இரண்டு நைஜீரிய நபர்களை டெல்லியில் தமிழக காவல்துறை கைது செய்துள்ளது. அவர்களிடம் 7 மொபைல் ஃபோன்களும் மூன்று லேப்டாப்புகளும் 40 டெபிட் கார்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன” என்றார் வாக்காளர் சாமி.

“கடந்த 2023 ஜூன் மாதத்தில் ஒரு தனியார் நிறுவனத்தின் வங்கிக் கணக்கு விவரங்களை அணுகி ரூ.17 லட்சத்துக்கு மேல் மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் நைஜீரிய நாட்டைச் சேர்ந்த யூசுப் ஓலெலோகான், ஓபியேலு பீட்டர் மற்றும் ஒலியுபுப் ஜேம்ஸ் ஆகிய மூவரை சென்னை  மத்திய குற்றப்பிரிவு பெங்களூருவில் கைது செய்துள்ளனர். இந்த கும்பல் தனியார் நிறுவனத்திற்கு ஃபிஷிங் மின்னஞ்சல் அனுப்பி கணினியில் நுழைந்த பிறகு நிறுவனத்தின் சிம் கார்டைத் தடுத்து டூப்ளிகேட் சிம் கார்டுகளை உருவாக்கி டூப்ளிகேட் சிம்முக்கு ஓடிபி பெற்று அந்த நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் இருந்து மோசடி செய்பவர்கள் பணத்தை பறித்துள்ளனர்” என்றார் வாக்காளர் சாமி.

“கடந்த அக்டோபர், 2024, இறுதி வாரத்தில் மும்பையில் ரூபாய் 1.22 கோடி மதிப்புள்ள போதை பொருட்களை வைத்திருந்த 20 நைஜீரியர்கள் மும்பை காவல் துறை போதைப்பொருள் தடுப்பு பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்கள். நகரின் பல்வேறு ஹோட்டல்கள் மற்றும் கிளப்புகளுக்கு சைக்கோட்ரோபிக் போதைப்பொருள், மெத்தாம்பேட்டமைன் மற்றும் கோகோயின் சப்ளை செய்ததாக நைஜீரிய பெண் உட்பட இரு போதைப்பொருள் கடத்தல்காரர்களை டெல்லி போலீசார் கடந்த 2024, அக்டோபர் மாதத்தில் கைது செய்தனர். சென்டின் கிபிட்ஸ் என்ற போர்வையில் சமூக ஊடகங்களில் டப்பிங் செய்து பலரை ஏமாற்றியதாக மூன்று நைஜீரிய பெண்களையும் ஒரு ஆணையும் டெல்லி போலீசார் கடந்த 2022 டிசம்பர் மாதத்தில் கைது செய்தனர். விசா காலம் முடிந்து தங்கி, சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதற்காக ல்கேஜி ண்டுகா என்ற நைஜீரிய நபரை கடந்த 2024, செப்டம்பர் மாதத்தில் ஹைதராபாத் போலீசார் கைது செய்து நாடு கடத்தியுள்ளனர்” என்றார் வாக்காளர் சாமி.

“என்ன சாமி! இந்தியாவில் எத்தனை நைஜீரிய நாட்டவர்கள் உள்ளார்கள்? எத்தனை நபர்கள் சட்ட விரோதமாக தங்கி உள்ளார்கள்? இந்தியாவில் எல்லா இடங்களிலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்படாத மாதமே கிடையாதா? என்றேன் நான். “இது ஒரு ட்ரைலர்தான். இந்தியாவில் சட்ட விரோதமாக தங்கி, சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நைஜீரியர்கள் உள்ளிட்ட அனைத்து வெளிநாட்டவர்களையும் கண்டறிந்து உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம்” என்றார் வாக்காளர் சாமி.

“வேறு செய்திகளே, இல்லையா? சாமி!” என்றேன் நான். “உலகிலேயே மிகப்பெரிய பரப்பளவை கொண்ட நாடு ரஷ்யா. இங்கு மக்கள் தொகை தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. இதனால் ரஷ்ய அரசாங்கம் தாம்பத்திய உறவுக்கு என்று தனித்துறையை உருவாக்கி அதிக குழந்தைகளை பெற்றெடுக்க ஊக்குவிக்க உள்ளதாக தெரிகிறது” என்றார் வாக்காளர் சாமி. “

என்ன சாமி! இப்படி எல்லாம் நடக்கிறதா?” என்றேன் நான். “தமிழகத்திலும் ஆந்திராவிலும் மக்கள் தொகை கட்டுப்படுத்தப்பட்டு முந்தைய மக்கள் தொகை வளர்ச்சியை விட குறைந்துள்ளதால் தமிழகம் மற்றும் ஆந்திராவில் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை குறைக்கப்படும் என்று கருதப்படுகிறது. மக்கள் தொகை வளர்ச்சியை கட்டுப்படுத்த தவறிய பல மாநிலங்களில் மக்கள் தொகை காரணமாக நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை கூட்டப்படலாம். இதனால், தமிழகத்திலும் ஆந்திராவிலும் மக்கள் தொகை உயர வேண்டும் என்று இம்மாநில முதல்வர்கள் கருத்து தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன” எனக் கூறி விட்டு விடைபெற்றார் வாக்காளர் சாமி.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Google search engine

Latest Articles