Advertisement

வாழ்த்து மழை பொழிந்த வாக்காளர் சாமி

காலையிலேயே பூங்கா இதழ் அலுவலகத்துக்கு வருகை புரிந்தார் வாக்காளர் சாமி. அவருக்கு வணக்கம் செலுத்தி விட்டு, “என்ன சாமி செய்திகள்?” என கேட்டதும் கருத்து மூட்டையை அவிழ்க்க தொடங்கினார். 

“ஹரியானாவில் உள்ள மோவட் கொள்ளையர்கள் நாட்டின் பல பகுதிகளுக்கு சென்று பல்வேறு வகைகளில் கொள்ளையடிப்பதற்கு கைதேர்ந்தவர்கள். இவர்கள் கொள்ளையடிக்கும் போது கொலை செய்யவும் தயங்க மாட்டார்கள் என்று கேள்விப்பட்டுள்ளோம். ஒரு கூட்டமாக சேர்ந்து கொண்டு ஏடிஎம் மையங்களில் கொள்ளையடிப்பதற்கு பயிற்சி வழங்கி குழுவாக பிரித்து அனுப்பி ஏடிஎம் மையங்களில் கொள்ளை அடிக்கிறார்கள் என்று காவல்துறை கூறியிருப்பது அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. 

நாமக்கல் மாவட்டத்தில் பிடிபட்ட கொள்ளையர்கள் இருவர் சென்னைக்கு விமானத்தில் வந்துள்ளார்கள். மீதம் இக்குழுவில் மீதம் 5 பேர் கண்டெய்னர் லாரியிலும் காரிலும் தமிழகத்துக்கு வந்து உள்ளார்கள். கேரளாவில் மூன்று ஏடிஎம் மையங்களில் உள்ள கேமராக்களை   ஸ்பிரே மூலம் செயலிழக்கச் செய்து வெல்டிங் மிஷின் மூலம் ஏடிஎம் மெஷினை உடைத்து பணத்தை கொள்ளையடித்துள்ளார்கள் பின்னர் காரில் நெடுஞ்சாலைக்கு வந்து தயாராக இருந்த கண்டெய்னரில் காரை ஏற்றிக்கொண்டு நாமக்கல் வழியாக பயணம் செய்யும்போதுதான் கேரள காவல்துறை அளித்த தகவலை வைத்து தக்க ஏற்பாடுகளை செய்து நாமக்கல் மாவட்ட காவல் துறை நிர்வாகம் கொள்ளையர்களை பிடித்துள்ளது. நாமக்கல்லில் சினிமாவை மிஞ்சும் பாணியில் கண்டெய்னர் லாரியை மடக்கிப்பிடித்த காவல்துறைக்கு வாழ்த்துக்கள்!” என்றார் வாக்காளர் சாமி. “அரசியல் செய்திகள் எதுவும் இல்லையா சாமி?” என்றேன் நான்.

“நீ எதை கேட்கிறாய் என்று தெரியும். தமிழகத்தில் துணை முதல்வராக பணியேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் புதிதாக பணியேற்றுள்ள அமைச்சர்களுக்கும் வாழ்த்துக்கள்!” என்றார் வாக்காளர் சாமி. “என்ன சாமி வாழ்த்து மழையாக பொழிகிறீர்கள் இன்று” என்றேன் நான்.

“வாழ்த்துக்கள் அவர்களுக்கு மட்டுமல்ல.  பூங்கா இதழ் மற்றும் நுகர்வோர் பூங்கா   இணைய இதழ்களை லாபம் எதிர்பாராமல் நடத்தி வரும் அமைதிக்கான உத்திகள் நிறுவனத்துக்கும் வாழ்த்துக்கள்! 

இன்று முதல் தங்கள் நிறுவனத்தால் தொடங்கப்பட உள்ள, நுகர்வோர் பூங்கா ஆங்கில இணைய இதழ், பூங்கா இதழ் ஆங்கில இனிய இதழ், பூங்கா இதழின் மொபைல் செய்தி தளம் (The News Park Mobile App) ஆகியவையும் சட்டம் மேலாண்மை மற்றும் சமூக அறிவியல் ஆய்வு இதழ் (The Journal of Law, Management and Social Science Research), அமைதிக்கான உத்திகள் ஆய்வு இதழ் (The Journal of Peace Strategies and Research), வாக்காளரியல் ஆய்வு இதழ் (The Journal of Voterology and Research) ஆகியவையும் சிறப்பான வெற்றியைப் பெற வாழ்த்துக்கள்!

இது மட்டுமல்ல தங்களது அமைதிக்கான உத்திகள் நிறுவனத்தால் இன்று தொடங்கப்பட உள்ள அமைதி பூங்கா புத்தக பதிப்பக பிரிவு (Peace Park Publication), அமைதி பூங்கா மீடியா பிரிவு (Peace Park Media) மற்றும்   அச்சு இதழாக பூங்கா இதழ் மலர்வதற்கான முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துக்கள்!” என்று கூறி விடை பெற்றார் வாக்காளர் சாமி.

சட்டம் இயற்றப்பட்டு 5 ஆண்டுகள், விதிகள் உருவாக்கப்பட்டு 9 மாதங்கள் நிறைவடைந்தும் நுகர்வோர் கவுன்சில்களை அமைப்பதில் தாமதம்

https://theconsumerpark.com/state-district-consumer-councils-formation-delay

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Google search engine

Latest Articles