ஆசியாவின் பெரிய வற்றாத ஜீவநதிகளில் ஒன்றாகிய பிரம்மபுத்திரா நதி 2900 கிலோமீட்டர் நீளம் கொண்டதாகும். பிரம்மபுத்ரா நதி சீனா, இந்தியா, மற்றும் பங்களாதேஷ் ஆகிய 3 நாடுகள் வழியாக பாய்கிறது. இந்தியாவில் இது 916 கிலோமீட்டர் தூரத்திற்கு மட்டுமே ஓடுகிறது. பிரம்மபுத்திரா ஆற்றின் வடிநிலம் 6,61 334 சதுர கிமீ.
பிரம்மபுத்திரா நதி வலுவான மற்றும் கணிக்க முடியாத நீரோட்டங்களுக்கு பெயர் பெற்றது. பிரம்மபுத்திரா பல அரிய வகை மீன்கள் மற்றும் பிற நீர்வாழ் உயிரினங்களின் தாயகமாகவும் உள்ளது. இந்த நதி அரிதான ஒற்றை கொம்பு காண்டாமிருகங்கள் உள்ள காசிரங்கா தேசிய பூங்கா உட்பட பல வனவிலங்கு சரணாலயங்களுக்கும் தாயகமாக உள்ளது.
இந்தியாவின் ஆதாரம்
அசாம், அருணாச்சல பிரதேசம், பீகார் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் பாசனத்திற்கு முக்கிய ஆதாரமாக பிரம்மபுத்திரா நதி உள்ளது. இப்பகுதி மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் இந்த ஆறு உள்ளது. இந்த நதி இப்பகுதியில் நீர்மின்சாரத்தின் முக்கிய ஆதாரமாகவும் உள்ளது. இந்த நதியானது சரக்குகள் மற்றும் சேவைகளுக்கான முக்கிய போக்குவரத்து பாதையாகும். இப்பகுதியில் உள்ள மீன்வளத்திற்கான வண்டல் மற்றும் ஊட்டச்சத்துக்களின் முக்கிய ஆதாரமாகவும் பிரம்மபுத்திரா உள்ளது.
அருணாச்சலப் பிரதேசம்
திபெத்திலுள்ள கயிலாய மலையில் உருவாகி ‘ஸாங்-போ’ என்ற பெயரில் தொடங்கி நாம்சா-படுவா மலையருகே, தெற்கு, மற்றும் தென்மேற்காக வளைந்து அருணாசல பிரதேசத்தில் சியாங் என்ற பெயரில் நுழைகிறது. அருணாசல பிரதேசத்தில் சமவெளிப் பகுதியில் 35 கிலோமீட்டர் தொலைவு கடந்தபின், திபங் மற்றும் லோகித் என்ற ஆறுகளோடு சேர்ந்து மிகவும் அகன்ற ஆறாக ஆகி, பிரம்மபுத்திரா என்று பெயர் மாற்றமடைந்து அசாம் மாநிலத்தில் நுழைகிறது.
அசாம்
அசாம் மாநிலத்தின் முதன்மை ஆறான பிரம்மபுத்திரா, ஒருசில இடங்களில் 10 கிலோமீட்டர் வரை அகலமுடையதாயிருக்கிறது. திப்ரூகட் அருகே அது இரண்டாகப் பிரிகிறது. பிரிந்த அவ்விரு கிளைகளும் நூறு கிலோமீட்டருக்கு அப்பால் இணைகின்றன. இதனால் உருவாகியுள்ள தீவு மஜிலித்தீவு என்று அழைக்கப்படுகிறது. இதன் சராசரி ஆழம் 38 மீட்டர், அதிகபட்ச ஆழம் 120 மீட்டர்.
வங்கதேசம்
அசாமிலுள்ள துப்ரி நகர் அருகே சந்கோசு ஆறு இதனுடன் கூடுமிடத்தில் தெற்கு நோக்கி வங்காள தேசத்தில் பாய்கிறது. வங்காளதேசத்தில் இந்த ஆறு ஜமுனா என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. கடைசியில் இது கங்கையின் கிளையாகிய பத்மாவுடன் இணைந்து மிகப்பெரிய கழிமுகத்தை உருவாக்கி வங்காள விரிகுடாவில் கலக்கிறது.
பதினோரு லட்சம் கோடி
திபெத்தில் உள்ள பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே பதினோரு லட்சம் கோடி செலவில் உலகின் மிகப் பெரிய அணையை எழுப்ப சீனா தற்போது ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் இந்தத் திட்டம் இந்தியா, வங்கதேசம் ஆகிய நாடுகளுக்கு மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
இந்தியாவுக்குள் நுழைந்து பிரமபுத்திரா ஆறு பயணிக்கும் நிலையில், இந்த ஆற்றின் நீரோட்டத்தைக் கட்டுப்படுத்த அல்லது திசை திருப்ப இந்த அணை சீனாவுக்கு அதிகாரம் அளிக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவிற்கு முக்கியமான நீர் ஆதாரமாக விளங்கும் பிரம்மபுத்திராவின் பயன்கள் இந்தியாவிற்கு கிடைப்பதில் சிக்கல் ஏற்படலாம். சீனாவை தொடர்ந்து இந்தியாவும் இந்த ஆற்றில் அணை கட்டினால் வங்கதேசத்துக்கு கடுமையான பாதிப்பு ஏற்படும்.
திபெத்தில் பெரிய அணையை கட்டுவதன் காரணமாக சுற்றுச்சூழல் பாதிக்கப்படலாம். இந்த நதி கொண்டு வரும் வண்டல் மண் கனிமங்கள் நிறைந்ததாக உள்ளது. இத்தகைய வளங்கள் இந்தியப் பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு கிடைக்காமல் போகலாம். தண்ணீர் பெருக்கு ஏற்பட்டு திடீரென அணையை திறந்து விட்டால் இந்தியப் பகுதியில் உள்ள ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆபத்து ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன.
இந்த அணை கட்டுமானத்திற்காகத் திட்டமிடப்பட்டுள்ள பகுதி, அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் அபாயம் கொண்ட கண்டத்தட்டுக்கு அருகில் அமைந்துள்ளது என்று பிபிசி செய்தி தொகுப்பு தெரிவிக்கிறது. பிரம்மபுத்திரா நதி பாயும் நாடுகளான இந்தியா, வங்கதேசம் ஆகியவற்றுக்குச் செல்லும் நீரைத் தடுத்து நிறுத்தும்போது, சர்வதேசப் பிரச்சினையாக மாறலாம் என இந்து தமிழ் திசை பத்திரிக்கையின் செய்தி கட்டுரை தெரிவிக்கிறது.
பூங்கா இதழ் (The News Park) கருத்து
திபெத்தில் உள்ள பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே சீனாவால் பிரம்மபுத்திராவில் அணை கட்டப்பட்டால் இந்தியாவிற்கு எவ்வித பாதிப்புகள் ஏற்படா வண்ணம் இருக்கும் வகையில் தகுந்த பேச்சுவார்த்தைகளை மத்திய அரசு சீனரசுடன் மேற்கொள்வது அவசியமானதாகும்!
“நுகர்வோர் பூங்கா” படிக்க இங்கே தொடுங்கள்! (Click here)
எங்களது வெளியீடுகள் (Our Current and Upcoming publication) – இதழ்களின் பெயரை தொட்டால் இதழ்களின் இணையதளத்துக்கு செல்லலாம் (Click the heading of journals, see the concern website) |
வெகுஜன வெளியீடுகள் (Popular Park) |
நுகர்வோர் பூங்கா (தமிழ்) – இணைய இதழ் |
நுகர்வோர் பூங்கா (ஆங்கிலம்) – இணைய இதழ் |
பூங்கா இதழ் (தமிழ்) – இணைய இதழ் |
தி நியூஸ் பார்க் (ஆங்கிலம்) – இணைய இதழ் |
தி நியூஸ் பார்க் மொபைல் பயன்பாடு (Mobile App) – soon |
ஆராய்ச்சி வெளியீடுகள் (Research Park) |
சட்டம், மேலாண்மை மற்றும் சமூக அறிவியல் ஆராய்ச்சி இதழ் |
சர்வதேச நிறுவனங்கள், அரசியலமைப்பு சட்டம், ஆட்சியியல் ஆராய்ச்சி இதழ் |
குற்றங்கள், விபத்துகள், குற்றவியல் சட்டம், பாதிக்கப்பட்டோரியல் ஆராய்ச்சி இதழ் |
அமைதி உத்திகள் மற்றும் ஆராய்ச்சி இதழ் |
விண்வெளி, கடல், ஆகாயம் ஆராய்ச்சி இதழ் |
வாக்காளரியல் (Voterology) ஆராய்ச்சி இதழ் |
பூங்கா இதழ் நுகர்வோர் பூங்கா வாட்ஸ் அப் சேனலில் இணையுங்கள்! இணைய இங்கே தொடவும். Click Here! |