Advertisement

உடல் நலனுக்கும் உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கவும் சர்க்கரை நோய்க்கும் இதயத்தை பாதுகாக்கவும் உதவும் இளநீர். அறிந்த – அறியாத தகவல்களை படிக்கலாமே! மற்றவர்களுக்கும் அனுப்பலாமே!

தேங்காய்

உலகில் தேங்காய் உற்பத்தியில் இந்தோனேசியா முதலிடத்திலும் பிலிப்பைன்ஸ் இரண்டாவது இடத்திலும் இந்தியா மூன்றாவது இடத்திலும் பிரேசில் நான்காவது இடத்திலும் இலங்கை ஐந்தாவது இடத்தில் உள்ளது. தேங்காயில் இருந்து கிடைக்கும் இளநீர், தேங்காய் கூழ், தேங்காய் பால், தேங்காய் துண்டுகள், தேங்காய் எண்ணெய் உள்ளிட்டவை மக்களுக்கு உணவுப் பொருளாக பயன்படுகின்றன. தேங்காய் துண்டுகளை நேரடியாக சாப்பிடுவதோடு அதிலிருந்து பல்வேறு வகையான உணவு வகைகள் தயாரிக்கப்படுகின்றன. 

இருப்பினும், இளம் தேங்காய் (young coconut) பறித்து அதிலிருந்து கிடைக்கும் இளநீரை குடிப்பது பல ஆண்டுகளாக மக்களின் பழக்கமாக இருந்து வருகிறது. இளநீர் உடல்நலனுக்கு இயற்கை வழங்கியுள்ள வரப்பிரசாதமாகும். இளநீரை பருகியுடன் தேங்காயை வெட்டி உள்ளே கிடைக்கும் தேங்காய்  கூழும் சிறந்த உணவு பொருளாகும்.

நுகர்வோர் முன்னெச்சரிக்கையாக இருக்கவும் பாதிப்புக்குள்ளாகும் போது தீர்வு காணவும் நுகர்வோர் உரிமைகளுக்கும் நுகர்வோர் பாதுகாப்புக்கும் அனைவரும் படியுங்கள் – நுகர்வோர் பூங்கா (தமிழ்) – இணைய இதழ்”, இணைப்புக்குச் செல்ல இங்கே தொடுங்கள்! (Click here)

கலப்படமற்றது

தேங்காய் தண்ணீர் பொட்டாசியம், கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற அத்தியாவசிய எலக்ட்ரோலைட்டுகள் நிறைந்த ஒரு இயற்கை பானம். சந்தையில் கிடைக்கும் பல உணவுப் பொருட்களில் கலப்படம் பெரும் தலைவலியாக உள்ளது. ஆனால், இளநீரில் எந்த வகையிலும் கலப்படம் செய்ய இயலாது. அதே சமயம் இளநீரை பாக்கெட்டுகளில் பாக்கெட்டுகளிலும் டின்களிலும் அடைத்து விற்கும் போது இளநீரின் உண்மை தன்மைக்கு உறுதி கூற இயலாது.

சத்துக்கள்

240 மில்லி இளநீரை பருகும் போது சுமார் 60 கலோரிகள் உடலுக்கு கிடைக்கிறது. கார்போஹைட்ரேட் 14 கிராம், சர்க்கரை 8 கிராம், புரோட்டின் ஒரு கிராம், பொட்டாசியம் 420 மில்லி கிராம், சோடியம் 25 மில்லி கிராம், கால்சியம் 40 மில்லி கிராம், மேக்னீசியம் 24 மில்லி கிராம் உள்ளிட்ட சத்துக்களை 240 மில்லி இளநீர் வழங்குகிறது. செவ்விளநீரில் பச்சை இளநீரைக் காட்டிலும் குளிர்ச்சி அதிகம். அதில் ஊட்டச்சத்துகளும் அதிகம்.

உயர் ரத்த அழுத்த நிவாரணி (high blood pressure) சாதாரணமாக ஆண்களுக்கு தினமும் 3400 மில்லி கிராம் பொட்டாசியம் பெண்களுக்கு 2600 மில்லி கிராம் பொட்டாசியமும் தேவைப்படுகிறது. 240 மில்லி இளநீரை பருகுவதன் மூலம் சராசரியாக ஒருவருக்கு 10 முதல் 15 சதவீத தினசரி பொட்டாசியம் தேவை உடலுக்கு கிடைக்கிறது. பொட்டாசிய குறைபாட்டை நீக்கும் வகையில் இளநீர் இருப்பதால் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறந்த பானம் ஆகும். 

ரத்த அழுத்தத்தை குறைக்கும் தன்மை உடைய பொட்டாசியம் இளநீரில் அதிகமாக உள்ளதால் குறைந்த இரத்த அழுத்தம் உடையவர்கள் இளநீரை பருகுவதை தவிர்க்க வேண்டும்.

சர்க்கரை நோய்

குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் மற்றும் இயற்கையான சர்க்கரைகள் இருப்பதால் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இளநீர் நன்மை அளிக்கக் கூடியதாகும்.  மெதுவான மற்றும் நிலையான ஆற்றலை வழங்குவதன் மூலம் இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க இளநீர் உதவுகிறது. தேங்காய் நீரில் உள்ள மெக்னீசியம் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துகிறது, இரத்த குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. அதன் இயற்கையான இனிப்பு சர்க்கரை பானங்களுக்கு மாற்றாக புத்துணர்ச்சியூட்டுகிறது.

நன்மைகள்

கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கவும் உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கவும் இளநீர் பயன்படுவதால் இதயத்துக்கு இளநீர் மிகவும் உதவிகரமானதாகும். சிறுநீரக கற்கள் உடலில் ஏற்படாமல் இருக்க இளநீர் உதவக்கூடிய ஒன்றாகும். வாந்தி, வயிற்றுப்போக்கு போன்றவை ஏற்படும்போது   இளநீரை பருகுவதால் உடலின் நீர் தேவை (rehydration) உடனடியாக பூர்த்தி செய்யப்படுகிறது. 

வெப்பமான காலங்களிலும் உடலில் ஏதாவது பிரச்சினை காரணமாக சராசரி உடல் நிலையை விட வெப்பம் அதிகமாகும் போதும் உடலுக்கு உடனடியாக குளிர்ச்சி வழங்கக்கூடிய பானமாக இளநீர் திகழ்கிறது. கடினமான உடல் உழைப்பு மற்றும் உடற்பயிற்சி போன்றவற்றை முடித்தவுடன் ஏற்படும் களைப்பை தீர்ப்பதற்கு இளநீர் சிறந்ததாகும்.உடலில் ஏற்படும் நீர் பற்றாக்குறையை போக்கி நீர்ச்சத்தை தக்க வைப்பதற்கு இளநீர் உதவும்.

உடலில் உள்ள சிறு பூச்சிகளை அழிக்கும் சக்தியும் இளநீருக்கு உண்டு. சிறுநீர் குழாயில் பாக்டீரியா தொற்று இல்லாமல் பாதுகாக்கும் தன்மையும் இளநீரில் உள்ளது. சருமத்துக்கும் தலைமுடிக்கும் இளநீர் புத்துணர்ச்சி அளிக்கிறது. இளநீரில் உடலின் எலும்புகளுக்கு தேவைப்படும் கால்சியம் சத்தும் சில வைட்டமின் சத்துக்களும் அடங்கியிருக்கின்றன.


கட்டுரைகளை வரவேற்கிறோம்  

** சமூக விழிப்புணர்வு மற்றும் அறிவு மேம்பாட்டுக்கான கட்டுரைகளை “பூங்கா இதழுக்கு” தாங்களும் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.  

** வெளியிட தகுந்தனவாக தேர்வு செய்யப்படும் கட்டுரைகள் பூங்கா இதழ்” இணைய இதழில் வெளியிடப்படும். கட்டுரைகளுடன் தங்களது பெயர், தொடர்பு எண் மற்றும் புகைப்படம் ஆகியவற்றை மின்னஞ்சலில் இணைத்து அனுப்பவும்.  

** தாங்கள் அனுப்பும் கட்டுரைகள் 500 வார்த்தைகளுக்கு மிகாமலும் 300 வார்த்தைகளுக்கு குறையாமலும் இருக்க வேண்டும் எம் எஸ் வேர்ட் (MS word) வடிவத்தில் மின்னஞ்சலுடன் இணைத்து அனுப்ப வேண்டும் கட்டுரைகளை சுருக்கவும், திருத்தவும், நிராகரிக்கவும் ஆசிரியர் குழுவுக்கு உரிமை உண்டு.

எப்போது குடிக்கலாம்?

சுண்ணாம்பு சத்து என்று அழைக்கப்படும் பொட்டாசியம் அதிகமாக உள்ள காரணத்தால் இளநீரை வெறும் வயிற்றில் குடிக்க கூடாது என்று சிலர் தெரிவிக்கின்றனர். ஆனால், இளநீரில் உள்ள சத்துக்கள் முழுமையாக உடலுக்கு கிடைக்க காலையில் வெறும் வயிற்றில் இளநீர் குடிக்க வேண்டும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்

கவனம் தேவை

குறைந்த ரத்த அழுத்தம் (low blood pressure), சிறுநீரகப் பிரச்சனை (kidney issues) உள்ளவர்கள் இளநீரை தவிர்க்க வேண்டும். அறுவை சிகிச்சைகள் மேற்கொள்வதற்கு முன்னதாக இரண்டு வாரங்களுக்கு இளநீர் அருந்தாமல் இருப்பது நல்லது. மிக சிலருக்கு இளநீர் ஒவ்வாமை (allergy) உடையதாகவும் இருக்கும். உப்புச்சத்து என அழைக்கப்படும் சோடியம் பற்றாக்குறை உள்ளவர்களுக்கும் இளநீர் ஏற்புடையதல்ல. பொதுவாக, இளநீர் சிறந்த பணமாக இருந்தாலும் ஒரு நாளுக்கு ஐநூறு மில்லிக்கு மேல் அருந்தக்கூடாது. தங்களின் உடலுக்கு இளநீர் எவ்வாறு உதவுகிறது என்பதை தகுந்த மருத்துவ பரிசோதனைகள் மூலம் முழுமையாக அறிந்து கொள்ள இயலும். 

பூங்கா இதழ் (The News Park) கருத்து:

இளநீர் இயற்கை கொடுத்துள்ள அருள்கொடை கலப்படமற்ற இளநீர் உடல்நலனுக்கு மிகவும் அவசியமானது செயற்கையான இளநீர் தயாரிப்புகளை காட்டிலும் நேரடியாக இயற்கையான இளநீரை பருகுவதே சிறந்தது.

அறிந்த – அறியாத தகவல்களை படிக்கலாமே! மற்றவர்களுக்கும் அனுப்பலாமே!

கீழே உள்ள தலைப்புகளை படியுங்கள்! பிடித்தால் தலைப்புகளை தொடுங்கள்! முழுவதும் படியுங்கள்!

இதையும் படிக்கலாமே?  

வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு, துவரம் பருப்பு போன்றவற்றின் விலை திடீரென பல மடங்கு உயர்வது ஏன் தெரியுமா? இன்னும் மூன்று மாதத்தில் துவரம் பருப்பின் விலை மூன்று மடங்காகி விடுமா?  

ஜாமீன் கையொப்பம் செய்தவரிடம் அசல் ஆவணங்களை வழங்கிய வங்கி வாடிக்கையாளருக்கு ரூபாய் 30 லட்சம் இழப்பீடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு
இதையும் படிக்கலாமே?

வாக்காளரியல் என்றால் என்ன? அறிந்து கொள்ளுங்கள்! சிந்தனைகள் பரவ அனைவருக்கும் பகிருங்கள்!  

நல்லெண்ண தூதராக, புரவலராக, கௌரவ விரிவாக்க அலுவலராக பத்து இணைய பத்திரிகைகளில் பணியாற்ற வாய்ப்பு  

கௌரவ ஆசிரியராக, ஆசிரியர் குழு உறுப்பினராக, எழுத்தாளராக, பயிற்சி கட்டுரையாளராக பத்து இணைய பத்திரிகைகளில் பணியாற்ற வாய்ப்பு  
எங்களது வெளியீடுகள் (Our Current and Upcoming publication) – இதழ்களின் பெயரை தொட்டால் இதழ்களின் இணையதளத்துக்கு செல்லலாம் (Click the heading of journals, see the concern website)
வெகுஜன வெளியீடுகள் (Popular Park)
நுகர்வோர் பூங்கா (தமிழ்) – இணைய இதழ்
நுகர்வோர் பூங்கா (ஆங்கிலம்) – இணைய இதழ்
பூங்கா இதழ் (தமிழ்) – இணைய இதழ்
தி நியூஸ் பார்க் (ஆங்கிலம்) – இணைய இதழ்
தி நியூஸ் பார்க் மொபைல் பயன்பாடு (Mobile App) – soon
ஆராய்ச்சி வெளியீடுகள் (Research Park)
சட்டம், மேலாண்மை மற்றும் சமூக அறிவியல் ஆராய்ச்சி இதழ் 
சர்வதேச நிறுவனங்கள், அரசியலமைப்பு சட்டம், ஆட்சியியல் ஆராய்ச்சி இதழ் 
குற்றங்கள், விபத்துகள், குற்றவியல் சட்டம், பாதிக்கப்பட்டோரியல் ஆராய்ச்சி இதழ்
அமைதி உத்திகள் மற்றும் ஆராய்ச்சி இதழ் 
விண்வெளி, கடல், ஆகாயம் ஆராய்ச்சி இதழ்
வாக்காளரியல் (Voterology) ஆராய்ச்சி இதழ்
பூங்கா இதழ் படைப்புகளின் வகைகள் (Menu and Categories) வகைகளின் தலைப்புகளை தொட்டால் அந்தப் பகுதிகளுக்கு செல்லலாம்
நாட்டு நடப்புஅரசியல்
மாநிலம்அரசு
தேசம் நிர்வாகம்
சர்வதேசம்அரசியல்
சிறப்பு படைப்புகள்பிரச்சனைகள்
கருத்துபாதுகாப்பு
நேர்காணல்அமைதி
அறிவு பூங்காவாக்காளரியல்
பொருளாதாரம்சமூகம்
நிதிமக்கள்
உற்பத்திகல்வி – வேலை
சேவைகள்ஆன்மீகம்-ஜோதிடம்
தொழில் வாழ்க்கை
வர்த்தகம் கலை – இலக்கியம்
விவசாயம்பொழுதுபோக்கு
உணவு -வீடுவிளையாட்டு
கதம்பம்நாங்கள்
நீதி -சட்டம்நாங்கள் 
குற்றம்புரவலர்கள்
புலனாய்வுஆதரிங்கள்
இயற்கை பங்களியுங்கள்
அறிவியல்படியுங்கள் – நுகர்வோர் பூங்கா (தமிழ்) – இணைய இதழ்”, இணைப்புக்குச் செல்ல இங்கே தொடுங்கள்! (Click here)
ஆரோக்கியம்
களஞ்சியம்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Google search engine

Latest Articles