தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில் மாணவ – மாணவியர்கள் கல்லூரி படிப்பிற்கு விண்ணப்பம் செய்ய தயாராகி வருகின்றனர். மருத்துவம், பொறியியல் பட்ட படிப்புகள் மட்டுமல்லாது இளம் அறிவியல் (பி.எஸ்சி.,) பட்டப் படிப்பின் மீதும் பலருக்கு ஆர்வம் உள்ளது.
விவசாயம்
இளம் அறிவியல் (பி.எஸ்சி.,) பட்ட படிப்பில் விவசாயம் (Agriculture), தோட்டக்கலை (Horticulture), பட்டு வளர்ப்பு (Sericulture), வனவியல் (Forestry) உணவுத் தொழில்நுட்பம் (Food technology) மற்றும் பால் தொழில்நுட்பம் (diary Technology) பிரிவுகளை படிப்பவர்களுக்கு அரசு மற்றும் தனியார் துறையில் வேலை வாய்ப்புகளும் உயர் கல்விக்கான வாய்ப்புகளும் உள்ளன. இந்த தொழில்முறை அறிவியல் பட்டப் படிப்புகளை படித்த பலர் இந்திய குடிமை தேர்வுகளை (Civil Service) எழுதி உயர் பொறுப்புக்களை பெற்றுள்ளார்கள். சொந்தமாக வேளாண் பண்ணைகளையும் இயற்கை விவசாயத்தையும் விவசாயம் சார்ந்த தொழில்களையும் செய்ய விரும்புவோரும் இந்த பாடப்பிரிவுகளை தேர்ந்தெடுக்கிறார்கள்.
கணினி அறிவியல்
இளம் அறிவியல் (பி.எஸ்சி.,) பட்ட படிப்பில் கணினி அறிவியல் (Computer Science), தகவல் தொழில்நுட்பம் (Information Technology), மின்னணு ஊடகம் (Electronics Media), இயங்குபடம் (Animation) மற்றும் பயன்பாட்டு அறிவியல் (Applied Science) போன்ற பிரிவுகள் பலராலும் கவரப்படுவையாகும். இந்த பாடப்பிரிவு படிக்கும் மாணவர்களுக்கு கணினி அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் நிறுவனங்களிலும் பிற துறைகளிலும் வேலை வாய்ப்புகள் கிடைப்பதோடு சுய தொழில் புரிவதற்கும் இப்படிப்புகள் உதவியாக உள்ளன.
செவிலியர்
இளம் அறிவியல் (பி.எஸ்சி.,) பட்ட படிப்பில் செவிலியர் (Nursing) பாடப்பிரிவானது அதிக வேலை வாய்ப்புகளை வழங்கக்கூடியது என்பதால் மாணவ – மாணவிகள் இப்பிரிவில் சேர அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். இந்த பட்டம் படித்தவர்கள் வெளிநாடுகளுக்கு (குறிப்பாக வளைகுடா நாடுகளுக்கு) வேலைக்கு செல்ல நல்ல வாய்ப்பு உள்ளது. இளம் அறிவியல் (பி.எஸ்சி.,) பட்ட படிப்பில் ஆய்வக தொழில்நுட்பம் (Lab Technology) பிரிவும் வேலை வாய்ப்புகளை வழங்க கூடியதாகும்.
இயற்பியல்
இளம் அறிவியல் (பி.எஸ்சி.,) பட்டப்படிப்பில் இயற்பியல் (Physics) பிரிவு அறிவியலில் மகத்தான இடத்தை பிடித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இயற்பியலில் சிறந்து விளங்கும் அறிஞர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. பொறியியலில் உள்ள அனைத்து பிரிவுகளுக்கும் அடிப்படையாக திகழ்வது இயற்பியல் எனலாம். இளம் அறிவியல் இயற்பியல் பட்டம் பெற்றவர்கள் முதுநிலை அறிவியல் பட்டம் மட்டுமல்லாது இளம் தொழில்நுட்பவியல் (பி. டெக்.,) படிப்பில் இரண்டாம் ஆண்டு வாய்ப்புகள் சேருவதற்கும் வாய்ப்புகள் உள்ளன. அரசின் ஆய்வு அமைப்புகளிலும் (Research Institutions) தனியார் துறைகளிலும் வேலை வாய்ப்புகள் உள்ளன.
வேதியியல்
இளம் அறிவியல் (பி.எஸ்சி.,) பட்டப்படிப்பில் வேதியியல் (Chemistry) பிரிவு சமூகத்திற்கு தேவைப்படும் ஒரு பிரிவாகும். ஒவ்வொரு ஆண்டும் வேதியியலில் சிறந்து விளங்கும் அறிஞர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இளம் அறிவியல் வேதியியல் பட்டம் பெற்றவர்கள் முதுநிலை அறிவியல் பட்டம் மட்டுமல்லாது இளம் தொழில்நுட்பவியல் (பி. டெக்.,) படிப்பில் இரண்டாம் ஆண்டு சேருவதற்கும் வாய்ப்புகள் உள்ளன. அரசின் ஆய்வு அமைப்புகளிலும் (Research Institutions) தனியார் துறைகளிலும் வேலை வாய்ப்புகள் உள்ளன.
கணிதம்
இளம் அறிவியல் (பி.எஸ்சி.,) பட்டப்படிப்பில் கணித (Mathmatics) பிரிவு படிக்கும் மாணவர்களுக்கு உயர் படிப்புக்கும் ஆசிரியர் பணி உட்பட்ட அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலைகளுக்கும் வாய்ப்புகள் உள்ளன. இளம் அறிவியல் கணிதம் பட்டம் பெற்றவர்கள் முதுநிலை அறிவியல் பட்டம் மட்டுமல்லாது இளம் தொழில்நுட்பவியல் (பி. டெக்.,) படிப்பில் இரண்டாம் ஆண்டு வாய்ப்புகள் சேருவதற்கும் வாய்ப்புகள் உள்ளன.
தாவரவியல்
இளம் அறிவியல் (பி.எஸ்சி.,) பட்ட படிப்பில் தாவரவியல் (Botony)), விலங்கியல் (Zoology)) பிரிவுகளைப் படிப்பவர்களுக்கு உயர் கல்வி வாய்ப்புகளும் அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலை வாய்ப்புகளும் உள்ளன. இந்தக் கல்வியை பயின்று சுய தொழில்களையும் புரிய வாய்ப்புகள் உள்ளது.
ஊட்டச்சத்து
இளம் அறிவியல் (பி.எஸ்சி.,) பட்ட படிப்பில் ஊட்டச்சத்து (Nutritution) படிப்பிற்கு தற்போது ஆர்வம் அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளிலும் உணவு உற்பத்தி தொழிற்சாலைகளிலும் இப்பட்டம் படித்தோருக்கு வேலை வாய்ப்புகள் உள்ளன. இந்த பட்டத்தை படித்தவர்கள் சுயமாகவும் உணவு ஆலோசகர்களாக பணியாற்றுகிறார்கள். இளம் அறிவியல் (பி.எஸ்சி.,) பட்ட படிப்பில் வீட்டு அறிவியல் (Home Science) பிரிவு நல்ல வாய்ப்புகளை வழங்குகிறது
இன்னும்
இளம் அறிவியல் (பி.எஸ்சி.,) பட்டப் படிப்பில் நுண்ணுயிரியல் (Micro Biology), பேஷன் தொழில்நுட்பம் (Fashion Technology) தடய அறிவியல் (Forensic Science), கடலியல் (Oceanography), மானுடவியல் (Anthropology) போன்ற பிரிவுகளும் உள்ளன. இளம் அறிவியல் பட்ட படிப்பை படிப்பதன் மூலம் அரசுத் துறையிலும் பொதுத்துறை நிறுவனங்களிலும் தனியார் துறைகளிலும் வேலை வாய்ப்புகளை முயற்சி செய்தால் பெற இயலும். இளம் அறிவியல் கல்வி சுய தொழிலுக்கும் ஏற்றது என்பதோடு இந்த கல்வியால் வாழ்வில் வெற்றிகளையும் சாதனைகளையும் படைக்க முடியும் என்பது நிதர்சனம். இளம் அறிவியல் பட்ட படிப்பை படிக்க உள்ள அனைத்து மாணவ மாணவியர்களுக்கும் வாழ்த்துக்கள்!