பூமியின் தென் துருவத்தில் அண்டார்டிக்கா பகுதியும் வட துருவத்தில் ஆர்க்டிக் பகுதியும் அமைந்துள்ளது என்பது அனைவரும் அறிந்தது. ஆனால், இந்தப் பகுதிகளில் நிலவும் தனித்துவமான அம்சங்கள் பற்றி விரிவாக யாரும் தெரிந்து கொள்வதில்லை. இவற்றைப்பற்றி படிப்பதும் ஆய்வு செய்வதும்தான் துருவ அறிவியலாகும் (Polar Science).
தென் துருவம்
தெற்கு பெருங்கடலால் சூழப்பட்டுள்ள (அண்டார்டிக் பெருங்கடல்) உலகின் தென் துருவமான அண்டார்டிகா பகுதி உலகில் உள்ள கண்டங்களில் (Continents) ஒரு கண்டமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. பூமியின் தென் பகுதியான அண்டார்டிக்கா வட துருவமான ஆர்க்டிக் சூரியனைப் எதிர்கொள்ளும் போது அண்டார்டிகாவில் நிகழ்கிறது. இதனால், 6 மாதம் இருளும் 6 மாதம் பகலும் காணப்படும். அண்டார்டிகாவில் செப்டம்பர் 1 முதல் மார்ச் 22 வரை சூரியன் உதயமாகும். மற்ற நாட்களில் இருள் சூழ்ந்து துருவ இரவு (Polar Night) நிலவுகிறது.
அண்டார்டிகாவின் கடலோரப் பகுதிகளில் கோடைகாலத்தில் வெப்பநிலை 10 டிகிரி செல்சியஸ் அளவிலும் குளிர்காலத்தில் மைனஸ் 40 டிகிரி செல்சியஸ் அளவிலும் நிலவுகிறது. அண்டார்டிகாவின் உள்பகுதிகளில் உயரமான பனி பிரதேசங்களில் கோடைகாலத்தில் சுமார் மைனஸ் 30 டிகிரி செல்சியஸ் அளவிலும் குளிர்காலத்தில் மைனஸ் 80 டிகிரி செல்சியஸ் அளவிலும் நிலவுகிறது. ஆழமான கடல் பகுதிகளையும் பெரிய பனிப்பாறைகளும் அமைந்துள்ள அண்டார்டிகாவின் சில பகுதிகளில் காற்றின் வேகம் மிக அதிகமாக காணப்படுகிறது.
அண்டார்டிகா முதன்முதலில் 1820 ஆம் ஆண்டில் ரஷ்ய குழுவினரின் பயணத்தின் போது கண்டறியப்பட்டது. பின்னர், பிரென்ச் அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் பயண குழுவினர்களால் வெளியிலிருந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. 1895 ஆம் ஆண்டு நார்வே பயண குழுவினர் அண்டார்டிகா பகுதியில் தரையிறங்கினர். 1909 ஆம் ஆண்டில் காந்த தென் துருவத்தையும் 1911 ஆம் ஆண்டில் புவியியல் தென் துருவத்தையும் முதன் முதலில் மனிதர்கள் அடைந்தனர்.
கடந்த 1959 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட அண்டார்டிகா ஒப்பந்தத்தின் (Antarctica Treaty) அடிப்படையில், அண்டார்டிகா இந்தியா உட்பட ஒப்பந்தத்தில் கையொப்பம் செய்த 30 நாடுகளால் நிர்வகிக்கப்படுகிறது, ஒப்பந்தத்தின் விதிமுறைகளின்படி, அண்டார்டிகாவில் இராணுவ நடவடிக்கை, சுரங்கம், அணு வெடிப்புகள் மற்றும் அணு கழிவுகளை அகற்றுவது ஆகியவை தடைசெய்யப்பட்டுள்ளன. மிகப்பெரிய கண்டமான அண்டார்டிகாவில் ஆராய்ச்சி, சுற்றுலா, மீன்பிடித்தல் போன்ற பணிகள் மட்டுமே நடைபெறுகின்றன. இதில் பெரும்பாலும் அங்குள்ள ஆராய்ச்சி நிலையங்களில் மட்டுமே மனிதர்கள் வசிக்கிறார்கள். கோடை காலங்களில் வசிக்கும் ஆராய்ச்சியாளர்களின் எண்ணிக்கை சுமார் 5,000 என்றும் குளிர் காலத்தில் வசிக்கும் ஆராய்ச்சியாளர்களின் எண்ணிக்கை சுமார் 1,000 என்றும் தெரிகிறது. அண்டார்டிகாவில் இந்தியாவின் ஆராய்ச்சி மையமும் செயல்படுகிறது.
வட துருவம்
வட துருவமான ஆர்க்டிக் பரந்த பெருங்கடல்களையும், பனிக்கட்டிகளையும் உள்ளடக்கியுள்ளது. இங்கு துருவ கரடி, துருவ பென்குயின் உள்ளிட்ட விலங்குகளும் பறவைகளும் வாழ்கின்றன. பூமி தன்னை தானும் சூரியனையும் சுற்றி வருவதால் இரவு பகல் என மாறி வருகிறது. கோள வடிவில் உள்ள பூமி 23’ டிகிரி சாய்ந்து காணப்படுவதால் சுற்றி வரும்போது தென் துருவமான அண்டார்டிக்கா சூரியனை எதிர் கொண்டால் வட துருவத்தில் இரவு ஏற்படும். இதனால் ஆர்டிக் பிரதேசத்தில் பகல் ஆறு 6 மாதமும் இரவு ஆறு 6 மாதமும் காணப்படுகிறது. இந்த இரவானது ஆர்க்டிக் இருப்பிடத்தை பொறுத்து சில நாட்கள் முதல் 179 நாட்கள் வரை நீடிக்கும். நீளமான துருவ இரவு செப்டம்பர் 25 முதல் மார்ச் 17 வரை நிகழும். நார்வே, பின்லாந்து, ஸ்வீடன் போன்ற பகுதிகளில் துருவ இரவு நிகழும் போது ஆர்க்டிக் துருவ இரவு விடுமுறை அளிக்கப்பட்டு, பல வகையான திருவிழாக்கள் ஏற்பாடு செய்கின்றனர்.
துருவ இரவு
துருவ இரவு என்பது இருபது மணிநேரத்திற்கு மேல் இருள் நிலவுவதாகும். கோள வடிவில் இருக்கும் பூமியின் மேல் பகுதிக்கும் கீழ் பகுதிக்கும் இடையில் உள்ள கற்பனைகோடான பூமத்திய ரோகையை சுற்றி உள்ள பகுதிகளில் அதிக அளவு சூரிய ஒளியைப் பெறுகிறது. ஆர்க்டிக் மற்றும் அண்டார்டிக்கா எதிர் துருவத்தில் இருப்பதனால் ஆர்க்டிக் பகல் நிகழும் போது அண்டார்டிக்காவில் இரவு நிகழ்கிறது. இந்த தனித்துவமான காலநிலை வட துருவத்திலும், தென் துருவத்திலும் பூமியின் சுழற்சியால் காணும் ஒரு அபூர்வமான இயற்கை நிகழ்வாக காணலாம். இந்திய அரசின் சார்பில் துருவங்கள் மற்றும் கடல்கள் ஆராய்ச்சி தேசிய மையம் ( https://ncpor.res.in/ ) செயல்பட்டு வருகிறது.
தகவல் தொகுப்பு: எம், ஜனனி – நுகர்வோர் பூங்கா மற்றும் பூங்கா இதழ் – பயிற்சி கட்டுரையாளர்/ நாமக்கல் அரசு சட்டக் கல்லூரி மாணவி
https://theconsumerpark.com/jobs-marketing-offier-advertisement-agents-consumer-park-news-park